Tiger Nageswara Rao: புலி வேட்டையாடுவதை பார்த்தீர்களா.. டைகர் நாகேஸ்வர ராவ் கான்செப்ட் வீடியோ ரிலீஸ்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Tiger Nageswara Rao: புலி வேட்டையாடுவதை பார்த்தீர்களா.. டைகர் நாகேஸ்வர ராவ் கான்செப்ட் வீடியோ ரிலீஸ்

Tiger Nageswara Rao: புலி வேட்டையாடுவதை பார்த்தீர்களா.. டைகர் நாகேஸ்வர ராவ் கான்செப்ட் வீடியோ ரிலீஸ்

Aarthi V HT Tamil
May 24, 2023 05:26 PM IST

டைகர் நாகேஸ்வர ராவ் கான்செப்ட் வீடியோ ரிலீஸாகி உள்ளது.

டைகர் நாகேஸ்வரராவ்
டைகர் நாகேஸ்வரராவ்

தி காஷ்மீர் ஃபைல்ஸ், கார்த்திகேயா 2, என இந்திய அளவில் பிளாக்பஸ்டர்களை வழங்கிய அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் தற்போது தென்னிந்தியா மற்றும் வட இந்தியா முழுமைக்குமான ஒரு பான் இந்திய திரைப்படமான “டைகர் நாகேஸ்வர ராவ்” படத்தை எடுத்து உள்ளது.

இதில் மகாராஜா ரவிதேஜா இப்படத்தில் நடிக்க இயக்குநர் வம்சி இயக்குகிறார். இத்திரைப்படத்தின் அதிரடியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் சுவாரஸ்யமான ஒரு வீடியோவை தற்போது தயாரிப்பாளர்கள் வெளியிட்டு உள்ளனர். அடர்ந்த தாடியுடன் முரட்டுத்தனமான கெட்-அப்பில் காணும் பர்ஸ்ட் லுக் போஸ்டரில், ரவி தேஜா கம்பிகளுக்குப் பின்னால் உறுமும் புலி போல மிரட்டுகிறார்.

ஒரு போஸ்டர் தான் என்றாலும் அவரது கண்கள் பார்க்கும்போது நம்மிடம் பயத்தை விதைக்கிறது. டைகர் நாகேஸ்வர ராவின் உலகை அறிமுகப்படுத்தும் வகையில் இந்த ஃபர்ஸ்ட் லுக் கான்செப்ட் போஸ்டர் அமைக்கப்பட்டுள்ளது. ஃபர்ஸ்ட் லுக் வீடியோ ஐந்து வெவ்வேறு மொழிகளில் சூப்பர்ஸ்டார்களின் குரலில், அசத்தலால வெளியாகியுள்ளது. தெலுங்கு பதிப்பிற்கு வெங்கடேஷ் குரல் கொடுக்க, ஜான் ஆபிரகாம், சிவ ராஜ்குமார், கார்த்தி மற்றும் துல்கர் சல்மான் ஆகியோர் முறையே இந்தி, கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் குரல் கொடுத்தனர்.

வீடியோவின் தொடக்கத்தில் குறிப்பிட்டுள்ளபடி, கதை உண்மையான சம்பவங்களில் பின்னணியில் அமைக்கப்பட்டுள்ளது. “1970 ஆம் வருடங்களில் வங்காள விரிகுடா கடலோரப் பகுதியில் உள்ள ஒரு குட்டிக் கிராமம்... உலகையே பயமுறுத்தும் இருள் கூட அங்குள்ள மக்களைப் பார்த்து அஞ்சுகிறது... பெரும் சத்தம் எழுப்பும் ரயில் அந்தப் பகுதியின் எல்லையை அடையும் போது நடுங்குகிறது... அந்த ஊரின் அடையாளத்தை பார்த்தாலே கால் நடுங்குகிறது... தென்னிந்தியாவின் குற்றத் தலைநகரம் ஸ்டூவர்ட்புரம்... அந்தப் பகுதிக்கு இன்னொரு பெயர்.. டைகர் சோன்.. டைகர் நாகேஸ்வர ராவின் கோட்டை..” என்று குரல் விளக்குகிறது.

வீடியோவில் வரும் வசனத்தில்- “புலி மானை வேட்டையாடுவதை நீங்கள் பார்த்திருக்கலாம்? புலி புலியை வேட்டையாடுவதை நீங்கள் எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா?" என ரவி தேஜா கூறியது அந்த கதாபாத்திரத்தின் தன்மையை விவரிக்கிறது. சூப்பர் ஸ்டார்களின் குரல்வழி சித்தரிப்புகள் இந்த வீடியோவை இன்னும் சுவாரஸ்யமாக்குகின்றன.

இயக்குநர் வம்சி ஒரு அதி அற்புதமான திரைக்கதையுடன் மிகப் புதுமையான வகையில் வழங்குகிறார். இந்திய அளவில் பிரபலமான சிறந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் இணைந்து மிக நவீனமான வகையில் ஒரு புதிய அனுபவத்தை வழங்கவுள்ளார்கள்.

இப்படத்தில் ரவி தேஜாவுக்கு ஜோடியாக நூபுர் சனோன் மற்றும் காயத்ரி பரத்வாஜ் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். டைகர் நாகேஸ்வர ராவின் பாக்ஸ் ஆபிஸ் வேட்டை அக்டோபர் 20 ஆம் தேதி உலகம் முழுவதும், பிரமாண்டமாக வரவுள்ளது.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.