HBD Chaya Singh : மன்மத ராசா புகழ்.. 90 'ஸ் கிட்ஸ் மனதை கொள்ளை கொண்ட நாயகி சாயா சிங் பிறந்தநாள் இன்று!
90 'ஸ் கிட்ஸ் மனதை கொள்ளை கொண்ட நடிகைகளில் ஒருவர் சாயா சிங். இவர் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
கன்னட படங்களில் தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கிய நடிகை சாயா சிங், தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு, பெங்காலி மற்றும் போஜ்புரி படங்களில் நடித்துள்ளார்.சாயா சிங் தனது பள்ளி கல்வியை பெங்களூரில் உள்ள லூர்து பள்ளியில் முடித்த பிறகு, அங்குள்ள அரவிந்தோ கல்லூரியில் பட்டம் பெற்றார். 2000-ம் ஆண்டில் கன்னட திரைப்படமான ’முன்னூடி’ மூலம் தனது நடிப்பைத் தொடங்கினார்.
இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதுடன், தேசிய திரைப்பட விருதையும் வென்றது. அதன் பிறகு சில கன்னடப் படங்களில் நடித்த சாயா சிங்கிற்கு, முதல் படத்தில் கிடைத்தளவு வெற்றி கிடைக்கவில்லை. இதனால் கோலிவுட் பக்கம் அவரது கவனம் திரும்பியது.
அப்படி நடிகர் தனுஷ் நடித்த திருடா திருடி என்கிற படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார் நடிகை சாயா சிங். அந்த படத்தில் இருவரும் இணைந்து அதிரடி நடனம் ஆடிய மன்மத ராசா பாடல் செம ஹிட்டானது. இயக்குனர் சுப்ரமணியம் சிவா இயக்கத்தில் நடிகர் தனுஷ் – சாயா சிங் நடித்து 2003-ம் ஆண்டு வெளியான சூப்பர் ஹிட் படம் திருடா திருடி. இந்த திரைப்படம் வெற்றி பெறுவதற்கு காரணம் அதில் இடம்பெற்ற ‘மன்மதராசா மன்மதராசா’என்ற பாடல்தான்.
இந்த படத்துக்கு இசையமைப்பாளர் தீனா இசையமைத்திருந்தார். மன்மத ராசா பாடல் அன்றைக்கு இளைஞர்களை மெய்மறந்து ஆட வைத்தது. இந்த படத்தை தொடர்ந்து, கவிதை, அருள், ஜெய் சூர்யா, உள்ளிட்ட சில படங்களில் இவர் நடித்தாலும், முன்னணி இடத்தை பிடிக்க முடியவில்லை. தமிழை தவிர, மலையாளம், தெலுங்கு, பெங்காலி உள்ளிட்ட மொழி படங்களையும் தேர்வு செய்து நடித்தார். மாறிமாறி நடித்து வந்த சாயா சிங், கடந்த சில வருடங்களில் பவர் பாண்டி, இரவுக்கு ஆயிரம் கண்கள், ஆக்சன் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.
தற்போது சினிமாவில் வாய்ப்புகள் குறைந்த நிலையில் சீரியல் பக்கம் கவனத்தை திருப்பி கன்னடம் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் சீரியல்களில் நடித்து வருகிறார் சாயாசிங். தமிழில் நீண்ட இடைவேளைக்கு பின் இது கதிர்வேலன் காதல் திரைப்படத்தில் நடித்தார்.
தெய்வமகள் சீரியல் நடிகர் கிருஷ்ணாவை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். அனந்தபுரத்து வீடு படத்தில் இருவரும் இணைந்து நடித்த போது இருவரும் காதலிக்க துவங்கினர். பின்னர் இரு வீட்டிலும் காதலுக்கு சம்மதம் தெரிவிக்க திருமணமும் செய்து கொண்டனர். இன்று இவர் தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
டாபிக்ஸ்