T.Rajendar: ‘விஷால் பத்தி இப்போ தான் எனக்கு தெரியுது’ போட்டு உடைத்த டி.ராஜேந்தர்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  T.rajendar: ‘விஷால் பத்தி இப்போ தான் எனக்கு தெரியுது’ போட்டு உடைத்த டி.ராஜேந்தர்!

T.Rajendar: ‘விஷால் பத்தி இப்போ தான் எனக்கு தெரியுது’ போட்டு உடைத்த டி.ராஜேந்தர்!

Stalin Navaneethakrishnan HT Tamil
Sep 04, 2023 12:45 PM IST

Mark Antony: இந்த படத்தில் நான் பாடினேன் என்பதற்காக நான் சொல்லவில்லை, இந்த சினிமா நன்றாக இருக்க வேண்டும்.

விஷால் குறித்து பேசிய டி.ராஜேந்தர்
விஷால் குறித்து பேசிய டி.ராஜேந்தர்

‘‘இளைய தளபதி விஜய் நடித்த குஷி படத்தில் இருந்து ஆரம்பித்து, எஸ்.ஜே.சூர்யாவின் எந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவாக இருந்தாலும் சரி, எவ்வளவு பெரிய இசையமைப்பாளராக இருந்தாலும் சரி, இந்த சாதாரண கலைஞனை, இந்த சாதாரண நபரான என்னை அழைத்து மேடை ஏற்றுவார் எஸ்.ஜே.சூர்யா.

நான் ஆடியோ வெளியீட்டு விழாவிற்கும் போவதில்லை. இந்த நிகழ்ச்சிக்கும் நான் வருவதாக இல்லை. ஆனால், வர வேண்டுமா, வேண்டாமா? என்று யோசித்து பார்த்தேன். சொக்கலிங்கம் சார், என் மனைவியிடம் பலமுறை வலியுறுத்தினார். 

நான் திரும்ப திரும்ப கேட்டேன், ‘விஷால் கூப்பிட்டாரா?’ என்று, ஆமாம் என்றார்கள். ஒரு படத்தின் வெற்றி ‘வி’ யில் தான் இருக்கு. இந்த படத்தின் வெற்றிக்கு இரண்டு ‘வி’ உள்ளது. ஒன்று தயாரிப்பாளர் வினோத்குமார், மற்றொருவர் நடிகர் விஷால். டபுள் ஓகே.

நான் படத்தில் பாடல் தான் அதிருதா என்று பார்த்தால், நானே அலறும் அளவிற்கு ஏவி போட்டுவிட்டார்கள். ஒரு தலை காதலில் இருந்து இன்று வரை நான் பாடல் எழுதிய படத்திற்கு கூட போகவில்லை. சொக்கலிங்கம் சொன்ன வார்த்தை என்னை தொட்டுவிட்டது. இந்த இடம் என்னை அழைத்து வந்துவிட்டது. 

பொட்டி பொட்டியாக நான் சம்பாதிக்க காரணம், இந்த இடத்திற்கு சொந்தக்காரரான மறைந்த நாகி ரெட்டி தந்தது. விஷால் என் மீது வைத்திருக்கும் மரியாதை , பாசம் தனி. செப்டம்பர் 15 இந்த படம் வெளியாகும் போது, தமிழ்நாடு அதிரும். 

110 குரலில் நான் பேசுவேன், சமீபத்தில் எனக்கு பிடித்த வாய்ஸ் எஸ்.ஜே.சூர்யாவின் உடையது. நல்ல ரிதம் இருந்தால், ஜி.வி.பிரகாஷ் என்னை பாட அழைத்து விடுவார். விஜய் நடித்த தெறி, ஜி.வி.,க்கு இசை மீது வெறி. 

இந்த படத்தில் நான் பாடினேன் என்பதற்காக நான் சொல்லவில்லை, இந்த சினிமா நன்றாக இருக்க வேண்டும். ஒரு விஷால் படம் ஓடினால், சுவர் இருந்தால் தான் சித்திரம். ஒரு ஹீரோ படம் ஓடினால் தான் பல கலைஞர்கள் வாழ்வார்கள். 

எனக்கு மார்க் ஆண்டனி ரொம்ப பிடிக்கும். ஜீலியர் சீசர் மறைக்குப் பின், அந்த அரங்கத்தில் அவர்களின் உடலை வைத்து பேசினானே மார்க் ஆண்டனி.. அந்த பேச்சு தான் பேச்சு. விஷாலின் திமிர் எனக்கு பிடிக்கும், அவருடைய திமிரு படம் எனக்கு பிடிக்கும். சிம்புக்கு நான் பாடுவது வேறு விசயம். விஷாலுக்கு நான் பாட வருகிறேன் என்றால், அது வேறு விசயம். எல்லாருக்கும் என்னால் பாட முடியாது. ஆனால் இப்போது தான் விஷாலும் என்னை குழந்தை போல பார்த்துக் கொள்கிறார் என்பது தெரியவந்தது,’’
என்று அந்த நிகழ்ச்சியில் டி.ஆர்., பேசினார். 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

Google News: https://bit.ly/3onGqm9

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.