Story of Song : அப்பப்பா.. என்னவென்று சொல்ல உணர்வுகளில் விளையாடி இருப்பார்கள்.. நானே நானா பாடல் உருவான கதை!
அழகே உன்னை ஆராதிக்கிறேன் படத்தில் இடம்பெற்ற நானே நானா யாரோ தானா பாடல் உருவான கதை குறித்து இதில் காண்போம்.
இயக்குநர் ஸ்ரீதர் இயக்கத்தில் 1979 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் அழகே உன்னை ஆராதிக்கிறேன். நடிகை லதா இத்திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். நடிகை சுபாஷிணி மற்றும் நடிகர் பிரகாஷ் ஆகியோர் இப்படத்தின் மூலம் அறிமுகமாயினர். இத்திரைப் படத்திற்கு இளையராஜா இசையமைத்தார். வாணி ஜெயராம் பாடிய பாடல்களான 'நானே நானா', 'என் கல்யாண வைபோகம்' ஹிட் பாடல்கள் ஆகும்.
அப்படி இப்படத்தில் இடம்பெற்ற நானே நானா யாரோ தானா பாடல் உருவான கதை குறித்து இதில் காண்போம்.
"நானே நானா யாரோ தானா
மெல்ல மெல்ல மாறினேனா
நானே நானா யாரோ தானா
மெல்ல மெல்ல மாறினேனா
தன்னைத்தானே மறந்தேனே
என்னை நானே கேட்கிறேன்
நானே நானா யாரோ தானா
மெல்ல மெல்ல மாறினேனா
ஒருவன் நினைவிலே
உருகும் இதயமே இதோ துடிக்க
உலர்ந்த உதடுகள்
தனிமைக் கவிதைகள்
எதோ படிக்க
மதுவின் மயக்கமே
உனது மடியில் இனிமேல்
இவள்தான் சரணம் சரணம்
நானே நானா யாரோ தானா
மெல்ல மெல்ல மாறினேனா
மெல்ல மெல்ல மாறினேனா
பிறையில் வளர்வதும்
பிறகு தேய்வதும் ஒரே நிலவு
உறவில் கலப்பதும்
பிரிவில் தவிப்பதும்
ஒரே மனது
பருவ வயதிலே
இரவும் பகலும் விரகம்
நரகம் சரணம் சரணம்"
இப்பாடலானது வாலி அவர்களில் வரிகளில், இளையராஜாவின் இசையில் வாணி அம்மாவின் இனிமையான குரலில் திகட்டாத சுவையில் இருக்கும். இந்த பாடலில் நிறைய விஷயங்கள் இருக்கும். முதலில் அவர்கள் தன்மை மறந்த நிலையில் இருக்கீறார்கள். இரண்டாவது ஒருவருக்கு காதல் இருக்கும் ஆனால் அந்த பக்கம் காதல் இல்லை, மூன்றாவது துரோகம் இந்த மூன்று உணர்ச்சிகளையும் இசைஞானி அவர்கள் இசையிலேயே காட்டி இருப்பார்.
வாணி அவர்கள் தனது அற்புத குரலால் மெல்ல மெல்ல மாறினேனா என பாடும் போது காதல் இருக்கும், அதேபோல அடுத்த வரியில் தன்னைத்தானே மறந்தேனே
என்னை நானே கேட்கிறேன் என அவர் பாடும்போது குறிப்பாக என்னை நானே கேட்கிறேன் அந்த வரியில் இசைஞானி அவர்கள் அந்த டியூன் மூலம் துரோகத்தின் வலியை உணர்த்தி இருப்பார்.
இந்த பாடலில் அத்தனை உணர்வுகளையும் தன் குரலால் வாணி அவர்கள் நமக்கு அளித்திருப்பார். மொத்ததில் இந்த பாட்டு ஒரு பாடகிக்கு சேலஞ்ச், கவிதையில் பெரிய மகுடம் வாலி அவர்களுக்கு, உணர்வுகளை இசையால் கட்டிப்போட்டு இருப்பார் ராஜா அவர்கள். மனதை மயிலிறகு கொண்டு வருடும் ஒரு ஆனந்த அனுபவம் கொடுக்கும் பாடல் நானே நானா யாரோ தானா.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்