Vadivelu: "அவன் ஊர்ல பிரச்னைனா வேட்டிய கட்டிட்டு முதல் ஆள போகனும்" - மாரிசெல்வராஜுக்கு ஆதரவாக பேசிய வடிவேலு
"உள்ளூர் காரன் அவனுக்கு தான் மேடு, பள்ளம் எதுன்னு தெரியும், எந்த குழியில் எவன் கத்துறான்னு தெரியும். அவதான் வேட்டிய மடிச்சுகிட்டு போகனும்" என இயக்குநர் மாரிசெல்வராஜுக்கு ஆதரவாக பேசியுள்ளார் நடிகர் வடிவேலு
தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி பகுதிகளில் கடந்த சில நாள்களுக்கு முன்னர் பெய்த அதி கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
மழையால் பெருமளவில் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சினிமா இயக்குநர் மாரி செல்வராஜ் தன்னார்வலர்களுடன் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டார்.
அரசு மீட்பு பணிகளை ஏதாவது வழியில் துரிதமாக மேற்கொள்ள வேண்டும் எனவும், வெள்ளம் காரணமாக தொடர்பு கொள்ளகூட முடியாத நிலையில் இருக்கும் மக்களை காப்பாற்ற வேண்டும் எனவும் டுவிட்டரில் கோரிக்கை விடுத்திருந்தார்.
இதையடுத்து வெள்ள மீட்பு பணிகளில் ஈடுபட்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உடன் இயக்குநர் மாரி செல்வராஜ் இருக்கும் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் பேசு பொருள் ஆனது. மாரி செல்வராஜையும், உதயநிதி ஸ்டாலினையும் விமர்சித்து பதிவுகளை பகிர்ந்தனர்.
இதைத்தொடர்ந்து மாரி செல்வராஜுக்கு ஆதரவாக காமெடி நடிகர் வடிவேலு பேசியுள்ளார்.
இதுதொடர்பாக வடிவேலு பேசியதாவது: "ஒருத்தன் சொல்றான், டைரக்டர் ஏன் அங்க போறான்னு. அவருக்கு என்ன சம்மந்தம்னு. அது அவன் ஊருய்யா. அங்க பள்ளம், மேடு, வழி எல்லாம் எங்க இருக்குன்னு அவனுக்குதான தெரியும். பாவம் போகக்கூடாதா? அவர் ஊருல வெள்ளம்னா அவருதான் வேட்டியை கட்டிட்டு போகனும்.
ஏன் ஊருன்னா நான் போகாம வேறு யாரு போவா? எந்த குழிக்குள்ள கிடந்து கத்துறான்னு அவனுக்கான தெரியும்" என்று தனது ஸ்டைலில் கேஷுவலாக பேசினார்.
மழை காரணமாக தாமிரபரணி ஆறு நிரம்பி கரைபுரண்டு ஓடியது. வரலாறு காணாத மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. மேற்கூறிய மாவட்டங்களில் பல்வேறு பகுதிகள் வெள்ள நீரால் சூழ்ந்த நிலையில் தொடர்புகள் ஏதும் இல்லாமல் துண்டிக்கப்பட்டன.
குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் மழை நின்ற பின்னரும் பல்வேறு பகுதியில் வெள்ள நீர் வடியாத நிலையில், பொதுமக்கள் உணவு போன்ற அடிப்படை தேவை இல்லாமல் தவித்து வந்தனர். மழை பாதிப்பின் போது தனது சொந்த ஊரில் தங்கியிருந்த இயக்குநர் மாரி செல்வராஜ் வெள்ள பாதிப்புள்ள பகுதிகளில் மீட்பு பணிகளில் ஈடுபட்டார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்