Vijay vs Sivakarthikeyan: ‘இனி நீதான் தளபதி’..பட்டாபிஷேகம் நடத்திய விஜய்..பாகுபலியாக மாறிய சிவா! - விஜய் ஏன் செய்தார்?
Vijay vs Sivakarthikeyan: “சிவகார்த்திகேயனுக்கு திரைத்துறையில் ஒரு இடம் அவசியமாக தேவைப்படுகிறது. அப்படிப்பட்ட இடத்தை அவர் அடைவதற்கு நாம் எந்த விதத்தில் உதவ வேண்டும் என்று விஜய் யோசித்ததின் பிரதிபலன் தான் ‘கோட்’ படத்தில்” - சிவாவை தளபதியாக்கிய விஜய்

கோட் திரைப்படத்தில் விஜய் தன்னுடைய இடத்தை சிவகார்த்திகேயனுக்கு விட்டுத்தருவது போன்ற காட்சி ஒன்று வருகிறது. அந்தகாட்சியில், விஜய் நடித்தது ஏன் என்பது குறித்து வலைப்பேச்சு அந்தணன் தன்னுடைய யூடியூப் சேனலில் பேசி இருக்கிறார்.
மிகப்பெரிய போராட்டம்
இது குறித்து அவர் பேசும் போது, “சிவகார்த்திகேயன் மிகப்பெரிய போராட்டத்திற்குப் பிறகு, மிகப்பெரிய தள்ளு முள்ளுக்குப் பிறகு தான் இந்த இடத்தை பிடித்திருக்கிறார். ஆனால், அந்த இடத்தை தக்க வைப்பது கடினமான ஒன்று. அதை அவர் ஒவ்வொரு படத்தின் போதும் மிகவும் போராடிதான் தக்க வைத்துக் கொண்டிருக்கிறார். மிகப்பெரிய பிரபலங்களின் வாரிசுகள், தங்கள் படத்தின் ரிலீஸின் போது ஏதும் பிரச்சினை வந்தால் செல்லை ஸ்விட்ச் ஆப் செய்து விட்டு குப்புற படுத்து தூங்கிவிடுவார்கள். ஆனால் சிவகார்த்திகேயன் அப்படி கிடையாது. தன்னுடைய படத்திற்கு பிரச்சினை வந்துவிட்டது என்றால் அது நடு ராத்திரி ஆனாலும் கூடவே நின்று அந்த பிரச்சினை தீரும் வரை போராடுவார். அதற்காக அவர் கடன் பத்திரத்தில் கையெழுத்து போட கூட தயங்க மாட்டார்.