HBD S. Varalakshmi : சொந்த குரலில் பாடி நடித்த பழம்பெரும் நடிகை எஸ்.வரலட்சுமி பிறந்த நாள் இன்று!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Hbd S. Varalakshmi : சொந்த குரலில் பாடி நடித்த பழம்பெரும் நடிகை எஸ்.வரலட்சுமி பிறந்த நாள் இன்று!

HBD S. Varalakshmi : சொந்த குரலில் பாடி நடித்த பழம்பெரும் நடிகை எஸ்.வரலட்சுமி பிறந்த நாள் இன்று!

Divya Sekar HT Tamil
Aug 13, 2023 05:45 AM IST

தான் நடித்த அனைத்து படங்களிலும் சொந்தக் குரலிலேயே பேசி, பாடியவர் நடிகை எஸ். வரலட்சுமி. இவரின் பிறந்தநாளான இன்று அவரை நினைவுக்கூறுவோம்.

நடிகை எஸ். வரலட்சுமி பிறந்த நாள்
நடிகை எஸ். வரலட்சுமி பிறந்த நாள்

நடிகை எஸ். வரலட்சுமி சிறுவயதிலிலேயே பாலயோகினி என்ற திரைப்படத்தில் நடிக்க துவங்கினார். இவர்1938-ம் ஆண்டு கே. சுப்பிரமணியம் தயாரித்த "சேவாசதனம்' படம் மூலம் தமிழில் அறிமுகமானார். தெலுங்கில் நாகேஸ்வரராவ் உடன் "பால்ராஜ்' படத்தில் அறிமுகமானார். ஏவிஎம்-ன் "ஜீவிதம்' உள்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

திரைப்படத் தயாரிப்பாளரும், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் முன்னாள் தலைவருமான ஏ.எல். சீனிவாசனை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு முருகன் மற்றும் நளினி என இரு குழந்தைகள் உள்ளனர். ஒரு பேரனும் ஒரு பேத்தியும் உள்ளனர். திருமணத்திற்கு பின்னரும் தமிழ்,தெலுங்கு திரைப்படங்களில் வயதான வேடங்களில் நடித்து வந்தார். தான் நடித்த அனைத்து படங்களிலும் சொந்தக் குரலிலேயே பேசி, பாடியவர் நடிகை எஸ். வரலட்சுமி.

இவர் பாடிய 'இந்தப் பச்சைக் கிளிக்கொரு செவ்வந்திப் பூவில் தொட்டிலைக் கட்டிவைத்தேன்....' என்ற பாடல் மிகப் புகழ்பெற்றது.அதேபோல குணா படத்தில் கமல்ஹாசனின் தாயார் வேடத்திலும் நடித்து ஒரு பாடலையும் பாடியிருந்தார் வரலட்சுமி.

இவர் தமிழில், சுவப்னசுந்தரி (1950), எதிர்பாராதது (1954), சதி சக்குபாய் (1954), மாங்கல்ய பலம் (1958), சத்ய அரிச்சந்திரா (1965), ஆபூர்வ பிறவிகள் (1967), குணா (1992) வீரபாண்டிய கட்டபொம்மன், கந்தன் கருணை, ராஜராஜ சோழன், பூவா தலையா, சவாலே சமாளி, நினைத்ததை முடிப்பவன், நீதிக்குத் தலைவணங்கு, மாட்டுக்கார வேலன், பணமா? பாசமா?, அடுத்த வாரிசு போன்ற படங்களில் நடித்துள்ளார்.

இவர் தெலுங்கில், கனகதாரா, கோடாரிகம், லாயர் சுகாசினி, மாமாகாரம், சதி துளசி,பொம்ம பொருசா (1971),ஸ்ரீ கிருஷ்ணார்ச்சுன யுத்தம் (1963),மகாமந்திரி திம்மரசு (1962),ஜீவிதம் (1949),பாலயோகினி (1936) போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இவர் கலைமாமணி விருது, கலைவித்தகர், கவிஞர் கண்ணதாசன் விருது (2004), சிவாஜி கணேசன் நினைவுப்பரிசு போன்ற பல விருதுகளை வாங்கியுள்ளார்.

சென்னை மகாலிங்கபுரத்தில் வசித்து வந்த வரலட்சுமி, காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு 6 மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2009ஆம் ஆண்டு செப்டம்பர் 22 தேதி மூச்சுத்திணறல் ஏற்பட்டதில் மருத்துவமனையில் அன்று இரவு தமது 82 ஆவது வயதில் காலமானார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.