Vairamuthu : தளபதி மகனே வருக! அமைச்சர் உதயநிதிக்கு வைரமுத்து வாழ்த்து!
இன்று அமைச்சராக பதவியேற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு கவிஞர் வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை : திமுகவின் 35ஆவது அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றுக்கொண்டார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை தர்பார் ஹாலில் நடந்த பதவியேற்பு விழாவில், சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி, விளையாட்டு மற்றும் இளைஞர் மேம்பாட்டு துறை, சிறப்புத்திட்டம் மற்றும் அமலாக்கத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார். ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமானம் செய்து வைத்தார்.
இந்த பதவியேற்பு விழாவில் கூட்டணி கட்சி தலைவர்கள் மற்றும் எதிர்கட்சி தலைவர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சி சார்பில் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பங்கேற்றார். முதல்வர் ஸ்டாலின், அவரது மனைவி துர்கா ஸ்டாலின், உதயநிதி மனைவி கீர்த்திகா உள்ளிட்டோர் அவரது பதவியேற்பு விழாவில் பங்கேற்றனர்.
இந்நிலையில் இன்று அமைச்சராக பதவியேற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் கவிஞர் வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அப்பதிவில்,
”உள்ளங்கவர் உதயநிதி!
கலைஞர் குடும்பம்
உங்களுக்குத் தந்தது
அறிமுகம் மட்டும்தான்
இன்னொரு முகம் இருக்கிறது;
அறிவு முகம்;
செயலால் மட்டுமே அடைவது
உங்கள் செயலால்
வாரிசு என்ற
வசை கழியுங்கள்
தளபதி மகனே வருக
தமிழர்க்கு மேன்மை தருக
அமைச்சர் உதயநிதிக்கு
வாழ்த்துக்கள்” என பதிவிட்டுள்ளார்.
டாபிக்ஸ்