Bommi Serial: சுவாரஸ்ய திருப்பங்களுடன் இறுதிகட்டத்தை எட்டிய பொம்மி! இரு நாள்களுக்கு 2 மணி நேரம் ஸ்பெஷல் எபிசோடு
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Bommi Serial: சுவாரஸ்ய திருப்பங்களுடன் இறுதிகட்டத்தை எட்டிய பொம்மி! இரு நாள்களுக்கு 2 மணி நேரம் ஸ்பெஷல் எபிசோடு

Bommi Serial: சுவாரஸ்ய திருப்பங்களுடன் இறுதிகட்டத்தை எட்டிய பொம்மி! இரு நாள்களுக்கு 2 மணி நேரம் ஸ்பெஷல் எபிசோடு

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jan 29, 2024 03:51 PM IST

இறுதிகட்டத்தை எட்டியிருக்கும் பொம்மி பிஏபிஎல் சீரியல் பிப்ரவரி 2,3 ஆகிய இரண்டு நாள்களுக்கு 2 மணி நேரமாக ஒளிபரப்பாக உள்ளது.இ

கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பாகும் பொம்மி சீரியல்
கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பாகும் பொம்மி சீரியல்

இதையடுத்து இந்த சீரியல் இறுதிகட்டத்தை எட்டியிருக்கும் நிலையில் வரும் பிப்ரவரி 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் இரவு 7 மணி முதல் 9 மணி வரை 2 மணி நேர எபிசோடுகளாக ஒளிபரப்பாகவுள்ளது.

இதில் சிறுவயதிலேயே திருமண உறவுக்குள் சிக்க இருந்த பொம்மியை, அனிருத் மீட்கிறார். பொம்மியின் வழக்கறிஞர் ஆசையை நிறைவேற்றும் விதமாக அவளை வெளிநாட்டுக்கு அனுப்பி படிக்க வைக்கிறார்.

இதைத்தொடர்ந்து 8 ஆண்டுகள் கழித்து வழக்கறிஞர் என்ற பட்டத்துடன் பொம்மி ஊருக்கு திரும்பும் விதமாக கதையில் ஏராளமான அதிரடி நிகழ்வுகள் நடக்கின்றன. வரும் வாரத்தில் விறுவிறுப்பான காட்சிகளுடன் பொம்மி சீரியலில் இடம்பெறவுள்ளன.

ஆறு மாதங்களுக்கு பிறகு அனிருத் இறந்துவிட்டதாக அனைவரும் கூறுவதை கேட்டு பொம்மி அதிர்ச்சியில் இருக்கிறார். பின்னர் அனிருத்தும் பாண்டுவும் ஒரே மாதிரியாக இருப்பதை அறிந்துகொள்ளும் பொம்மி, அனிருத்துடன் இல்லாமல், பாண்டுவுடன் வாழ்ந்து வருவதை உணர்கிறாள்.

ஒரு பெண், ஒரு ஆண் என இரட்டையர்களை பெற்றெடுக்கிறார் பொம்மி. இதற்கிடையே, உயிருடன் இருக்கும் அனிருத் தனது முகவரியை நினைவில் வைத்து கொண்டு அல்லி நகரத்துக்கு திரும்ப முடிவு செய்கிறான். பாண்டு மருத்துவமனையில் இருந்து இரட்டை குழந்தைகளை கடத்தி இத்தாலிக்கு அழைத்துச் செல்ல முடிவு செய்கிறான்.

பொம்மி, தனது குழந்தைகளைக் காணவில்லை என்பதைக் கண்டு நொறுங்கி, தனது வீட்டை அடைகிறாள். ஆனால் கதவு பாண்டுவால் பூட்டப்பட்டுள்ளதால் உள்ளே செல்ல முடியவில்லை. அவள் பாண்டுவிடம் தன் குழந்தைகளை திருப்பித் தருமாறு கெஞ்சுகிறாள். இருப்பினும், பாண்டு தனது நோக்கத்தை வெளிப்படுத்தி பொம்மியை உயிருடன் எரிக்க முயற்சிக்கிறான். ஆனால் சிறிது நேரத்தில் அனிருத் அங்கு வந்து அவளை காப்பாற்றுகிறான்.

கடந்த ஆறு மாதங்களில் அவன் தன்னுடன் இல்லாதபோது நடந்த அனைத்தையும் அவள் வெளிப்படுத்துகிறாள். ஆத்திரமடைந்த அனிருத் கதவை உடைத்து வீட்டுக்குள் நுழைகிறான். அவனது குடும்ப உறுப்பினர்களுடன் உணர்வுப்பூர்வமாக மீண்டும் இணைந்த பிறகு, அனிருத், பாண்டுவை அடித்து வெளியேற்றுகிறான்.

அனிருத்தும் பொம்மியும் தங்கள் இரட்டைக் குழந்தைகளை துர்கா சிலையின் முன் எடுத்து சென்று, தங்கள் குழந்தைகளும் சமூகத்தின் தீய பழக்கவழக்கங்களை முறியடித்து அவர்களை போல பாரிஸ்டர்களாக மாறுவார்கள் என்று அறிவிக்கும் விதமாக தொடர் வரும் வாரத்தில் மகிழ்ச்சியுடன் நிறைவடைகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.