Manju Warrier: கிருஷ்ண பரமாத்மாவாக மாறிய மஞ்சுவாரியர்.. வைரலாகும் போட்டோஸ்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Manju Warrier: கிருஷ்ண பரமாத்மாவாக மாறிய மஞ்சுவாரியர்.. வைரலாகும் போட்டோஸ்!

Manju Warrier: கிருஷ்ண பரமாத்மாவாக மாறிய மஞ்சுவாரியர்.. வைரலாகும் போட்டோஸ்!

Kalyani Pandiyan S HT Tamil
Jan 22, 2023 01:16 PM IST

பிரபல நடிகையான மஞ்சுவாரியர் கிருஷ்ணர் வேடமிட்டு நடித்த நாடகம் தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மஞ்சுவாரியர்
மஞ்சுவாரியர் ( manju.warrier instagram )

ஆக்‌ஷன் காட்சிகளில் அதகளம் செய்த இவரது நடிப்பு பல்வேறு தரப்பினரால் பாராட்டைப் பெற்று வருகிறது. இந்தப்படத்தின் போது நடிகர் அஜித் செய்த பைக் பயணத்திலும் மஞ்சுவாரியர் பங்கெடுத்துக்கொண்டார். மேலும் துணிவு படத்தில் இடம் பெற்ற ‘காசேதான் கடவுளடா’ பாடலிலும் தனது குரலை பதிவு செய்திருந்தார். தொடர்ந்து துணிவு படத்தின் முதல்நாள் காட்சியை ரசிகர்களுடன் பார்த்த அவர், அஜித்துடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து அவருக்கு தன்னுடைய நன்றியினையும் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் இவர் கிருஷ்ணர் வேடம் தரித்து நாடகத்தில் பங்கேற்ற புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. முன்னதாக நேற்றைய தினம் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் “ கிட்டத்தட்ட 3 வருடங்களுக்கு பிறகு மேடை நாடகத்தில் பங்கேற்பதை நினைக்கும் போது உற்சாக இருக்கிறது. குரு கீதாபத்மகுமார் அவர்களால் உருவாக்கப்பட்ட ராதே ஷ்யாம் மேடை நாடகத்தின் வாயிலாக சூரிய விழாவின் ஒரு பகுதியாக இருப்பதில் பெருமையாக இருக்கிறது” என்று குறிப்பிட்டு இருந்தார். அதன்படி, நேற்றைய தினம் மாலை 6.45 மணிக்கு திருவனந்தபுரம் ஏகேஜி சென்டரில் வைத்து இந்த நாடகம் அரங்கேற்றப்பட்டது.

 

அந்த நாடகத்தில் மஞ்சுவாரியர் கிருஷ்ணர் வேடமிட்டு நடித்தார். இது தொடர்பான புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாவில் தற்போது ராதே ஷ்யாம் என்ற கேப்சனோடு பகிர்ந்து இருக்கிறார். இந்தப்புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.