Jailer Update : வேற லெவல்.. ஜெயிலர் படத்தின் புதிய போஸ்டர் வெளியானது.. உற்சாகத்தில் ரசிகர்கள்!
ரஜினிகாந்த் நடித்துள்ள ‘ஜெயிலர்’ படத்தின் புதிய போஸ்டர் வெளியானது.
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தயாராகியுள்ள படம் ஜெயிலர். அவர் கடைசியாக நடித்த படம் அண்ணாத்த. அதனை தொடர்ந்து அவர் ஜெயிலர் படத்தில் தற்போது நடித்து வருகிறார். இந்தப்படத்தை கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படம். பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இத்திரைப்படத்தில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், ஜாக்கி ஷெராஃப், சுனில், சிவராஜ் குமார், வசந்த் ரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
படத்தின் முதல் பாடலான 'காவாலா' எனத் தொடங்கும் பாடல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. தமன்னாவின் கலக்கல் நடனத்துடன் வெளியான இப்பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தின் ‘ஹூக்கும்’ எனத் தொடங்கும் இரண்டாவது பாடல் வரும் ஜூலை 17 ஆம் தேதி ரிலீசாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் ‘ஜெயிலர்’ படத்தின் புதிய போஸ்டர் வெளியானது. இந்த போஸ்டரை ரஜினி ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
இதனிடையே, தமன்னா நடனத்தில் உருவான ‘ஜெயிலர்’ படத்தின் காவாலா பாடலின் மேக்கிங் வீடியோ வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இந்தப் படத்தில் ரஜினி, முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் ஜெயிலராக நடிக்கிறார். படம் தொடர்பாக அடுத்தடுத்து வெளியாகி வரும் அப்டேட்கள் ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது.
அதிரடி சண்டை காட்சிகளுடன் இந்தப்படம் தயாராகி வருகிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இந்த படம் வரும் ஆகஸ்ட் மாதம் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்