Story Of Song: 'கமல்.. இளையராஜாவை கும்பிடுவீங்க..' தாலாட்டுதே வானம் பாடல் பிறந்த கதை!
கடல் மீன்கள் படத்தில் இடம் பெற்ற தாலாட்டுதே வானம் தள்ளாடுதே மேகம் பாடல் உருவான கதை குறித்து தான் இதில் நாம் பார்க்க போகிறோம்.
1981 ஆம் ஆண்டு ஜி. என். ரங்கராஜன் இயக்கத்தில் கமல்ஹாசன், சுஜாதா நடிப்பில் வெளியான படம் கடல் மீன்கள். இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். கண்ணதாசன், பஞ்சு அருணாசலம் கங்கை அமரன் பாடல்களை எழுதியுள்ளனர்.
கமல் நடிப்பில் ஜி. என். ரங்கராஜன் இயக்கத்தில் வெளியான கல்யாண ராமன், எல்லாம் இன்ப மயம் என பல படங்கள் அடுத்து அடுத்து பல ஹிட்களை கொடுத்தது. ஆனால் இவர்களின் வெற்றிபாதையில் சரிவு ஏற்பட தொடங்கியது. ஜி. என். ரங்கராஜன் தயாரிப்பில் இறங்கி நஷ்டத்தை சந்திக்கிறார்.
அப்போது இவருக்கு உதவும் விதமாகவும், அவரது நஷ்டத்தை ஈடுகட்டும் விதமாகவும் கமல்ஹாசன் சம்பளம் வாங்காமலும், இசையமைப்பாளர் இளையராஜாவும் எந்த பணமும் பெறாமல் இசையமைத்து கொடுக்கிறார்.
இதுகுறித்து ஜி. என். ரங்கராஜன் ஒரு மேடையில், ராஜா சாரும், கமல் சாரும் இல்லை என்றால் நான் தெருவில் கிடக்கும் கல் ஆக இருந்திருப்பேன் என்று கூறி இருப்பார். இப்படி பல்வேறு கஷ்டங்களுக்கு இடையே உருவான படம் தான் கடல் மீன்கள். இப்படத்தில் இடம் பெற்ற தாலாட்டுதே வானம் பாடல் உருவான கதை குறித்து தான் இதில் நாம் பார்க்க போகிறோம்.
”தாலாட்டுதே வானம் தள்ளாடுதே மேகம்
தாளாமல் மடி மீது தார்மீக கல்யாணம்
இது கார்கால சங்கீதம்
தாலாட்டுதே
நிலை நீரில் ஆடும் மீன்கள் ரெண்டும் ஒரே கோலம்
மேல்வானத்தில் ஒரு நட்சத்திரம்
கீழ்வானத்தில் ஒரு பெண் சித்திரம்
எண்ணம் ஒரு வேகம் அதில் உள்ளம் தரும் நாதம்
தாலாட்டுதே தாலாட்டுதே வானம் தள்ளாடுதே மேகம்
தாளாமல் மடி மீது தார்மீக கல்யாணம் ஹோய்
இது கார்கால சங்கீதம்
இரு கண்கள் மூடி செல்லும் போதும் ஒரே எண்ணம்
ஒரு சங்கில் தானே பாலை உண்ணும் ஒரே ஜீவன்
சொர்க்கத்திலே இது முடிவானது
சொர்க்கம் என்றே இது முடிவானது”
இப்பாடலை கவிஞர் கண்ணதாசன் எழுதி இருப்பார். ஜெயச்சந்திரன், எஸ்.ஜானகி இணைந்து பாடி இருப்பார்கள். இவர்களில் குரலில் இப்பாடலை கேட்பது அவ்வளவு இனிமையாக இருக்கும். வழக்கம் போல் கவியரசர் கண்ணதாசன் தன் வரிகளில் மாயாஜாலம் செய்து இருப்பார். மொத்ததில் கட்டுமரத்தில் இனிமையாக பயணப்பது போன்ற ஒரு உணர்வு இருக்கும் இப்பாடலில்.
இளையராஜாவிடம் கடல், கடல் பரப்பு, கடலுக்கு உண்டான அத்தனை உணர்ச்சிகளும் நீங்கள் உங்கள் இசையில் காட்ட வேண்டும் என்று சொன்னார்களாம். அவர்கள் சொன்னது போலவே காதலும் கட்டுமரமும் கைக்கோர்த்த பாடலாக இப்பாடல் அமைந்திருக்கும். இளையராஜா அசத்தி இருப்பார்.
ஆரம்ப இசையில் முதன் முதலாக வரும் அந்த வயலின்கள் நாதம் கடலின் விரிந்த பரப்பையும் அச்சம் தரும் ஆழத்தையும் உணர்த்துகிறது. இப்பாடல் கேட்டும் போது தள்ளாடி போனது மேகம் மட்டும் அல்ல மனதும் தான்.உணர்வுகளை எங்கெல்லாமோ எடுத்து செல்லும் பிரம்மிப்பு மிக்க ஒரு பாடல் தான் தாலாட்டுதே வானம் தள்ளாடுதே மேகம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்