HBD Gautham Karthik : குழந்தை சிரிப்பு.. பெண்களை கொள்ளை கொள்ளும் அழகு ..கௌதம் கார்த்திக் பிறந்தநாள் இன்று!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Hbd Gautham Karthik : குழந்தை சிரிப்பு.. பெண்களை கொள்ளை கொள்ளும் அழகு ..கௌதம் கார்த்திக் பிறந்தநாள் இன்று!

HBD Gautham Karthik : குழந்தை சிரிப்பு.. பெண்களை கொள்ளை கொள்ளும் அழகு ..கௌதம் கார்த்திக் பிறந்தநாள் இன்று!

Divya Sekar HT Tamil
Sep 12, 2023 06:40 AM IST

வளர்ந்து வரும் நடிகர்களில் தனிச் சிறப்பை பெற்று வரும் நடிகர் கௌதம் கார்த்திக் இன்று தனது 34ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருவதையொட்டி இவரது ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் கௌதம் கார்த்திக் பிறந்தநாள்
நடிகர் கௌதம் கார்த்திக் பிறந்தநாள்

கடல் திரைப்படம் வெளியாகி சரிவர ஹிட் ஆகவில்லை என்றாலும் கெளதம் கார்த்திக் அனைத்து தரப்பு மக்களிடம் பாராட்டுகளை பெற்றார். அந்தளவு அவரது நடிப்பும் பங்களிப்பும் இருந்தது. அதனாலே அவருக்கு வாய்புகள் தமிழ் சினிமாவில் குவிந்தது.

குழந்தைத்தனமான சிரிப்பு நிறைந்த முகம், அசாத்தியமான நடிப்புத் திறமை பெண்களை கொள்ளை கொள்ளும் அழகு என அனைத்து சிறப்புகளையும் கொண்ட நடிகர் கௌதம் கார்த்திக் இப்பொழுது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர் ஆக உள்ளார்.

இவர், ஹரஹா மகாதேவகி’'இருட்டு அறையில் முரட்டு குத்து', 'ரங்கூன்', 'முத்துராமலிங்கம்', 'இவன் தந்திரன்', 'தேவராட்டம்' பத்து தல, 1947 போன்ற படங்களிலும் நடித்து இருக்கிறார். கௌதம் கார்த்திக்கும், நடிகை மஞ்சிமா மோகனும் காதலிப்பதாக சமீபத்தில் கிசுகிசுக்கள் வந்தன. இருவரும் 'தேவராட்டம்' படத்தில் ஜோடியாக நடித்தனர். அப்போது காதல் மலர்ந்ததாக கூறப்பட்டது.

பின்னர் இருவரும் காதலை உறுதி செய்யும் வகையில் கடந்த நவம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டனர்.இவர்களின் திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.

இவர் தனது அனுபவங்களை தனியார் ஊடகத்திற்கு பேட்டி அளித்து இருப்பார். அதில், “யாரிடமும் நான் காசு வாங்கக் கூடாது என நினைப்பேன். என்னால் என்ன செய்ய முடியுமோ அதைத்தான் செய்வேன். கொரோனா காலத்தில்கூட என் பைக், கார் எல்லாவற்றையும் விற்றுவிட்டேன்.

யாரிடமும் காசு வாங்கவில்லை. அப்போது எனக்கு துணை நின்றவர் மஞ்சிமா. அவர்தான் அந்த காலக்கட்டத்தில் நான் மேலே வர உதவியாக இருந்தார். பல்வேறு திட்டமிடலை செய்து கொடுத்தார். நான் என்ன முடிவு எடுத்தாலும் மஞ்சிமாவிடம் கலந்தாலோசித்து தான் முடிவெடுப்பேன்.

எனக்கு பிடித்த நடிகர் என் அப்பா தான். என் அப்பா, மக்கள் மனதில் நல்ல இடத்தை பிடித்து விட்டார். நான் ஒரு வாரிசு நடிகர், அவரோட இடத்தை பிடிக்க வேண்டும் என்கிற எந்த எண்ணத்தையும் வளர்க்கவில்லை. நிறைய பேர் வந்து சொல்வார்கள் அப்பா மாதிரி ஆகணும் என்று. நான் என்னை மாதிரி தான் ஆக வேண்டும் என்று நினைத்தேன்.

என்னை மாதிரியே அப்பாவுக்கும் ஆரம்பத்தில் இந்த சிரமம் இருந்தது. தாத்தா மாதிரி வர வேண்டும் என்று அவருக்கு பலர் கூறியுள்ளனர். ஆனால், அவர் அவராக வர முயற்சித்தார். கடந்த ஒன்றரை வருடமாக ஸ்கிரிப்ட் செலக்‌ஷனில் ஈடுபட்ட போது, வில்லன் ரோல் வராத என்று தான் காத்துக்கொண்டிருந்தேன். எனக்கு அந்த மாதிரி ரோல் தான் தேவைப்படுகிறது’ எனக் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் தனது நடிப்பின் மூலம் அதிக ரசிகர்களை கொண்டு வளர்ந்து வரும் நடிகர்களில் தனிச் சிறப்பை பெற்று வரும் நடிகர் கௌதம் கார்த்திக் இன்று தனது 34ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருவதையொட்டி இவரது ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அவருக்கு இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் சார்பாக வாழ்த்துக்கள்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

Whats_app_banner
தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.