Rip Bhavatharini: தெய்வ குழந்தை.. இதயம் நொறுங்கி போனது.. பாடகி பவதாரிணி மறைவால் உடைந்த குரலில் பேசிய வடிவேலு !
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Rip Bhavatharini: தெய்வ குழந்தை.. இதயம் நொறுங்கி போனது.. பாடகி பவதாரிணி மறைவால் உடைந்த குரலில் பேசிய வடிவேலு !

Rip Bhavatharini: தெய்வ குழந்தை.. இதயம் நொறுங்கி போனது.. பாடகி பவதாரிணி மறைவால் உடைந்த குரலில் பேசிய வடிவேலு !

Aarthi Balaji HT Tamil
Jan 26, 2024 01:17 PM IST

பவதாரிணி மறைவு பற்றி வடிவேலு மிகவும் உருக்கமாக பேசி உள்ளார்.

வடிவேலு × பவதாரிணி
வடிவேலு × பவதாரிணி

அவர் புற்று நோய் காரணமாக சிகிச்சை எடுத்து வந்த நிலையில், ஆயுர்வேத சிகிச்சைக்காக சமீபத்தில் இலங்கை சென்று உள்ளார். ஆயுர்வேத சிகிச்சை பலனளிக்காத நிலையில் இலங்கையில் காலமானார்.

5 மாதங்களாக உடல் நல பிரச்சனையில் இருந்தவர் இலங்கையில் சிகிச்சை மேற்கொண்டார். அப்படி இருந்த நிலையில் திடீரென சிகிச்சை பலனின்றி நேற்று மாலை 5.20 மணிக்கு மரணம் அடைந்தார் . இன்று மாலை அவர் உடல் சென்னை வருகிறது.

பவதாரணிக்கு தற்போது 47 வயதாகிறது. சுமார் 30க்கும் மேற்பட்ட படங்களில் பல பாடல்களை பாடி பிரபலமானவர். இவரின் மரணம் ஒட்டுமொத்த திரையுலகியும் அதிர்ச்சியில் உறைய வைத்து உள்ளது.

பவதாரணி மறைவு குறித்து நகைச்சுவை நடிகர் வடிவேலு உருக்கமாக பேசி உள்ளார். அதில், “அருமை அண்ணன் இசைஞானி அவருடைய தங்க மகள், செல்லப்பிள்ளை பவதாரிணி காலமானார் என்ற செய்தியை கேட்டதும் எனக்கும் என் குடும்பத்தாருக்கும் ஒன்றும் புரியவில்லை. தெய்வக் குழந்தை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறந்தது என கேட்டு என் இதயம் நொறுங்கியது. சாதாரண குழந்தை இல்லை பவாதாரிணி. குயிலோடு குரல் அவரது. அது ஒரு தெய்வக் குழந்தை.

கள்ள கபடம் இல்லாத பிள்ளை தீடீரென மறைந்தது உலக தமிழர்கள் அனைவரும் நொறுங்கியிருப்பாங்க. அண்ணன் இளையராஜா மற்றும் அவரது குடும்பங்களால் தாங்கிக் கொள்ள முடியாது. இதையாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆச்சிரியம் என்னவென்றால் தைப்பூச தினத்தில் பவதாரிணி மறைந்துள்ளார்.

பவதாரிணி ஆன்மா முருகனின் பாதங்களை சரணடையட்டும். தங்க மகள் பவாதாரிணி ஆன்மா சாந்தியடையட்டும். பவாதாரிணியை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு எனது இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.

இதயம் நொறுங்கி சொல்கிறேன். பவாதாரிணி அம்மா ஆன்மா சாந்தியடையட்டும். ரொம்ப கஷ்டமாக இருக்கு. இறைவனிடம் காலடிக்கு அவர் ஆன்மா சென்று சேரட்டும்" என்று கண்ணீர் ததும்ப வடிவேலு பேசி உள்ளார்.

சொத்து மதிப்பு

இந்நிலையில் பவதாரிணி மறைந்த நிலையில் அவரின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது. மார் 30க்கும் மேற்பட்ட படங்களில் பின்னணி பாடகியாக பல பாடல்களை பாடி இருக்கிறார். பாரதி படத்தில் இவர் பாடிய பாடலுக்கு தேசிய விருதும் கிடைத்தது. தற்போது பாவதாரிணியின் சொத்து மதிப்பு 300 முதல் 350 கோடி ரூபாய் வரை சொத்துக்கள் இருக்கலாம் என கூறப்படுகிறது.

சிறு வயதிலேயே பின்னணி பாடகியாக மாறிய பவதாரிணி பாடல் பாடுவது மட்டுமில்லாமல், சுமார் 10 க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து இருக்கிறார்.

திருமண வாழ்க்கை

பவதாரிணி கடந்த 2005 ஆம் ஆண்டு சபரி ராஜன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். சபரி ராஜன் ஹோட்டல் பிஸ்னஸ் செய்து வருகிறார். இவர்களுக்கு குழந்தை இல்லை. இவர் தனது சொத்துக்களை மனைவி பவதாரிணி மீது தான் வாங்கி உள்ளார். மேலும் பாவதாரிணியும் பாடகராகவும், இசையமைப்பாளராகவும் சம்பாத்தித்து வந்து இருந்தார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.