Oru kal Oru kannadi: உதயநிதியின் முதல் படம் ஒரு கல் ஒரு கண்ணாடி.. சந்தானம் காமெடி.. சரண்யாவின் நடிப்பு பிரமாதம்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Oru Kal Oru Kannadi: உதயநிதியின் முதல் படம் ஒரு கல் ஒரு கண்ணாடி.. சந்தானம் காமெடி.. சரண்யாவின் நடிப்பு பிரமாதம்!

Oru kal Oru kannadi: உதயநிதியின் முதல் படம் ஒரு கல் ஒரு கண்ணாடி.. சந்தானம் காமெடி.. சரண்யாவின் நடிப்பு பிரமாதம்!

Pandeeswari Gurusamy HT Tamil
Apr 13, 2024 06:05 AM IST

Oru kal Oru kannadi: ஒரு கல் ஒரு கண்ணாடி.. இயக்குனர் ராஜேஷ் தனது முந்தைய படமான சிவா மனசுல சக்தி என்ற படத்தில் வரும் பாடலின் வரிகளை இந்த படத்தின் தலைப்பாக சூட்டிய போதிலும் ரசிகர்கள் மத்தியில் ஓக்கே.. ஓக்ஓகே.. என்று பிரபலமாகி விட்டது.

உதயநிதியின் முதல் படம் ஒரு கல் ஒரு கண்ணாடி.. சந்தானம் காமெடி.. சரண்யாவின் நடிப்பு பிரமாதம்!
உதயநிதியின் முதல் படம் ஒரு கல் ஒரு கண்ணாடி.. சந்தானம் காமெடி.. சரண்யாவின் நடிப்பு பிரமாதம்!

நடிகர் உதயநிதி அவர்களுக்கு நல்ல அறிமுகமாக அமைந்த வெற்றி படம். உதயநிதி சரவணனாகவும் சக நண்பர் பார்த்தா எனும் பார்த்த சாரதியாக சந்தானம் மீராவாக ஹன்சிகாவும் நடித்திருந்தனர் இதில் ஹீரோ சரவணனின் பெற்றோர் வரதராஜன் மற்றும் செண்பகமாக அழகம்பெருமாளும் நடிகை சரண்யாவும் ஜாங்கிரியாக மதுமிதாவும் இவர்களுடன் உமாபத்மநாபன் சுவாமி நாதன் மகாநதி சங்கர் சாயாஜிசின்டே லக்கி. நாராயணன் ஆகியோர் நடித்துள்ளனர். ஆர்யா ஆண்ட்ரியா சினேகா ஆகியோர் கேமியோ தோற்றத்தில் நடித்துள்ளார்கள்.

படத்தின் தயாரிப்பாளரும் உதயநிதி தான். அவர் அறிமுகம் ஆக வசதியாக அடிதடியை நம்பாமல் சராசரி குடும்பத்து பையன் சரவணன் ஆக நல்ல அறிமுக படம். படத்தில் பெரிய பலம் சந்தானம். படம் முழுவதும் பார்த்தா கதாப்பாத்திரத்தில் சந்தானம் செய்யும் லூட்டிகள் வேறு லெவல். சந்தானத்தின் டைமிங் டயலாக் சிரிப்பு வெடிகள். ஜாங்கிரி மதுமிதாவும் தன் பங்கிற்கு அபாரமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். சரவணன் சந்தானம் காம்போ படம் முழுக்க கலகலப்பூட்டுகிறது. உதயநிதிக்கு ஏற்ற ஜோடியாக நண்பர் சந்தானம்.  இருவரும் சேர்ந்து ரோடுகளிலும் ட்ராபிக் சிக்னல்களிலும் ஜொள்ளு விடுவது செம காமெடி. அப்படி ஒரு சிக்னலில் சிக்குபவர்தான் ஹன்சிகா. அவருக்கு பிராக்கெட் போட உதயநிதி விடாமல் விரட்டி விரட்டி போகிறார். அவர் அப்பா காவல்துறை அதிகாரி என்று மிரட்டி பார்த்தும் விடாமல் விரட்டி விரட்டி ஹன்சிகாவை சம்மதிக்க வைக்கிறார்.

உதயநிதி பெற்றோர் அழகம்பெருமாளும் சரண்யாவும் தம்பதிகளாக ஒரு செண்டிமெண்ட் உருவாக்கி விடுகிறார்கள். பேராசிரியருக்கு தனது மனைவி படிக்காதவள் என்று ஏமாற்றம். அதனால் மனைவியிடம் பேசாமல் ஒதுக்கி வைக்கிறார். சரண்யாவும் டிகிரிக்காக படையெடுத்து தோற்கும் காட்சிகளில் கூட கிச்சு கிச்சு மூட்டுகிறார்கள். படத்தில் ஹீரோ ஹீரோயினுக்கு நிகராக சரண்யாவும் தன் பங்கிற்கு கலக்கி இருப்பார். படத்தில் வரும் கதை சிறுசுதான் . விரட்டி விரட்டி காதலை நிராகரித்து விலகினாலும் முடிவில் ஏற்றுக் கொள்கிறார் ஹீரோயின். அதன் பின்னர் கண்டிப்பாக சில விசயங்களை சொல்கிறார் காதலி.. குறிப்பாக உடனிருக்கும் பார்த்தா என்ற சந்தானம் நட்பை முறித்து கொள்ள வேண்டும் என்பது முக்கியமானது. நட்பில் விரிசல்.. காதலில் விரிசல்.. இறுதியில் நட்பு வென்றதா.. காதலர்கள் சேர்ந்தார்களா என்பதையும் பல்வேறு சம்பவங்கள் மூலமாக காட்டி இருப்பது படத்தில் சுவாரஸ்யமான பயணம்.

படத்தில் இன்னொரு பெரிய பலம். வாய்த்த எல்லாம் ஹிட் பாடல்கள். ஹாரிஸ் ஜெயராஜ் அவர்கள் தான் இசையமைப்பாளர்.

"வேனாம் மச்சான் வேனாம் இந்த பொண்ணுங்க காதலு" இளைஞர்கள் தியேட்டர்களில் ஆர்ப்பரித்து ஆடிய பாடல்..

"காதல் ஒரு பட்டர் பிளை போல் வரும்" அந்த வகையில் 

"அழகே...அழகே அழகின் அழகே நீயடி"

"அகிலா.. அகிலா... என் செடியில்"

"உயிரே..உயிரே.. எங்கோ பறக்க வச்சே"

என்று பாடல்கள் அனைத்தும் அருமை.

அப்படி படம் வெளியாகி 12 ஆண்டுகளை கடந்தும் இப்போது சலிப்பு தட்டாதபடம் என்பது குறிப்பிடத்தக்கது. 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.