Paruthiveeran: மீண்டும் ரிலீஸ் ஆகும் பருத்திவீரன்.. டிக்கெட் எங்கு கிடைக்கும்?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Paruthiveeran: மீண்டும் ரிலீஸ் ஆகும் பருத்திவீரன்.. டிக்கெட் எங்கு கிடைக்கும்?

Paruthiveeran: மீண்டும் ரிலீஸ் ஆகும் பருத்திவீரன்.. டிக்கெட் எங்கு கிடைக்கும்?

Kalyani Pandiyan S HT Tamil
Feb 18, 2023 03:41 PM IST

நடிகர் கார்த்தி நடிப்பில் இயக்குநர் அமீர் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற பருத்திவீரன் திரைப்படம் ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளது

ரீ ரிலிஸ் ஆகும் பருத்திவீரன்!
ரீ ரிலிஸ் ஆகும் பருத்திவீரன்!

கதைக்கரு

உயர் வகுப்பை சேர்ந்த தந்தைக்கும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பெண்ணுக்கும் மகனாக பிறக்கும் பருத்திவீரன், ஒரு கட்டத்தில் தாய் தந்தையை இழந்து விட, தனது சித்தப்பா செவ்வாழையின் அரவணைப்பில் வாழ்ந்து வருவார். அந்த ஊரில் பெரிதாக மதிக்கப்படும் கழுவைச்சேர்வை பருத்திவீரனின் அத்தையை மணந்திருப்பார். இயல்பாலவே சாதி வெறிபிடித்தவராக இருக்கும் கழுவை பருத்திவீரனையும், அவரது குடும்பத்தையும் கடுமையாக வெறுப்பவராக இருப்பார். இந்த நிலையில் இவருடைய மகள் முத்தழகு பருத்திவீரனை காதலிப்பார். இந்தக்காதலை கழுவை பயங்கரமாக எதிர்க்க இந்த எதிர்ப்பை இருவரும் எப்படி சமாளித்தார்கள்..? கார்த்தி விலை மாதுகளுடன் தொடர்பு வைத்தது எப்படி முத்தழகின் உயிரை பதம் பார்த்தது..? இறுதியில் பருத்திவீரன் என்ன ஆனான்? உள்ளிட்ட கேள்விகளுக்கான பதில்களே பருத்தி வீரன் படத்தின் கதை.

பருத்திவீரன் ரீரிலிஸ்
பருத்திவீரன் ரீரிலிஸ்

கடந்த 2007 ஆம் ஆண்டும் பிப்ரவரி 23 ஆம் தேதி வெளியான இந்த திரைப்படம் 300 நாட்களை கடந்து திரையரங்குகளில் ஓடி மாபெரும் வெற்றியை பெற்றது. இந்தப்படம் வெளியாகி கிட்டத்தட்ட 16 வருடங்கள் முடிவடைய உள்ள நிலையிலும், 16 வருட கார்த்தியின் சினிமா பயணத்தை கொண்டாடும் வகையிலும் இந்தப்படம் ரீ ரிலீஸ் செய்யப்பட இருக்கிறது. ஆம் நாளை சென்னையில் உள்ள கீரின் சினிமாஸில் (காலை 8 மணிக்கு) திரையிட பட இருக்கிறது. இதற்கான டிக்கெட்டுகளை ஆன்லைன் டிக்கெட் விற்பனை செயலிகளில் முன்பதிவு செய்தோ அல்லது திரையரங்கிற்கு நேரில் வந்தோ வாங்கி கொள்ளலாம் 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.