தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  55 Years Of Shanti Nilayam: ஜெமினியின் வெற்றிப்படம்.. நாவலால் உருவான சாந்தி நிலையம்.. எஸ்பிபி குரல் ஒலித்த படம்

55 Years of Shanti Nilayam: ஜெமினியின் வெற்றிப்படம்.. நாவலால் உருவான சாந்தி நிலையம்.. எஸ்பிபி குரல் ஒலித்த படம்

Suriyakumar Jayabalan HT Tamil
May 23, 2024 07:32 AM IST

55 Years of Shanti Nilayam: சாந்தி நிலையம் பல திரையரங்குகளில் 100 நாட்களை கடந்து மிகப்பெரிய வெற்றி பெற்றது. தமிழ் சினிமாவின் பொக்கிஷங்களில் ஒன்றாக திகழும் ‘சாந்தி நிலையம்’ 1969-ஆம் ஆண்டு இதே மே 23 அன்று ரிலீஸானது. இந்தப் படம் வெளியாகி இன்றோடு 55 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறது.

ஜெமினியின் வெற்றிப்படம்.. நாவலால் உருவான சாந்தி நிலையம்.. எஸ்பிபி குரல் ஒலித்த படம்
ஜெமினியின் வெற்றிப்படம்.. நாவலால் உருவான சாந்தி நிலையம்.. எஸ்பிபி குரல் ஒலித்த படம்

ட்ரெண்டிங் செய்திகள்

பெரும்பாலான காட்சிகள் நாயகி காஞ்சனாவை சுற்றியே வரும். படத்தில் ஜெமினி கணேசன் வாழ்ந்து வரும் பிரமாண்ட வீட்டின் பெயர் 'சாந்தி நிலையம்'. படத்தில் பாடல்களை தவிர அதிகமான காட்சிகள் இந்த வீட்டைச் சுற்றியவை என்பதால் 'சாந்தி நிலையம்' என்றே படத்துக்கு பெயர் வைக்கப்பட்டது. குழந்தைகள், பாடல்களுக்கு முக்கியத்துவம் தந்து எடுக்கப்பட்டது.

'சாந்தி நிலையம்' பிரபல ஆங்கில பெண் நாவலாசிரியர் சார்லெட் ப்ராண்ட் எழுதிய ஜெனி எரி (Jane Eyr) என்ற நாவலை தழுவி எடுக்கப்பட்டதாகும். இந்த நாவலில் பல பாகங்கள் உண்டு. அதில், ஒரு பாகத்தை மட்டும் தழுவி இயக்குனர் ஜி.எஸ்.மணி திரைப்படமாக்கி இருந்தார். 

முன்னதாக, இந்த நாவலையும், தி சவுண்ட் ஆஃப் மியூஸிக் திரைப்படத்தையும் உள்வாங்கி 1968-ல் கன்னடத்தில் ‘பேடி பண்டவலு’ என்ற படத்தை எடுத்தனர். கல்யாண் குமாரும், சந்திரகலாவும் நடித்திருந்த அந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதைத்தான் ஜெமினி ஸ்டியோ நிறுவனம் தமிழில் சாந்தி நிலையமாக தயாரித்திருந்தது.

தேசிய விருது

தேசிய விருது பெற்ற ஒளிப்பதிவாளர் மெர்க்கஸ் பார்ட்லி ஒளிப்பதிவு செய்திருந்தார். படத்தில் ஒவ்வொரு காட்சிகளையும் கேமரா மூலம் நம் கண்களுக்கு விருந்தாக படைத்திருப்பார் ஒளிப்பதிவாளர். குறிப்பாக ராட்சச பலூன் காட்சிகள் அப்போதே பரவலாக பேசப்பட்டது.

எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்திருந்த இந்த படத்தில் இடம்பெற்ற 'கடவுள் வருவான், அவன் என்றும் நல்கதி தருவான்', 'பூமியில் இருப்பதும் வானத்தில் பறப்பதும் அவரவர் எண்ணங்களே', 'கடவுள் ஒரு நாள் உலகை காண தனியே வந்தாராம்' போன்ற பாடல்கள் ஹிட்டாகின. இந்தப்படத்தில் இன்னொரு சுவாரஸ்யம், 'இயற்கை எனும் இளைய கன்னி ஏங்குகிறாள் உறவை எண்ணி' என்ற பாடல் அந்தக் காலத்தில் ஜனங்களால் அதிகம் கேட்கப்பட்ட பாடல்களுள் ஒன்றாக அமைந்தது. எஸ்.பி.பாலசுப்பிரமணியம் என்ற பாடகர் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானதும் இந்தப் பாடல் மூலம்தான்.

ஆனால், தமிழ் சினிமாவில் அவர் பாடிய முதல் பாடல் என்று ‘அடிமைப்பெண்’ (1969) என்ற படத்தில் இடம்பெற்ற ‘ஆயிரம் நிலவே வா’ பாடல் என்பார்கள். ஆனால், அதற்கு முன்பே அவர் பாடி ரெக்கார்டிங் ஆனது ‘சாந்தி நிலையம்‘ (1969) படத்தில் இடம்பெற்ற ‘இயற்கை என்னும் இளைய கன்னி’ என்ற பாடல்தான். இருப்பினும் முதலில் வெளியானது ‘அடிமைப்பெண்’ படம்தான் என்பதால் அதையே எஸ்பிபியின் முதல் பாடல் என்று கூறி வருகின்றனர்.

மிகப்பெரிய வெற்றி

இது ஒரு புறம் இருக்க, சாந்தி நிலையம் பல திரையரங்குகளில் 100 நாட்களை கடந்து மிகப்பெரிய வெற்றி பெற்றது. தமிழ் சினிமாவின் பொக்கிஷங்களில் ஒன்றாக திகழும் ‘சாந்தி நிலையம்’ 1969-ஆம் ஆண்டு இதே மே 23 அன்று ரிலீஸானது. இந்தப் படம் வெளியாகி இன்றோடு 55 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறது. 

இன்றும் ரசிக்கக் கூடிய வகையில் படம் இருப்பது இதன் கதை, திரைக்கதை, நடிப்பு, வசனம், இசை, ஒளிப்பதிவு, இயக்கம் என ஒட்டு மொத்த கூட்டு உழைப்புக்கு கிடைத்த வெற்றி என்றே சொல்லாம்.. காலங்கள் கடந்தாலும் தமிழ் சினிமாவின் காவியம் 'சாந்தி நிலையம்' .

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

 

டி20 உலகக் கோப்பை 2024

டாபிக்ஸ்