பணத்துக்காக போயிட்டார்ன்னு சொல்லுவாங்க.. விஜய் படத்தில் நடந்த தப்பு இதுதான்.. கே.எஸ். ரவிக்குமார் ஒப்புதல்!
பணத்துக்கு ஆசைப்பட்டு போயிட்டார்ன்னு சொல்லுவாங்க.. ரஜினி சார் மறுபடியும் இப்போதைக்கு படம் பண்ண மாட்டான்னு சொல்லிட்டா கூட பரவாயில்ல.. ஆனா அப்படி தகவல்கள் எதுவும் வரல.. அந்த டைம்ல விஜய் படம் வந்ததால நான் பண்ணவில்லை என்று தெரிவித்துள்ளார்.
ரஜினி, கமல், சிவாஜி என பல நடிகர்களை வைத்து படம் இயக்கிவரும், நடிகருமான கே.எஸ். ரவிக்குமார் Touring Talkies யூடியூப் சேனலுக்கு சில தினங்களுக்கு முன் பேட்டி அளித்திருந்தார். அதில் விஜய் நடிப்பில் வெளியான மின்சார கண்ணா படத்தில் இருந்த பிரச்சனை குறித்தும். விஜய்யுடன் அடுத்த படம் தொடராததற்கு காரணம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். அது குறித்து இங்கு பார்க்கலாம்.
எனது ஆசை
சினிமாவில் முதன்முதலாக வந்த போது இயக்குனராக வேண்டும் என்பதுதான் எனது ஆசை. நான் முதலில் எக்ஸ்போர்ட் செய்து கொண்டிருந்தேன். அப்போது படங்களுக்கு அட்வான்ஸ் கொடுப்போம். அப்படி அட்வான்ஸ் கொடுத்த படங்களின் சூட்டிங் நடக்கும் போது வேடிக்கை பார்க்க போவேன். சூட்டிங் பார்க்கும்போது கேப்டன் ஷிப் ஆஃப் மேன் என்பது பிடித்தது. அப்போது இருந்து ஒரு சின்ன கனவு. பின்னர் கூட இருந்த நண்பர்கள் எல்லாம் படம் எடுத்தார்கள். அவங்க படங்களில் சும்மா வேடிக்கை பார்க்க ஆரம்பிச்சு அப்படியே அசிஸ்டன்ட் டைரக்டர் ஆனேன்.
நடிப்பை பொருத்தவரை எனக்கு பெரிய ஆசையோ ஆர்வமோ கிடையாது. ஆனால் இயக்கும்போது ஒவ்வொரு கேரக்டரையும் ஃபீல் பண்ணி இப்படி பண்ணினால் நல்லா இருக்கும் என்று செய்து காண்பிப்பேன். அப்படியே நடிப்பு சொல்லிக் கொடுத்து, சொல்லிக் கொடுத்து நடிப்பு என்பது ஒரு பெரிய கஷ்டம் இல்லை. அதை உள்வாங்கிக் கொண்டால் போதும்... அது வந்துவிடும் என்பதுதான் என் எண்ணம். நடிக்கணும் என்ற ஒரு தலையெழுத்து என் படங்களிலேயே வந்தது. அதனால் அதையும் செய்து விட்டேன். அது பிரபலமானதால் நீங்கள் நடிப்பது நன்றாக இருக்கிறது என்றார்கள். பின்னர் பிரண்ட்ஸ் எல்லாரும் கேட்டார்கள் சுந்தர்.சி யின் முதல் படம், ஹரியின் முதல் படம் இந்த மாதிரி நிறைய நண்பர்கள் படங்களில் ஃப்ரீயா போய் நடித்துவிட்டு வந்தேன். அதுக்கப்புறம் தற்போது அது ஒரு தொழிலாக மாறிவிட்டது.
தோல்விக்கு காரணம்
பேட்டிக்கு இடையே ரசிகர் ஒருவரின் கேள்விக்கு பதில் அளித்த கே.எஸ். ரவிக்குமார், மின்சாரக்கண்ணா சரியா போகாததுக்கு காரணம் அந்த ஹீரோயின்தான்னு நிறைய பேர் சொல்லி இருக்காங்க. அது ஹீரோயின் என்பதை விட அன்னைக்கு மார்கெட்டில் இருந்தது ரம்பா.. ஹீரோயின் நியூ பேஸ்.. ஆனா புரொடெக்சன் சைடுல கே.ஆர்.ஜி சார் மகன் பாம்பே சென்று செலக்ட் பண்ணிட்டு வந்தார். அதுனால நாங்க அவங்களையே போட்டுடோம்.
நான் அப்பயெல்லாம் கடகடன்னு அடுத்தடுத்து படம் பண்ணிட்டு இருப்பேன். சரி நம்ம போய் செலக்ட் பண்ண நேரம் இல்லன்னு புரொடெக்சன் சைடுல அனுப்பிட்டோம். அதவிட ரம்பா விட்டுட்டு அந்த பொண்ணு கூட ஊர விட்டு போயிட்டாரு என்பது தான் மைனஸ் ஆகிட்டு.. ஹீரோயின் மைனஸ் இல்ல.. அந்த பொண்ணு நல்லாதா நடிச்சது. நாங்க நியூ பேஸ் போட்டது அந்த சஸ்பென்ஸ் மெயிண்டெயின் ஆகணும் என்பதால் தான் என்றார். மின்சார கண்ணான்னு ஒரே படம் தான் விஜய் வச்சு பண்ணேன்.
தட்டிப்போன விஜய் பட வாய்ப்பு
ராணான்னு ரஜினி சார் வச்சு ஒரு படம் எடுக்க டிரை பண்ணோம். அப்போ ரஜினி சார் உடம்பு சரி இல்லாம சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தார். அப்போ டோட்டல் யூனிட்டில் இருந்தவர்கள் எல்லாம் கொஞ்ச கொஞ்சமா போயிட்டாங்க. ஆனா நான் மட்டும் போகல.. அப்ப விஜய் படம் ஒன்று வந்தது. ரஜினி மருத்துவமனையில் படுத்துருக்கார்.. அவர் வர்றதுக்குள்ள நா அடுத்த படத்துக்கு போனா இங்க பார்.. பணத்துக்கு ஆசைப்பட்டு போயிட்டார்ன்னு சொல்லுவாங்க.. வேண்டாம். அதுமட்டும் இல்லாம எனக்கே அவர் வந்துட்டு அவர் படத்த முடிச்சுட்டு போனா நல்லா இருக்கும் என்று தோணுச்சு.. இல்ல அவர் மறுபடியும் இப்போதைக்கு படம் பண்ண மாட்டான்னு சொல்லிட்டா கூட பரவாயில்ல.. ஆனா அப்படி தகவல்கள் எதுவும் வரல.. அந்த டைம்ல விஜய் படம் வந்ததால நான் பண்ணவில்லை என்று தெரிவித்துள்ளார்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.‘
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்