Udhayanidhi Stalin: மாரி செல்வராஜ் காட்டில் மழை.. உதயநிதி கொடுத்த இன்ப அதிர்ச்சி
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Udhayanidhi Stalin: மாரி செல்வராஜ் காட்டில் மழை.. உதயநிதி கொடுத்த இன்ப அதிர்ச்சி

Udhayanidhi Stalin: மாரி செல்வராஜ் காட்டில் மழை.. உதயநிதி கொடுத்த இன்ப அதிர்ச்சி

Aarthi V HT Tamil
Jul 02, 2023 10:59 AM IST

மாமன்னன் படம் மாபெரும் வரவேற்பு பெற்ற நிலையைல் இயக்குநர் மாரி செல்வராஜுக்கு, உதயநிதி ஆடம்பர காரை பரிசாக வழங்கி உள்ளார்.

உதயநிதி கொடுத்த இன்ப அதிர்ச்சி
உதயநிதி கொடுத்த இன்ப அதிர்ச்சி

அந்த வகையில் மாமன்னன் படம் திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வரவேற்பு பெற்று சக்கப்போடு போட்டு வரும் நிலையில் மாரி செல்வராஜுக்கு, உதயநிதி சூப்பரான பரிசு ஒன்றை வழங்கி உள்ளார். அதாவதது மாரி செல்வராஜுக்கு ஆடம்பர கார் ஒன்றை பரிசாக வழங்கி இருக்கிறார்.

இது தொடர்பாக உதயநிதி வெளியிட்டு இருக்கும் பதிவில், “ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக விவாதிக்கிறார்கள். தங்களுடைய எண்ணங்களை கதையுடனும் களத்துடனும் தொடர்புபடுத்தி கருத்துகளை பகிர்கிறார்கள். உலகத் தமிழர்களிடையே விவாதத்துக்குரிய கருப்பொருளாக மாறி இருக்கிறது. 

அம்பேத்கர், பெரியார், அண்ணா, கலைஞர் போன்ற நம் தலைவர்கள் ஊட்டிய சுயமரியாதை உணர்வை, சமூகநீதி சிந்தனைகளை இளம் தலைமுறையினரிடம் விதைத்துள்ளது. வணிகரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி. ரெட் ஜெயண்ட் நிறுவனட் நிறுவனம் மாரி செல்வராஜுக்கு மினி கூப்பர் கார் வழங்கி மகிழ்ந்தது. உலகம் முழுவதும் பறக்க ‘மாமன்னன்’-க்கு றெக்கை அளித்த என் மாரி செல்வராஜுக்கு நன்றி “ எனக் குறிப்பிட்டு உள்ளார். கார் பரிசளித்த புகைப்படத்தை இத்துடன் அவர் வெளியிட்டு இருக்கிறார்.

உதயநிதி ஸ்டாலின் பரிசு கொடுத்த இந்த வாகனத்தின் விலை சுமார் 60 லட்சம் ரூபாய் ஆகும்.

தமிழ் சினிமா ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த திரைப்படம், மாமன்னன். பரியேறும் பெருமாள் மற்றும் கர்ணன் உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கிய இந்தப்படத்தில் நடிகர் வடிவேலு, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படம் ஜூன் 29 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

உதயநிதி ஸ்டாலினின் கேரியர் பெஸ்ட் படம் என்றால் அது மாமன்னன் தான் என்று ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். விமர்சன ரீதியாக மட்டுமில்லாமல் வசூல் ரீதியாகவும் சாதனை படைத்து வருகிறது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.