ஆவணப்படமாக உருவாகும் அருளாளர் ஆர்.எம். வீரப்பன் வாழ்க்கை! இயக்கம், நடிப்பு யார்?
அருளாளர் ஆர் எம் வீரப்பன் அவர்களின் 99 வது பிறந்தநாளை முன்னிட்டு நினைவு பாடல் ஒன்றை சத்யா மூவிஸ் தயாரித்து செப்டம்பர் 9 ஆம் தேதி வெளியிட்டிருந்தது

சமீபத்தில் மறைந்த மூத்த அரசியல் தலைவர் மற்றும் சத்யா மூவிஸ் நிறுவனத்தின் திரைப்பட தயாரிப்பாளர், தமிழகத்தின் வரலாற்றில் முக்கிய ஆளுமையாக இருந்த அருளாளர் ஆர்.எம். வீரப்பன் குறித்த ஆவணப்படம், திரையுலகத்தின் முன்னணி பிரபலங்களின் பங்கேற்பில், உலகத்தரத்திற்கு இணையாக உருவாகவுள்ளது.
திராவிட இயக்கங்களின் தலைவர்களான பெரியார் மற்றும் அண்ணா ஆகியோருடன் நெருங்கி பழகியவர் ஆர்.எம். வீரப்பன். திரைப்படத் தயாரிப்பாளராகவும் இருந்த ஆர்.எம். வீரப்பன், திமுகவில் இருந்து எம்.ஜி.ஆர். பிரிந்தபோது அதிமுகவில் இணைந்தார்.
ஆர்.எம். வீரப்பன்
முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவின் அமைச்சரவையில் 5 முறை அமைச்சராக பதவி வகித்தவர் அருளாளர் ஆர்.எம். வீரப்பன். மூன்று முறை சட்டப்பேரவை மேலவை உறுப்பினராகவும், இரண்டு முறை சட்டப்பேரவை உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார் அருளாளர் ஆர்.எம். வீரப்பன்.