Adah sharma: கார் விபத்தில் சிக்கிய ‘தி கேரளா ஸ்டோரி’ பட ஹீரோயின்
The Kerala Story: மும்பையில் பிறந்தவரான அடா ஷர்மாவிற்கு 31 வயது ஆகிறது.
தமிழில் இது நம்ம ஆளு படத்தில் ஒரு பாடல் காட்சியில் மட்டும் நடித்திருந்தவர் தான் தி கேரளா ஸ்டோரி படத்தில் ஹீரோயினாக நடித்துள்ள அடா ஷர்மா. இவர் தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளிலும் நடித்திருக்கிறார்.
மும்பையில் பிறந்தவரான அடா ஷர்மாவிற்கு 31 வயது ஆகிறது.
சமீபத்தில் திரைக்கு வந்து சர்ச்சையை ஏற்படுத்திய படம் தி கேரளா ஸ்டோரி. இந்தப் படம், கேரளாவில் இளம் பெண்கள் மதம் மாற்றம் செய்யப்பட்டு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புகளில் சிக்க வைக்கப்படுகிறார்கள் என்பதை கதைக் கருவாக கொண்டிருந்தது.
இது சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் இருக்கிறது என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்பட பல அரசியல் தலைவர்கள் எதிர்ப்பை பதிவு செய்திருந்தனர்.
ஒரு படி மேலே சென்று மேற்கு வங்க அரசு இந்த படத்திற்கு தடை விதித்தது.
உலகம் முழுவதும் தி கேரளா ஸ்டோரி படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்து வருகிறது. இப்படத்தை இயக்கிய சுதிப்தோ சென்னுடன் காரில் மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரில் சென்றபோது விபத்து ஏற்பட்டது.
இதில், இருவருக்கும் காயம் ஏற்பட்டது.
இதுகுறித்து நடிகை அடா ஷர்மா சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில், "நான் தற்போது நலமாக இருக்கிறேன். சிறிய விபத்து தான். என்மீது அக்கறை கொண்டு விசாரித்த அனைவருக்கும் நன்றி" என்று குறிப்பிட்டுள்ளார்.
தி கேரளா ஸ்டோரி திரைப்படம் 11 ஆவது நாளில் 10.30 கோடி வசூல் செய்துள்ள நிலையில் மொத்தமாக 147.04 கோடி வசூல் செய்து இருக்கிறது. இன்னும் சில நாட்களில் படத்தின் வசூல் 150 கோடியை எட்டிவிடும் என திரைவட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
“ தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு தமிழகத்தில் தடை விதிக்கப்படவில்லை. மாநிலம் முழுவதும் மொத்த 19 திரையரங்குகளில் படம் வெளியிடப்பட்டது. அந்த திரையரங்குகளுக்கு காவல்துறை சார்பில் பாதுகாப்பும் அளிக்கப்பட்டது. ஆனால், தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை பார்க்க பொதுமக்கள் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. ஆகையால் திரையரங்குகளில் அந்த படத்தை நீக்கி விட்டு வேறு படத்தை திரையிடுகிறார்கள். இந்த விவகாரத்தில் தமிழக அரசின் தலையீடு எந்த இடத்திலும் கிடையாது” என்று தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.