Tharshan: காதலை உறுதி செய்த தர்ஷன்.. அப்போ சனம் ஷெட்டி?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Tharshan: காதலை உறுதி செய்த தர்ஷன்.. அப்போ சனம் ஷெட்டி?

Tharshan: காதலை உறுதி செய்த தர்ஷன்.. அப்போ சனம் ஷெட்டி?

Aarthi V HT Tamil
Nov 30, 2023 09:59 AM IST

நடிகர் தர்ஷன் தனது காதல் தொடர்பாக முதல் முறையாக பேட்டி அளித்தார்.

தர்ஷன்
தர்ஷன்

சினிமாவில் எப்படியாவது சாதிக்க வேண்டும் என்ற காரணத்தினால் வேலையைவிட்டு சென்னைக்கு வந்தார். பின்னர் விளம்பரப்படங்களில் நடித்து வந்தார். ஒரு சில பெரிய விளம்பரங்களிலும் நடித்தார்.

இவர் பிக் பாஸ் 3 ஆவது சீசனிக் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. தனது நேர்மையான குணம் மூலம் ஏராளமான ரசிகர்களைப் பெற்றார் தர்ஷன். பிக் பாஸ் 3 நிகழ்ச்சியின் இறுதி வரை வந்த தர்ஷன் வெற்றி பெறுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். 

ஆனால் யாரும் எதிர்பார்க்காத விதமாக நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் செய்யப்பட்டு அனுப்பட்டார். அதே மேடையில் தன் தயாரிப்பு நிறுவனமாக ராஜ் கமல் பிலிமிஸ் நிறுவனத்தில் தர்ஷன் ஒரு படம் நடிப்பார் என கமல் ஹாசன் அறிவித்தார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகு, கூகுள் குட்டப்பா என்ற படத்தில் தர்ஷன் நடித்து இருந்தார். இதையடுத்து ‘தாய்க்குப்பின் தாரம்’ என்ற மியூசிக் ஆல்பத்தில் நடித்தார் தர்ஷன். 

இவர் தற்போது நாடு என்ற படத்தில் நடித்து இருக்கிறார். மலைவாழ் மக்கள் தங்களுடைய அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யவும், அடிப்படைத் தேவைகளை பெற எவ்வாறுசிரமங்களை சந்திக்கின்றனர் என்பதை படத்தின் கதை. இப்படம் விரைவில் வெளியாக உள்ளது. 

இதனை முன்னிட்டு படத்தை விளம்பரம் செய்யும் பணியில் தர்ஷன் ஈடுபட்டு இருக்கிறார். அந்த வகையில் சமீபத்தில் Little Talks யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் காதல் தொடர்பாக கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த தர்ஷன் , “ காதல் வாழ்க்கை ரொம்ப கேவளமாக சென்று கொண்டு இருக்கீறது. எனக்கு ஒரு பெண் மேல க்ரஷ் இருக்கு. ஆனா அந்த பெண்ணுக்கு வேறு ஒருவரை பிடித்து இருக்கலாம். எல்லாருக்கும் இருப்பது போல் எனக்கும் க்ரஷ் இருக்கிறது. அது இப்போது சொல்ல முடியாது. படங்கள் வருகிறது அதனால் அதில் கவனம் செலுத்தி வருகிறேன் “ என்றார். 

நன்றி: Little Talks

கூகுள் குட்டப்பா படத்தில் தர்ஷனும், லாஸ்லியாவும் நெருக்கமான காட்சிகளில் நடித்து இருந்தார்கள். இதைப் பார்த்த பிறகு அண்ணன், தங்கை என சொல்லிவிட்டு இருவரும் இப்படி நடிப்பது எந்த விதத்தில் நியாயம் என ரசிக்ர்கள் கேள்வி கேட்டனர். ஒரு சிலரோ அண்ணன், தங்கை என சொல்வது எல்லாம் போய் இருவரும் காதலிக்கிறார்கள் என சொல்லினார்கள்.

முன்னதாக பிக் பாஸ் வீட்டில் இருந்த போது நடிகை சனம் ஷெட்டி தானும், தர்ஷனும் காதலிப்பதாகவும், நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாக தெரிவித்தார். ஆனால் பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டனர்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.