Director Panju Arunachalam : தமிழ் திரையுலகில் பன்முகம் கொண்ட கலைஞர்.. இயக்குநர் பஞ்சு அருணாசலம் நினைவுநாள் இன்று!
Panju Arunachalam Memorial Day : இயக்குநர் பஞ்சு அருணாசலம் நினைவுதினம் இன்று. இன்றைய தினம் அவரை போற்றுவோம்.
காரைக்குடியில் உள்ள சிறுகூடல்பட்டி என்ற கிராமத்தில் 1941-ல் பிறந்தவர் பஞ்சு அருணாச்சலம். கவியரசு கண்ணதாசன் இவரது சொந்த சித்தப்பா. தமிழ் திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், கவிஞர் என பன்முகத்தன்மை கொண்டவர் பஞ்சு அருணாசலம்.
ஏ.எல்.எஸ். ஸ்டூடியோவில் செட் உதவியாளராக வேலைக்குச் சேர்ந்து, தனது திரையுலக பயணத்தைத் தொடங்கினார்.
கவிஞர் கண்ணதாசன், பட தயாரிப்பாளர் ஏ.எல்.சீனிவாசன் இவரின் சித்தப்பா ஆவார்.இவர் கண்ணதாசனின் உதவியாளராகப் பணியாற்றிப் பின்நாளில் பல நல்ல பாடல்களை தமிழ் திரையுலகிற்கு எழுதியுள்ளார்.
அன்னக்கிளி திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளர் இளையராஜாவை அறிமுகப்படுத்தினார். பஞ்சு அருணாச்சலத்தை இளையராஜா சந்தித்தபோது, முன்னதாக ஏதேனும் பாடல்களை இயற்றியிருக்கிறாரா என்று கேட்டார். இளையராஜா சாதாரணமாக ஒரு பாடல்களைப் பாடினார், அவற்றில் ஒன்று "அன்னக்கிளி உன்னாய் தேடுதே". இந்த பாடலால் ஈர்க்கப்பட்ட பஞ்சு அருணாசலம் இந்த பாடல்களுக்கு இடமளிக்கும் வகையில் ஒரு திரைப்படக் கதையை எழுத முடிவு செய்தார்.
சுப. முத்துராமன் இயக்கிய 15 படங்களுக்கு மேல் பஞ்சு அருணாசலம் திரைக்கதை, வசனம் எழுதினார்.இவர் கதை - வசனம் எழுதி தயாரித்த, ‘எங்கேயோ கேட்ட குரல்’ படத்துக்கு, சிறந்த திரைப்படத்துக்கான தமிழக அரசின் விருது கிடைத்துள்ளது. தமிழக அரசின் கலைமாமணி விருதை இவர் பெற்றுள்ளார். ரஜினிகாந்த், கமலஹாசன் படங்களை அதிக அளவில் தயாரித்த பெருமை பஞ்சு அருணாசலத்துக்கு உண்டு.
ரஜினியை கே பாலச்சந்தர் அறிமுகப்படுத்தினாலும், அவரை ஒரு சூப்பர் ஸ்டார் நடிகர் என நிலைக்கு ஆளாக்கியது பஞ்சு அருணாச்சலம். ஆறிலிருந்து அறுபது வரை, எங்கேயோ கேட்ட குரல் போன்ற படங்களில் ரஜினியை பல்வேறு பரிமாணங்களில் காட்டி இருப்பார். ரஜினி, கமலை வைத்து ஒரே நேரத்தில் ஆறிலிருந்து அறுபது வரை, கல்யாணராமன் என இரு வேறுபட்ட படங்களை எடுத்து இரண்டையுமே சூப்பர் ஹிட்டாக்கியவர் பஞ்சு அருணாச்சலம்.
சாராத என்ற படம் எல்லா வேலைகளும் முடிந்து வெளியாக தயாராக இருந்தது. ஆனால் கடைசியில் ஒரு பாடல் இணைக்க வேண்டும் என அப்படத்தின் இயக்குனர் முடிவு செய்தார். அப்போது கண்ணதாசன் அவர்கள் ஊரில் இல்லை எனவே அந்த பொறுப்பை பஞ்சு அருணாச்சலம் இடம் இயக்குனர் கொடுத்தார். அப்படி வந்த பாடல் தான் மணமகளே, மருமகளே வா...பாடல். இன்றும் அனைத்து திருமண நிகழ்வுகளிலும் இந்த பாடல்கள் தான் ஒலித்து கொண்டு இருக்கின்றனர்.
இவர், இளைய தலைமுறை (1977), என்ன தவம் செய்தேன் (1977),சொன்னதை செய்வேன் (1977), நாடகமே உலகம் (1979), மணமகளே வா (1988) புதுப்பாட்டு (1990), கலிகாலம் (1992) தம்பி பொண்டாட்டி (1992) போன்ற படங்களை இயக்கியுள்ளார். ஆறிலிருந்து அறுபது வரை (1979), கல்யாணராமன் (1979), எங்கேயோ கேட்ட குரல் (1982), ஆனந்த ராகம் (1982) ஜப்பானில் கல்யாண ராமன் (1985), குரு சிஷ்யன் (1988), மைக்கேல் மதன காமராஜன் (1991), ராசுக்குட்டி (1992) தம்பி பொண்டாட்டி (1992), வீரா (1994), பூவெல்லாம் கேட்டுப்பார் (1999), ரிஷி (2001), சொல்ல மறந்த கதை (2002) மாயக் கண்ணாடி (2007) போன்ற பல வெற்றி படங்களை தயாரித்த பெருமை இவருக்கு உண்டு.
இவருக்கு மீனா என்கிற மனைவியும், சண்முகம், சுப்பிரமணியம் என்கிற இரு மகன்களும், கீதா, சித்ரா என்கிற இருமகள்களும் உள்ளனர். இதில் சுப்பு என்கிற சுப்பிரமணியம், பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் ஆர்யாவுக்கு அண்ணனாக நடித்துள்ளார்.
இன்று பஞ்சு அருணாசலம் நினைவுதினம். இன்றைய தினம் அவரை போற்றுவோம். மணமகளே, மருமகளே வா.. பாடல் ஒலிக்கும் காலம் வரை பஞ்சு அருணாச்சலம் புகழ் இவ்வுலகில் நிலைத்திருக்கும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்