Tiruppur Subramaniam: 'நான் பதவியை ராஜினாமா பண்றேன்' - திருப்பூர் சுப்பிரமணியம் அதிரடி அறிவிப்பு!
தமிழ்நாடு திரையரங்க மற்றும் மல்டிப்ளக்ஸ் உரிமையாளர் சங்கத் தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதாக திருப்பூர் சுப்ரமணியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
சல்மான் கான் நடிப்பில் உருவான 'டைகர்' திரைப்படம் கடந்த நவம்பர் 12ஆம் தேதி தீபாவளி அன்று தியேட்டர்களில் ரிலீஸானது. கேத்ரீனா கைஃப், இம்ரான் ஹாஷ்மி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தை மனீஷ் சர்மா இயக்கியுள்ளார். இப்படத்தின் சிறப்புக் காட்சி தீபாவளியன்று காலை 7 மணிக்கு தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியத்துக்குச் சொந்தமான சக்தி சினிமாஸ் தியேட்டரில் திரையிடப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து தீபாவளியன்று அனுமதியின்றி அதிகாலை காட்சிகள் திரையிடப்பட்டது குறித்து விளக்கமளிக்க கோரி திருப்பூர் சுப்ரமணியத்துக்கு மாவட்ட ஆட்சியர் நோட்டீஸ் அனுப்பி இருந்தார்.
இது தொடர்பாக விளக்கமளித்த திருப்பூர் சுப்ரமணியம், 'தீபாவளியன்று தமிழ்நாடு அரசின் சிறப்புக் காட்சிகள் தொடர்பான தமிழக அரசின் விதிமுறைகள் இந்தி திரைப்படத்துக்கு பொருந்தாது என நினைத்து காலை சிறப்பு காட்சியை எங்கள் திரையரங்கத்தினர் திரையிட்டுவிட்டனர். சாதரண விஷயத்தை பெரிது படுத்தியதால் பதவியில் இருந்து விலகுகிறேன்' என விளக்கமளித்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், தமிழ்நாடு திரையரங்க மற்றும் மல்டிப்ளக்ஸ் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் பொறுப்பிலிருந்து விலகுவதாக திருப்பூர் சுப்ரமணியம் அறிவித்துள்ளார். இது தொடர்பான அவர் இன்று (நவ.16) அளித்துள்ள விலகல் கடித்தத்தில், 'எனது சொந்த வேலை காரணமாக சங்கத் தலைவர் பதவிலியிருந்து ராஜினாமா செய்கிறேன். இதுவரை ஒத்துழைப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி' என தெரிவித்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்