Urfi Javed: ‘என் ஆடையால் வீடு தருவது இல்லை’ - உர்ஃபி ஜாவேத்
நடிகை உர்ஃபி ஜாவேத் தன் ஆடைகளை காரணம் காட்டி மும்பையில் வீடு தருவது இல்லை என குற்றம் சாட்டியுள்ளார்.
பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை உர்ஃபி ஜாவேத். இவர் அரைகுறை ஆடையில் எடுக்கும் ஆபாச புகைப்படங்களை அடிக்கடி தனது சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு சர்ச்சையில் சிக்குவதை வழக்கம் வைத்து உள்ளார்.
சமீபத்தில் கூட துபாயில் கவர்ச்சி உடையில் வீடியோ எடுக்கப்பட்டதால் காவல் துறையினரிடம் வசமாக சிக்கியதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் உர்ஃபி ஜாவேத் மும்பையில் வாடகை வீடு பிரச்னையை எதிர்கொள்கிறார். தனக்கு வீடு யாரும் வாடகைக்கு விடவில்லை என்று சமூக வலைதளத்தில் தெளிவுபடுத்தியுள்ளார்.
தனக்கு வீடு கிடைக்கவில்லை என்று புலம்பிய அவர் முஸ்லீம் வீட்டு உரிமையாளர்கள் தன் உடையைக் காரணம் காட்டி வீடு கொடுக்க தயங்கினார்கள் என்றும் இந்துக்கள் மதம் காரணமாக வீடு வாடகைக்கு தர மறுத்துவிட்டனர் என்றார்.
அவர் கூறுகையில், "முஸ்லீம் வீட்டு உரிமையாளர்கள் எனக்கு வாடகைக்கு வீடு தர தயங்குகிறார்கள். என் உடையை காரணம் காட்டி அவர்கள் வீடு வாடகைக்கு தருவது இல்லை. மறுபுறம் இந்துக்கள் எனது மதத்தால் தயங்குகிறார்கள். சிலர் அரசியல் அச்சுறுத்தல்களால் தயங்குகின்றனர் அடுக்குமாடி குடியிருப்பைக் கண்டுபிடிப்பது மிகவும் கடினம். மும்பையில் வாடகைக்கு வீடு கிடைப்பது இல்லை.
இதுதவிர, எங்களுக்கு வந்துள்ள அரசியல் அச்சுறுத்தல்களால் சிலர் கவலையடைந்து, மும்பையில் வாடகைக்கு வீடு தேடுவது மிகவும் சவாலாக உள்ளது ” என்றார்.
சமீபத்தில், உர்ஃபி ஜாவேத்தின் ஆடை கடுமையாக விமர்சிக்கப்பட்டது. குட்டையான ஆடையில் அழகை வெளிப்படுத்தி வரும் இவரை பலரும் வெளிப்படையாக விமர்சித்து வருகின்றனர். ஊர்ஃபிக்கு எத்தனை விமர்சனங்கள் வந்தாலும் அவர் அதை காதில் வாங்கி கொள்வது இல்லை.
சைக்கிள் செய்ன், கயிறு, கோணிப்பை, மீன்வலை தொடங்கி தன் கையில் கிடைக்கும் எல்ல பொருளையும் அவர் ஆடையாக மாற்றிக் கொள்கிறார். தன் உடை குறித்து பேசிய பிரபல எழுத்தாளர் சேதன் பகத்துக்கு, உர்ஃபி பதிலடி கொடுத்த சம்பவம் இணையத்தில் பேசுபொருளாக மாறி உள்ளது.
கடந்த ஆண்டு, அதிகம் தேடப்பட்ட பட்டியலில், உர்ஃபி 57 வது இடத்தில் இருந்தார்.
டாபிக்ஸ்