Thanga Meenkal: 'இந்த மண்ணில் இதுபோல் யாருமிங்கே.. எங்கும் வாழவில்லை என்று தோன்றுதடி' மறக்க முடியாத தங்கமீன்கள்!
ஆனந்த யாழை மீட்டுகிறாள் பாடல் வழியாக மறைந்தும் இன்றும் வாழ்கிறார் நா.முத்துக்குமார். இது எல்லாம் சேர்த்து தான் படம் வெளியாகி 10 ஆண்டுகள் கடந்தும் மறக்க முடியுமா என்ற சூழலை உருவாக்கி உள்ளது.
மகள்களை பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும் முத்தம் காமத்தில் சேர்ந்ததில்லை என உரக்கச் சொல்லிய படம் தங்க மீன்கள். படம் வெளியாகி 10 ஆண்டுகள் கடந்த நிலையில் அது குறித்த சில தகவல்களை பார்க்கலாம்.
தங்க மீன்கள் கௌதம் வாசுதேவ் மேனன் தயாரிப்பில் 2013ல் வெளிவந்த திரைப்படம். இதை கற்றது தமிழ் புகழ் ராம் இயக்கி நடித்திருந்தார்.
கல்யாணசுந்தரமாக ராம், செல்லம்மாவாக சாதனா, வடிவாக செல்லி, பார்வதியாக ரோகிணி, எல்வீட்டாவாக பத்மபிரியா, ஸ்டெல்லாவாக லிஸி, பூ ராமு, ரம்யா, சஞ்சனா, ஆதித்யா போன்றோர் நடித்திருந்தனர்.
இசை
இந்த படத்தின் வெற்றிக்கு யுவன்சங்கர் ராஜாவின் மியூசிக் பக்கபலமாக இருந்தது என்றால் மிகையல்ல. விழா ஒன்றில் பேசிய ராம் இந்த படத்தின் ரியல் ஹீரோ யுவன் தான் என்று பேசி இருப்பார். அதேபோல் அரபிந்து சாரா ஒளிப்பதிவில் அசந்தியிருந்தார்.
கதை
எப்போதும் மகள் சந்தோசமாக இருக்க வேண்டும். அதற்காக எதை ஆசைப்பட்டாலும் வாங்கி தர வேண்டும் என்று எண்ணம் கொண்ட அப்பா. ஆனால் அவரது மகளுக்கான கல்விக்கட்டணத்தை செலுத்தவே முடியாத சூழலில் கஷ்டப்படுவார். இதனால் வெளி ஊரில் தங்கி வேலை செய்து வருவார்.
அப்படி தவிக்கும் அப்பாவிடம் மகள் வோடாபோன் நாய் வேண்டும் என்று கேட்பாள். அதை வாங்கி தருவதாக சொல்லி விட்டு அதற்காக போராடும் அப்பாவின் திண்டாட்டமே படம் முழுவதையும் நகர்த்தும். இதற்கு இடையில் பள்ளியில் குழந்தை நன்றாக படிக்காததால் ஏற்படும் சவால்கள். அதனால் அந்த குழந்தையை குடும்பத்திற்கு பிடிக்காமல் போவது போன்ற சூழலை தத்ரூபமாக காட்டியிருப்பார் ராம்.
நாய் குட்டி விலை சுமார் 1000 இல்லை 2000 ஆயிரம் இருக்கும் என நினைத்த ராம் 25000ஆயிரம் என தெரிந்து அதிரந்து போய் விடுவார். இந்நிலையில் அப்பா நாய் குட்டி வாங்கி வர மாட்டார் என நினைத்து குளத்தில் விழுந்து மீனாகி விடலாம் என்று எண்ணி இருப்பாள் மகள் செல்லம்மா. இந்நிலையில் அப்பா மகளை மீட்டாரா என்பதே கதை
ராம், சாதனா இருவரும் படத்தில் போட்டி போட்டு நடித்திருப்பர். படத்தில் அழுது கொண்டிருக்கும் குட்டியிடம் செல்லமா விசாரிக்கும்போது எங்கம்மா திட்டிடா நா நாளை செத்து போக போறேன் என்பாள். அதற்கு செல்லம்மா ஏன் நாளைக்கு செத்து போக போற என கேட்கும்போது எங்கம்மா இன்னைக்கு நைட்டு பூரி சுடுறாங்கல அதுனால என்று சொல்லும். அந்த காட்சி குழந்தைகளின் உலகம் எப்படி அலாதியானது என்பதை பொட்டில் அடித்தாற்போல் காட்டி விடும். மொத்தத்தில் படம் முழுவதும் ஆளுமை செலுத்தி இருப்பாள் செல்லம்மா.
இந்த படத்தில் ஆனந்த யாழை மீட்டுகிறாள் பாடல் வழியாக மறைந்தும் இன்றும் வாழ்கிறார் நா. முத்துக்குமார். இது எல்லாம் சேர்த்து தான் படம் வெளியாகி 10 ஆண்டுகள் கடந்தும் மறக்க முடியுமா என்ற சூழலை உருவாக்கி உள்ளது.
3 விருதுகள்
இத்திரைப்படம் 44வது உலகளாவிய இந்தியத் திரைப்பட விழாவின் பனோரமா பிரிவில் இடம் பெற தேர்வானது.
இந்த படத்திற்கு மத்திய அரசு மூன்று பிரிவுகளில் "தேசிய விருதுகளை" வழங்கியுள்ளது. தங்க மீன்கள் படத்தில் இடம்பெற்ற ‘ஆனந்த யாழை மீட்டுகிறாய்…' பாடலுக்காக, சிறந்த பாடலாசிரியருக்கான விருதுக்கு நா.முத்துக்குமார் தேர்வு செய்யப்பட்டார். மாநில மொழி திரைப்படங்கள் பிரிவில், சிறந்த தமிழ்ப் படமாகவும் தங்க மீன்கள் தேர்வு செய்யப்பட்டது. இதற்கான விருதை அத்திரைப்பட இயக்குநர் ராம் பெறுவார். அந்தத் திரைப்படத்தில் நடித்த சாதனாவுக்கு சிறந்த குழந்தை நட்சத்திரம் விருது அறிவிக்கப்பட்டது.
யுவன் சங்கர் ராஜாவுக்கு விருது
இந்நிலையில் விஜய் அவாட்ஸ் விருது வழங்கும் விழாவில் சிறந்த திரைப்படத்திற்கான விருது இயக்குநர் ராம்க்கு வழங்கப்பட்ட நிலையில் இந்த படத்தின் ரியல் ரியல் ஹீரோ யுவன் சங்கர் ராஜா தான் அவருக்கு வேற எந்த விருதும் எங்களால் வாங்கி தர முடியவில்லை. அதனால் இந்த விருது அவர் வீட்டிற்கு தான் செல்ல வேண்டும் என்று மேடையிலேயே கூறிய ராம் அதை யுவன் சங்கர் ராஜாவிடம் அந்த விருதை கொடுத்து அனுப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்