urfi Javed: டீ பேக்கை ஆடையாக அணிந்த உர்ஃபி ஜாவேத்
டீ பேக்கை உடையாக அணிந்த நடிகை உர்ஃபி ஜாவேத்தை ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.
பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை உர்ஃபி ஜாவேத். இவர் அரைகுறை ஆடையில் எடுக்கும் ஆபாச புகைப்படங்களை அடிக்கடி தனது சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு சர்ச்சையில் சிக்குவதை வழக்கம் வைத்து உள்ளார்.
சமீபத்தில் கூட துபாயில் கவர்ச்சி உடையில் வீடியோ எடுக்கப்பட்டதால் காவல் துறையினரிடம் வசமாக சிக்கியதாக தகவல் வெளியானது. வித்தியாசமான ஆடைகளை அணிந்து பிரபலமாகிறார்.
இந்நிலையில் உர்ஃபியின் லேட்டஸ்ட் டிரஸ்ஸை பார்த்து நெட்டிசன்கள் ஆச்சரியமடைந்து உள்ளனர். அவர் அணிந்திருக்கும் ஆடையின் சிறப்பு என்ன என்று பலரும் கேட்கலாம்.
அந்த ஆடை தேநீர் பைகளால் செய்யப்பட்டது. டீ பேக் உடை அணிந்து புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்தார். இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
முதலில், தேநீர் பைகளால் தைக்கப்பட்ட ஆடை மீது தேநீர் ஊற்றப்படுகிறது. அதன் பிறகு அவள் அதை ஒரு ஆடையாக அணிந்தாள். வீடியோவைப் பகிர்ந்த அவர், 'வணக்கம் நண்பர்களே, டீ குடிங்க' என்று தலைப்பிட்டுள்ளார். அவரது வித்தியாசமான உடையை பார்த்த சிலர் ட்ரோல் செய்தனர்.
உர்ஃபி ஜாவேத் அக்டோபர் 15, 1997 அன்று லக்னோவில் பிறந்தார். அவருக்கு அஸ்பி ஜாவேத் என்ற சகோதரி உள்ளார். லக்னோவில் உள்ள அமிட்டி பல்கலைக்கழகத்தில் வெகுஜன தொடர்பியல் துறையில் பட்டம் பெற்றார். உர்ஃபி ஜாவேத் விதவிதமான ஆடைகளுடன் மிகவும் பிரபலமானார். அவர் அணியும் வித்தியாசமான ஆடைகள் சமூக வலைதளங்களில் ட்ரோல் செய்யப்படுகின்றன.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
டாபிக்ஸ்