Top Cinema News : தி கோட் 6ஆம் நாள் வசூல்.. மருத்துவமனையில் டிடி.. ஸ்பைடர் மேன் 4 அப்டேட்.. இன்றைய சினிமா செய்திகள்!-the code 6th day collection dd in hospital spider man 4 updatetoday top cinema news - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Top Cinema News : தி கோட் 6ஆம் நாள் வசூல்.. மருத்துவமனையில் டிடி.. ஸ்பைடர் மேன் 4 அப்டேட்.. இன்றைய சினிமா செய்திகள்!

Top Cinema News : தி கோட் 6ஆம் நாள் வசூல்.. மருத்துவமனையில் டிடி.. ஸ்பைடர் மேன் 4 அப்டேட்.. இன்றைய சினிமா செய்திகள்!

Divya Sekar HT Tamil
Sep 11, 2024 10:14 AM IST

Top Cinema News : தி கோட் 6ஆம் நாள் வசூல் அப்டேட், ரகு தாத்தா ஓடிடி ரிலீஸ், திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட டிடி உள்பட டாப் சினிமா செய்திகளை இந்த தொகுப்பில் காணலாம்.

Top Cinema News : தி கோட் 6ஆம் நாள் வசூல்.. மருத்துவமனையில் டிடி.. ஸ்பைடர் மேன் 4 அப்டேட்.. இன்றைய சினிமா செய்திகள்!
Top Cinema News : தி கோட் 6ஆம் நாள் வசூல்.. மருத்துவமனையில் டிடி.. ஸ்பைடர் மேன் 4 அப்டேட்.. இன்றைய சினிமா செய்திகள்!

பாக்ஸ் ஆஃபிஸ் நிலவரங்களை வெளியிடும் sancik தளம் வெளியிட்ட தகவலின் அடிப்படையில், படம் வெளியான 6ம் நாளான நேற்றைய தினம் கோட்திரைப்படம் தமிழகத்தில் 9.6 கோடி ரூபாயும், ஹிந்தியில் 0.8 கோடி ரூபாயும், தெலுங்கில் 0.7 கோடி ரூபாயும் வசூல் செய்திருக்கிறது. மொத்தமாக பார்க்கும் போது, தமிழகத்தில் 6 நாட்களில் 143.7 கோடி ரூபாயும், தெலுங்கில் 9.15 கோடி ரூபாயும், ஹிந்தியில் 10 கோடி ரூபாயும் வசூல் செய்திருக்கிறது. ஆக, இந்தியாவில் கோட் திரைப்படம் 178.25 கோடி ரூபாயும், ஓவர்சீஸ் மார்க்கெட்டில் 125 கோடி ரூபாயும், மொத்தமாக 303.25 கோடிரூபாயை கோட் திரைப்படம் வசூல் செய்திருக்கிறது.

ரகு தாத்தா ஓடிடி ரிலீஸ்

ரகு தாத்தா படம் வெளியாகி வரும் வாரத்துடன் ஒரு மாத காலம் ஆக இருக்கும் நிலையில், ஓடிடியில் வெளியாக இருக்கிறது. அதன்படி ஓடிடி தளத்தில் ரகு தாத்தா திரைப்படம் தமிழ் தவிர தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு ஜீ5 ஓடிடி செப்டம்பர் 13 முதல் ஸ்டிரீமிங் ஆக உள்ளது.

திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட டிடி

கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருப்பவர் தொகுப்பாளினி டி.டி.நீலகண்டன். விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளினயான டிடி என்ற திவ்யதர்ஷினி திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து திரை துறையிலும் சின்னத்திரையிலும் பயணித்து வரும் டிடி கடந்த சில நாட்களாக எந்தவித நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளவில்லை. அவருக்கு முழங்காலில் பல நாட்களாக பிரச்சனை இருப்பதாகவும், அதை கவனிக்காமல் விட்டதால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டதாக தெரிவித்து இருந்தார்.

திவ்யா ஸ்பந்தனா திருமணம் செய்துகொண்டாரா?

திவ்யா ஸ்பந்தனா திருமணம் செய்துகொண்டார் என்று மீண்டும் தகவல்கள் பரவின. அதனை மறுத்து காட்டமாக பதிவு ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார் திவ்யா. அவரது தனது பக்கத்தில், "எனக்கு பல முறை மீடியாக்கள் திருமணம் செய்துவைத்துவிட்டார்கள். எத்தனை முறை என்பதை நான் மறந்தும்விட்டேன். நான் ஒருவேளை உண்மையில் திருமணம் செய்துகொண்டால் நானே சொல்வேன். அதிகாரப்பூர்வமற்ற சோர்ஸ்களிடமிருந்து வரும் வதந்திளை பரப்புவதை நிறுத்துங்கள்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

ஐஐஎஃப்ஏ விருதுகள் வழங்கும் விழா

சர்வதேச அளவில் மிகப்பெரிய கவனத்தை பெற்றுவரும் ஐஐஎஃப்ஏ விருதுகள் வழங்கும் விழா இந்த ஆண்டும் மிகப்பெரிய கொண்டாட்டத்திற்கு உள்ளாகியுள்ளது. இதில் ஷாருக்கான், கரண் ஜோகர் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்கள் கலந்துக் கொண்டுள்ளனர்.

முன்னணி ஹீரோவுடன் இணையும் பிரஷாந்த்

கோட் வெற்றியை தொடர்ந்து பிரஷாந்த் அடுத்ததாக நடிக்கப்போகும் படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, சூர்யாவின் 44வது படத்தில் பிரஷாந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கப்போகிறாராம். இதற்கான பேச்சு வார்த்தை நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. கார்த்தி சுப்ராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து பூஜா ஹெக்டே நடித்து வருகிறார்.

சின்னத்திரையில் மீண்டும் நடிக்கமாட்டேன் -பிரியங்கா!

காற்றுக்கென்ன வேலி தொலைக்காட்சி தொடரில் நாயகியாக நடித்த பிரியங்கா சின்னத்திரையில் நடிப்பதை நிறுத்திவிட்டு வெள்ளித்திரையில் நடிக்க தொடங்கி உள்ளார். சின்னத்திரையில் மீண்டும் நடிக்கும் எண்ணம் தனக்கு இல்லை என்றும், படத்தில் நடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் நான் சின்னத்திரையில் நடித்தேன் என்றும், தற்போது ஒப்பந்தமாகியுள்ள படத்திற்காக நான் புல்லாங்குழல் வாசிக்க கற்றுக் கொண்டு வருகிறேன், இந்த படத்தில் என் முழு உழைப்பையும் கொடுப்பேன் என்றும் கூறியுள்ளார்.

ஸ்பைடர் மேன் படத்தின் 4வது பாகம் குறித்த அறிவிப்பு

மார்வல் ரசிகர்களுக்கு பிடித்த ஹீரோவான ஸ்பைடர் மேன் படத்தின் 4வது பாகம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. ஹாலிவுட்டில் பிரபல இயக்குநராக விளங்கி வருபவர், டெஸ்டின் டேனியல் க்ரெட்டான். இவர், ஏற்கனவே அவெஞ்சர்ஸ் படங்களில் இயக்குநராக பணியாற்றியிருக்கிறார். இவரை ஸ்பைடர் மேன் படத்தின் 4வது பாகத்தை இயக்க கூறி, மார்வல் நிறுவனம் பேச்சி வார்த்தை நடத்தியிருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு அவர் கிரீன் சிக்னல் கொடுத்திருப்பதாகவும் பேசப்படுகிறது.

ஞானவேல் ராஜா தோச கிங் என்ற திரைப்படத்தை இயக்க உள்ளாராம்

வேட்டையன் படத்துக்கு அடுத்ததாக ஞானவேல் ராஜா தோச கிங் என்ற திரைப்படத்தை இயக்க உள்ளாராம் பிரபல சரவணபவன் உரிமையாளரான ராஜகோபாலின் வாழ்க்கை கதையை மையமாக வைத்து அந்த படம் இயக்கப்பட உள்ளது. பிரபல கன்னட இயக்குனரான ஹேமந்த்ராவும் படத்தின் கதையை எழுதி இருக்கிறார். உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் எடுக்கப்படவுள்ளது. விரைவில் படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்த கூடுதல் தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.