தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Thalapathy Vijay: ‘சமூக நீதி, சமத்துவம், சம உரிமை’ - அம்பேத்கர் பிறந்தநாளில் விஜய் அதிரடி பதிவு!

Thalapathy Vijay: ‘சமூக நீதி, சமத்துவம், சம உரிமை’ - அம்பேத்கர் பிறந்தநாளில் விஜய் அதிரடி பதிவு!

Kalyani Pandiyan S HT Tamil
Apr 14, 2024 09:28 AM IST

“அவர் வலியுறுத்திய சமூக நிதி, சமத்துவம், சம உரிமை ஆகியவை எல்லோருக்கும் கிடைக்க உறுதி ஏற்போம்.” - விஜய்!

தளபதி விஜய்!
தளபதி விஜய்!

ட்ரெண்டிங் செய்திகள்

இது குறித்து அவர் பதிவிட்டு இருக்கும் பதிவில், “ இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் தந்தை, புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளில், அவர் வலியுறுத்திய சமூக நிதி, சமத்துவம், சம உரிமை ஆகியவை எல்லோருக்கும் கிடைக்க உறுதி ஏற்போம்.” என்று குறிப்பிட்டு இருக்கிறார். 

இயக்குநர் வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’. இந்தப்படத்தின் போஸ்டர்கள் புத்தாண்டு மற்றும் பொங்கல் தின ஸ்பெஷலாக வெளியிடப்பட்டது.

அதன் மூலம், நடிகர் விஜய் படத்தில் இரட்டை வேடங்களில் நடிக்கிறார் என்பது உறுதியானது. புதியகீதைக்கு பின்னதாக, கிட்டதட்ட 20 வருடங்களுக்கு பிறகு விஜயின் இந்தத்திரைப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இந்தப்படம் குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசிய யுவன், “ தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படம் அப்டேட்டை நான் சொல்ல மாட்டேன். இந்த முறை நான் தெளிவாக இருக்கிறேன். பேச்சு இல்ல.... வீச்சுதான். நான் மிகவும் ஆவலாக இருக்கிறேன். படத்தின் அனைத்து வேலைகளும் நன்றாக நடைபெற்று கொண்டிருக்கிறது” என்று பேசினார்.

இந்தப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, கேரளா, பாண்டிச்சேரி, தாய்லாந்து, கேரளா உள்ளிட்ட பல இடங்களில் நடந்தது. தற்போது படக்குழு அடுத்தக்கட்ட படப்பிடிப்பிற்காக ரஷ்யா சென்று இருக்கிறது. இது தொடர்பான புகைப்படங்களை தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி பகிர்ந்து இருந்தார். இந்தப்படம் வருகிற செப்டம்பர் 5ம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அண்மையில் அறிவிக்கப்பட்டது. இன்றைய தினம் இந்தப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாக இருக்கிறது.

முன்னதாக, கிட்டத்தட்ட 9 வருடங்களுக்கு பிறகு விஜய் கேரளா வருவதையறிந்த கேரள விஜய் ரசிகர்கள் அவரை பார்ப்பதற்காக திருவனந்தபுரம் விமானநிலையத்தில் முண்டியடித்தனர்.

விஜய் மீது கொண்ட அன்பை அவர்கள் ஆர்ப்பரித்து வெளிப்படுத்தியதை பார்த்த விஜய் நெகிழ்ந்தார். தொடர்ந்து அளவுக்கு அதிகமாக ரசிகர்கள் கூடிய காரணத்தால், திருவனந்த புரமே ஸ்ம்பித்தது. பின்னர் ஒரு வழியாக விஜய் ஹோட்டலை அடைந்தார். கூட்ட நெரிசலில் அவர் சென்ற கார் சேதம் அடைந்தது.

விஜய் கேரளாவில் இருப்பதை அறிந்த ரசிகர்கள் தினமும் அவரைப்பார்ப்பதற்காக கூடினர். விஜயும் அவர்களை சந்தித்து வழக்கம் போல் எடுக்கும் செல்ஃபி வீடியோவை எடுத்தார்.

ரசிகர்களுக்காக அங்கிருந்த வாகனத்தில் ஏறிய விஜய் அவர்களிடத்தில் மலையாளத்தில் பேசினார். அப்போது அவர், “ சேச்சி, சேட்டனார்... உங்களை காணுனதில் ஒரு பாடு சந்தோஷம்”. ஓணம் பண்டிகையின் போது நீங்கள் எவ்வளவு சந்தோஷமாக இருப்பீர்களோ.. அந்த அளவிற்கு நான் உங்கள் முகத்தை பார்த்த காரணத்தால் சந்தோஷமாக இருக்கிறேன். எல்லோருக்கும் கோடானுகோடி நன்றிகள்.

தமிழ்நாட்டில் இருக்கும் என்னுடைய நண்பா, நண்பிகள் போல நீங்களும் வேற லெவல்ங்க; உங்கள் அன்பிற்கு நன்றிகள்” என்றார். 

நட்சத்திர பட்டாளம்:

இந்தப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி செளத்ரி நடிக்க கமிட் ஆகி இருக்கிறார். மேலும் துணை கதாபாத்திரங்களில் நடிகர்கள் பிரபுதேவா, பிரசாந்த், சினேகா, அஜ்மல் உள்ளிட்ட பல நடிகர்கள் நடிக்கின்றனர். இந்தப்படத்திற்கு கேப்டன் மில்லர் படத்தில் பணியாற்றிய கேமராமேன் சித்தார்த் நுனி கேமராமேனாக பணியாற்றுகிறார்.

இந்தப்படத்தின் பணிகள் ஒரு புறம் நடந்து கொண்டிருந்தாலும், தன்னுடைய புதிய கட்சியான தமிழக வெற்றிக்கழகம் கட்சி சார்ந்த வேலைகளில் ஒரு கண் வைத்திருக்கிறார் விஜய். அவர் சார்பாக புஸ்ஸி ஆனந்த் அனைத்து வேலைகளையும் செய்து வருகிறார். 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

IPL_Entry_Point

டாபிக்ஸ்