S.V.Ranga Rao: கல்யாண சமையல் சாதம் கடோத்கஜனை மறக்க முடியுமா? திரையில் கலக்கிய எஸ்.வி. ரங்காராவ் நினைவு தினம்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  S.v.ranga Rao: கல்யாண சமையல் சாதம் கடோத்கஜனை மறக்க முடியுமா? திரையில் கலக்கிய எஸ்.வி. ரங்காராவ் நினைவு தினம்!

S.V.Ranga Rao: கல்யாண சமையல் சாதம் கடோத்கஜனை மறக்க முடியுமா? திரையில் கலக்கிய எஸ்.வி. ரங்காராவ் நினைவு தினம்!

Pandeeswari Gurusamy HT Tamil
Jul 18, 2023 05:15 AM IST

ஒரு வாரத்திற்கு ஆந்திர திரை உலகம் கொண்டாடியது. இதைத்தொடர்ந்து ஏலூரில் 12 அடி உயர வெண்கலச் சிலையும் தும்மலப்பள்ளியில் மார்பளவு வெண்கலச்சிலையும் இவருக்கு அமைக்கப்பட்டது.

எஸ்.வி.ரங்காராவ்
எஸ்.வி.ரங்காராவ்

திரைத்துறையில் தனக்கென்று தனி முத்திரை பதித்தவர் ஆளுமை எஸ்.வி. ரங்காராவ். 1918 ஆம் ஆண்டு ஜூலை 3-ல் ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் உள்ள நூஜ்வீத் என்ற கிராமத்தில் பிறந்தார். இவர் திரையில் கம்பீரமான தோற்றம், பாசத்தை கொட்டும் அப்பா, கணீர் குரல், அஜானுபாகுவான தோற்றம், மிடுக்கான நடை, தெளிவான உச்சரிப்பு என தமிழ் மற்றும் தெலுங்கில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வந்தார் ரங்காராவ்.

பிறப்பு

ஆந்திர பிரதேசத்தின் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள நுஸ்வித் நகரில் 1918ல் ஜூலை 3ந்தேதி பிறந்தார். சென்னை இந்து கல்லூரியில் இளங்கலை அறிவியல் படித்தார். 1949ல் மன தேசம் என்ற தெலுங்கு படத்தில் சிறு வேடத்தில் அறிமுகமானார். 1951ல் பாதாள பைரவி படத்தில் நடித்த பிறகு அவர் திரை உலகில் திரும்பி பார்க்கும் ஆளுமையாக தன்னை வெளிப்படுத்தினார். அதேபோல் அந்த படத்தில் கடோத்கஜனாக அவர் வந்த கல்யாண சமையல் சாதம் காய்கறிகளும் பிரமாதம் பாடல் இன்றும் குழந்தைகளுக்கு சிரிப்பை மூட்டுவதற்கு அவரது வெகுளித்தனமான அசைவுகளும், அசத்தல் நடிப்பு ஒரு காரணம் எனலாம். அதேபோல் தன் வாழ்நாளில் 60 வயதை கூட பார்க்காதவர் தன் 35 வயது முதல் ஏராளமான படங்களில் பாசமிகு அப்பாவாக முதுமை தோற்றத்தில் பரிணமித்திருந்தார்.

கம்சன், துரியோதனன்,பீஷ்மர்,ராவணன் என பல சரித்திர தோற்றங்களில் நடித்தவர். பாசமுள்ள தந்தையை திரையில் வடித்து காட்டுவதில் எஸ்.வி.ரங்காராவ்க்கு இணை யார் என்று கேட்கும் அளவிற்கு தன் நடிப்பை வெளிப்படுத்தினார்.

இவர் கடந்த 1974ம் ஆண்டு ஜூலை 18ம் தேதி உடல் நலக்குறைவால் இந்த உலகை விட்டு மறைந்தார்.

விருதுகள்

இந்நிலையில் நடசாரவ பவும, நடசிம்ஹா, நடசாம்ராட், விஸ்வ நட சக்ரவர்த்தி என தெலுங்கு ரசிகர்கள் இவருக்கு பல பட்டங்கள் வழங்கி கொண்டாடினர். இந்நிலையில் நர்த்தன சாலா படத்தில் கீசகனாக நடித்ததைத்தொடர்ந்து இந்தோனேசியா தலைநகர் ஐகர்தாவில் ஆசிய அளவில் விருது பெற்றார். அவர் இயக்கிய 2 படங்களுக்காக, ஆந்திராவில் நந்தி விருது பெற்றார். இவர் தன் நடிப்பிற்காக 5முறை ஜனாதிபதி விருது வாங்கியிருக்கிறார்.

இவரது நூற்றாண்டை குறிக்கும் விதமாக இவரின் தபால் தலை கடந்த 2013ல் வெளியிடப்பட்டது. இதே போல் இவரது நூற்றாண்டு விழாவை ஹைதராபாத்தில் ஒரு வாரத்திற்கு ஆந்திர திரை உலகம் கொண்டாடியது. இதைத்தொடர்ந்து ஏலூரில் 12 அடி உயர வெண்கலச் சிலையும் தும்மலப்பள்ளியில் மார்பளவு வெண்கலச்சிலையும் இவருக்கு அமைக்கப்பட்டது.

இப்படி இந்திய திரை உலகில் ஆதிக்கம் செலுத்திய ஆளுமை எஸ்.வி.ரங்காராவ் நினைவு நாளான இன்று அவர் குறித்த நினைவுகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் பகிர்ந்து கொள்கிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.