Spider-Man 4: பிரமாண்டமாக தயாராகும் ஸ்பைடர் மேன் 4 - ரிலீஸ் எப்போது தெரியுமா?
சினிமா ரசிகர்கள் வியப்பில் ஆழ்த்திய சூப்பர் ஹீரோ படமாக இருந்து வரும் ஸ்பைடர் மேன் சீரிஸ் படங்களில் நான்காம் பாகமாக ஸ்பைடர்மேன் 4 பணிகள் நடந்து வருவதாகவும், டாம் ஹாலந்து மீண்டும் ஸ்பைடர் மேனாக உருவெடுக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது
ஹாலிவுட் சூப்பர் ஹீரோ படங்களில் உலக முழுவதும் ரசிகப்பட்ட படமாகவும், பாக்ஸ் ஆபிஸில் வசூலை குவித்த படமாகவும் ஸ்பைடர்மேன் சீரிஸ் இருந்து வருகிறது. மல்டிவெர்ஸ் படமாக இருந்து வரும் ஸ்பைடர் மேன் படங்களில் ஹாலிவுட் நடிகர் டாம் ஹாலந்து டைட்டில் கதாபாத்திரத்தில் தோன்றியுள்ளார். இதையடுத்து ஸ்பைடர் மேன் நான்காம் பாகத்துக்கான கதை உருவாக்க பணிகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஸ்பைடர்மேன் மூன்றாம் பாகமாக நோ வே ஹோம் படத்துடன், ஸ்பைடர் மேன் சீரிஸ் படங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் இந்த படத்தின் கதை நான்காம் பாகம் உருவாக்குவதற்கான வாய்ப்புடனே முடிந்திருக்கும் நிலையில், ஸ்பைடர் மேனாக நடிக்கும் டாம் ஹாலாந்தும் அடுத்த பாகத்தில் நடிப்பதற்கு ஆர்வம் தெரிவித்திருப்பதால் அதை உருவாக்கும் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதையடுத்து இந்த புதிய பாகத்தில் நடிக்க இருக்கும் கதாபாத்திரங்கள், ரிலீஸ் தேதி, கதைகளம் போன்றவை குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதற்கிடையே படத்தின் கதை தொடர்பாகவும், கதாபாத்திரங்கள் தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியாகியும் வந்து கொண்டிருக்கிறது.
கடந்த ஆண்டு மே மாதம் ஸ்பைடர் மேன் படத்தின் அடுத்த பாகம் குறித்து, படத்தின் தயாரிப்பாலர் எமி பேஸ்கலிடம் கேட்டபோது, ஸ்பைடர் மேன் அடுத்தடுத்த பாகம் வருவதை தவிர்க்க முடியாது என்று தெரிவித்தார். அத்துடன், ஜூன் மாதம் ஸ்பைடர் மேன் 4 ஆரம்பகட்ட பணிகள் நடந்து வருவதாக தெரிவித்தார். தொடர்ந்து சமீபத்தில் பேட்டி ஒன்றில், " எங்களிடம் கதை ஒன்று உள்ளது. எங்களது திரைக்கதாசிரியர்கள் தங்களது பிரமாண்ட ஐடியாக்களை பேப்பரில் எழுதி திரைக்கதையாக உருவாக்கி வருகிறார்கள்" என்றார்.
தற்போது வரை படத்தின் ரிலீஸ் எப்போது என கூற முடியாவிட்டாலும், ஜுலை 2024இல் ரிலீஸ் ஆவதற்கு வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
படத்தில் பிரதான கதாபாத்திரமான டாம் ஹாலாந்து தவிர இதர நடிகர்கள் குறித்த விவரம் தெரியவில்லை. நான்காம் பாகம் குறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளிவராத நிலையில் சர்பைரைஸாக அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்