Ajithkumar: பிரசாந்த் அஜித் மோதல்.. பக்கத்து கழுத்திற்கு மாறிய மாலை.. தலைகுனிந்த தல.. தயாரிப்பாளர் திணறிய கதை தெரியுமா?
மறுநாள் பேப்பரில் கார்த்தி, மீனா அஜித் ஆகிய மூன்று பேரின் புகைப்படங்கள் அடங்கிய போஸ்டர் வந்தது. இதனிடைய அஜித் திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு விட்டார்
அஜித் அவமானப்பட்டதற்கு பின்னால் இருந்த சம்பவத்தை செய்யாறு பாலு, ஆகாயம் தமிழ் சேனலுக்கு பகிர்ந்து இருக்கிறார்.
அதில் அவர் பேசும் போது, “ஆனந்த் பூங்காற்றே திரைப்படத்தில் நடிகர் அஜித்தை தயாரிப்பாளர் காஜாமைதீன் கமிட் செய்து வைத்திருந்தார். அந்தப் படத்திற்காக அஜித் கேட்ட சம்பளம் 22 லட்சம். அதையும் அவர் தருவதாக உறுதியளித்தார். மறுநாள் பேப்பரில் கார்த்தி, மீனா அஜித் ஆகிய மூன்று பேரின் புகைப்படங்கள் அடங்கிய போஸ்டர் வந்தது. இதனிடைய அஜித் திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு விட்டார்.
இந்த நிலையில் காஜா மைதீனை சுற்றி இருந்தவர்கள், வட்டிக்கு பணம் வாங்கி இருக்கிறாய், அஜித் எழுந்து வர வாய்ப்பில்லை கவனமாக இரு.. வேறு ஹீரோவை தேடு என்று எச்சரிக்க, ஒரு கட்டத்தில் அஜித்திற்கு பதிலாக நடிகர் பிரசாந்தை அந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைக்கலாம் என்று முடிவு செய்தார் காஜா. அந்த முடிவை அவர் எடுத்த அடுத்த நாள் அஜித் இருந்த இடத்தில் பிரசாந்த் இடம் பெற்று, புதிய போஸ்டர் வெளியானது.
இதைப் பார்த்த அஜித் அதிர்ச்சிக்கு உள்ளானார். இதனையடுத்து மருத்துவமனையில் இருந்து வேகமாக வந்த அஜித், காஜாமைதீன் சார்..இது என்னுடைய வாழ்க்கை, இப்படி நீங்கள் செய்தால் என்னுடைய சினிமா கேரியரே அடிபட வாய்ப்பு இருக்கிறது என்று சொல்லி கெஞ்சினார். இதனையடுத்து காஜா மைதீன் இரக்கம் காட்ட, அஜித் தனக்கிருந்த உடல் வலியோடு அந்த படத்தில் நடித்து கொடுத்தார்.
ஆனந்த பூங்காற்றே ஆடியோ லான்ச்சிற்கு, நடிகர் பிரசாந்த் சிறப்பு விருந்தினராக வந்தார். அப்போது அஜித்தும் அருகில் இருந்தார் ஆனால் அஜித் படத்தின் ஹீரோதான், ஆனால் பிரசாந்த் சிறப்பு விருந்தினர்; ஆகையால் மாலையை அவருக்குதான் போட வேண்டும் என்று சொல்லி, அந்த மாலை பிரசாந்திற்கு சென்றது இதை யாரோ ஒருவர் புகைப்படம் எடுத்தார். அந்த புகைப்படம் இப்போதும் வைரல் ரகம். அதில் கடும் கோபம் அடைந்தார் அஜித்!
அந்தக் கோபத்தை காஜாமைதீன் பேனரில் தயாரித்த ஜனா படத்தில், அஜித் காண்பித்தார். இதனால் கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் அந்த படம் இழுத்தடிக்கப்பட்டது. இதனால் நொந்த காஜா, அஜித் நல்லவர் தான், ஆனால் அஜித்திடம் அன்று அவர் அவமானப்பட்ட அந்த போட்டோவை காண்பித்து தொடர்ந்து வெறியேற்றி விட்டிருக்கிறார்கள் என்று சொன்னார்” என்று பேசினார்.
டாபிக்ஸ்