HBD Vijayashanthi : கதாநாயகர்களுக்கு இணையாக ஆக்ஷனில் அதகளம் செய்த நடிகை விஜய சாந்தி பிறந்த தினம் இன்று!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Hbd Vijayashanthi : கதாநாயகர்களுக்கு இணையாக ஆக்ஷனில் அதகளம் செய்த நடிகை விஜய சாந்தி பிறந்த தினம் இன்று!

HBD Vijayashanthi : கதாநாயகர்களுக்கு இணையாக ஆக்ஷனில் அதகளம் செய்த நடிகை விஜய சாந்தி பிறந்த தினம் இன்று!

Priyadarshini R HT Tamil
Jun 24, 2023 05:15 AM IST

HBD VijayaShanthi : இந்திய சினிமா நடிகை, தயாரிப்பாளர், அரசியல்வாதி என பல முகங்களை கொண்டவர். கதாநாயகிகள் மரத்தை சுற்றி டூயட் பாடிக்கொண்டிருந்த காலத்தில் வில்லன்களை பந்தாடி ஆக்ஷனில் கலக்கிய புரட்சி நாயகி விஜயசாந்தி குறித்து அவர் பிறந்த தினத்தில் தெரிந்துகொள்ளலாம்.

80களின் ஆக்ஷன் ஹீரோயின் விஜயசாந்தி
80களின் ஆக்ஷன் ஹீரோயின் விஜயசாந்தி

தெலுங்கில் அதிக படங்கள் நடித்தாலும், தமிழ், இந்தி, கன்னடம், மலையாளர் என 187 படங்களை இவர் நடித்துள்ளார். இவரை லேடி சூப்பர் ஸ்டார் என்றும், லேடி அமிதாப் என்று செல்லமாக அழைத்து கொண்டாடுகிறது தென்னிந்திய திரை உலகம். இவர் கார்டாவியம் என்ற படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றார்.

பிரதிகாட்டனா படத்திற்காக இவர் முதன்முதலாக மாநில விருதான நந்தி விருதும், ஃபிலிம் ஃபேர் விருதும் பெற்றார். இவர் வாழ்நாள் சாதனையாளர், தமிழக அரசின் கலைமாமணி ஆகிய விருதுகளையும் பெற்றுள்ளார்.

இவரது தந்தை பெயர் சட்டி ஸ்ரீநிவாஸ் பிரசாத், தாய் வரலாட்சுமி. இவர் பிரபல தெலுங்கு இயக்குனர் விஜயலலிதாவின் மருமகள் ஆவார். இவர் சென்னையில் உள்ள ஹோலி ஏஞ்சல் ஆங்கிலோ இந்தியன் உயர்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு வரை படித்தார். பின்னர் சினிமாவுக்கு நடிக்க வந்துவிட்டார்.

இவர் தனது 14 வயதில் தமிழில் கல்லுக்குள் ஈரம் படத்தில் நடித்தார். பின்னர் அவருக்கு கில்லாடி கிருஷ்ணுடு என்ற தெலுங்கு படத்தில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. பின்னர் சத்யம் - சிவம் என்ற தெலுங்கு படத்தில் என்.டி.ராமா ராவ் மற்றும் அக்கினேனி நாகேஷ்வர ராவ் ஆகியோருடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

முதலில் இவர் அக்கா, மகள் போன்ற துணை கதாபாத்திரங்களில்தான் நடித்து வந்தார். முக்கிய கதாநாயகி பாத்திரங்களில் நடிக்கவில்லை. பின்னர் இவர் கதாநாயகியாக நடித்தார். தொடர்ந்து பெண் மைய படங்களில் இவர் நடித்தார். பின்னர் கதாநாயகர்களுக்கு இணையாக ஆக்ஷனில் நடித்து ஹீரோக்களுக்கு டஃப் கொடுத்தார். 

பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களில் இருந்து கவர்ச்சி கதாபாத்திரங்களுக்கும் மாறினார். அந்த காலத்தில் கதாநாயகர்களுக்கு இணையாக சம்பளம் வாங்கினார். இதற்கு எழுந்த விமர்சனங்களுக்கு அவரது அடுத்தடுத்த வெற்றிப்படங்கள் பதிலாகின.

சண்டை காட்சிகளில் நடிப்பதற்கு பெரும்பாலும் டூப் வைத்துக்கொள்வதில்லை. பின்னர் ஒரு சிறிய இடைவெளிக்குப்பின் மீண்டும் 2020ம் நடிக்க வந்தார்.

1998ம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியில் விஜயசாந்தி சேர்ந்தார். பாரதிய மகிளா மோச்சாவின் செயலாளர் ஆனார். அவர் அதிமுகவுக்காக பிரச்சாரம் செய்தார். பின்னர் தல்லி தெலுங்கானா என்ற தனிக்கட்சியை துவக்கினார். அதை பாரத் ராஷ்ட்ரா சமிதியுடன் இணைத்தார். 

பின்னர் அரசியலில் தீவிர ஆர்வம் காட்டினார். மேடாக் தொகுதியின் எம்பியாக 2009ம் ஆண்டு தேர்தெடுக்கப்பட்டார். சந்திர சேகர ராவுடன் இணைந்து தனி தெலுங்கானா இயக்கத்தில் கலந்துகொண்டார். தனித்தெலுங்கானா உருவாக வேண்டி நடந்த போராட்டத்தில் தீவிரமாக கலந்துகொண்டார்.

2014ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். பின்னர் மேடாக் தொகுதியில் எம்எல்ஏ ஆனார். தெலங்கானா காங்கிரஸ் ஆலோசகரானார். பின்னர் காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து மீண்டும் 2020ம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். இவர் ஸ்ரீனிவாஸ் பிரசாத் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.