ThankarBachan: ‘ரூ.500 கோடினு கொண்டாடுற.. என்ன இருக்கு உன் படத்துல?’ தங்கர்பச்சான் காட்டம்!
Jailer: ‘உழைக்கும் மக்களின் பணம் யாரிடம் போகிறது? அந்த பணம் திரும்ப என்னவா வரும்? திரும்ப அதே மாதிரியான படமாக தான் வரும்’
தான் இயக்கிய கருமேகங்கள் கலைகின்றன படத்தின் செய்தியாளர் சந்திப்பு, சென்னையில் நடந்தது. அதில் பங்கேற்ற இயக்குனர் தங்கர்பச்சான், உணர்ச்சிபூர்வமாக பேசினார். இதோ அவருடைய பேச்சு:
‘‘பாராதிராஜா அண்ணனின் படங்களை பார்த்து வளர்ந்த நான், அவருடைய 84 வயதில், அவரை முதன்மை கதாபாத்திரமா வைத்து எடுத்திருக்கும் படம் இது. துணிச்சல் மிக்க காரியம் இது. எனக்கு எதிரில் ஒரு லட்சம் பேர் நிக்குறான். எல்லார் கையிலும் நம்மை கொலை செய்யும் ஆயுதம் இருக்கிறது. அவர்கள் கையில் துப்பாக்கி மாதிரியான ஆயுதங்கள் இருக்கிறது.
நான் ஒருவன் தான், என்னிடம் எந்த ஆயுதமும் இல்லை. எப்படி வெற்றி பெற முடியும்? இந்த இடத்திலிருந்து கடந்தால் தான், மக்களை நான் பார்க்க முடியும். என்னுடைய ஊர் அங்கே தான் இருக்கிறது. நான் அங்கே போய் தான் ஆக வேண்டும். இந்த துணிச்சலை ஒவ்வொரு படத்திலும் செய்கிறேன்.
ஒரு கதையை, சமூகம் எதை கேட்கிறதோ, அந்த கதையை அந்த சமயத்தில் உருவாக்க வேண்டியிருக்கு. ஒரு தயாரிப்பாளரை தேடி, அலைய வேண்டியிருக்கு, அவரை சம்மதிக்க வைக்க வேண்டியிருக்கு. அதற்கு ஹீரோ பிடிக்க வேண்டியிருக்கு. அதன் பிறகு எடுத்து முடிப்பதற்குள், சொல்ல முடியாது.
எடுத்த பிறகு, விற்க படும் பாடு இருக்கே.. அது விவரிக்கவே முடியது. அதன் பிறகு, மக்களை அதை பார்க்க வைக்கிறது இருக்கே? இந்த பிரச்னை எல்லாமே நல்ல படத்திற்கு தான் வரும். மக்கள் உடனே வரக்கூடிய படம் இருக்கே, அந்த படத்தில் என்ன கதை இருக்கு? ஏதோ ஒரு தலைப்பு வைக்கிறார்கள்.
அந்த நடிகர் படத்தில் ஏதோ ஒரு நடிகை நடிப்பார். அந்த நடிகை நடிக்கிறார் என்பதை வெளியிடும் செய்தி இருக்கிறதே, அதை ஒரு நல்ல திரைப்படத்திற்கு கொடுப்பதில்லை. கொடுத்திருந்தால் அந்த திரைப்படம் மக்களிடம் போய் சேர்ந்திருக்கும்.
அழகி படத்தை 40 படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த பின், ஒரு தயாரிப்பாளரை பிடித்து எடுத்தேன். அதை வெளியிட என்னபாடு பட்டேன் என்று உங்களுக்கு தெரியும். முடியாது என்று தூக்கி எறிந்துவிட்டோம். ஒரு ஆள் அதை வாங்கவில்லை. மக்களிடம் போன பின் அது வெற்றி பெற்றது. மக்களிடம் போய் சேர இங்கு பயங்கர தடை இருக்கு.
நீங்க எல்லா படங்களிலும் நடிங்க, ஆனால் இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை 30, 40 நாள் ஒதுக்கி, நல்ல படங்களில் நடிக்க வேண்டும் என்று நடிகர்கள் முடிவு செய்ய வேண்டும். அங்கே தான் தடை நிற்கிறது. சமூகத்திற்கான தடை அது. 500 கோடி, 600 கோடி என்று கொண்டாடுகிறீர்களே, அதில் என்ன பெருமை இருக்கு? அந்த பணம் யாரிடம் போகிறது?
உழைக்கும் மக்களின் பணம் யாரிடம் போகிறது? அந்த பணம் திரும்ப என்னவா வரும்? திரும்ப அதே மாதிரியான படமாக தான் வரும். சமூகத்தை சீரழிக்கும் படமாக தான் அது வரும். ஆனால், அதே செலவில் நல்ல சினிமா, பத்து உருவாக்க முடியும்.
என்ன எது நடந்தாலும், பொறுப்பு மக்களுக்கும் இருக்கும். ஒரு பொருளை பார்த்து பார்த்து தேர்வு செய்யும் மக்கள், சினிமாவை மட்டும் ஏன் தேர்வு செய்ய மறுக்கிறார்கள்? நல்ல சினிமாவை அவர்கள் தான் தேர்வு செய்ய வேண்டும். எனக்கும் வயதாகிவிட்டது.
ஒரு பெரிய நடிகர் நடிக்க கூடிய படம், அது 200 கோடி, 300 கோடி செலவு செய்து, ஒரு பேர் வைத்தால் போதும், உடனே கடகடனு எல்லாம் முடிந்துவிடுகிறது. மக்களும் அதை பார்த்து தயாராகிவிடுகிறார்கள். அந்த படத்திற்கு போனால் என்ன இருக்கும்? 100 துப்பாக்கி வெச்சிருப்பான். குத்தி கொலை பண்ணிட்டே இருப்பான். செத்துட்டே இருப்பான். அதை குழந்தைகளோடு போய் பார்க்கிறோம்.
கண் முன்னாடி நடக்கும் அந்த கொலைகளை பிள்ளைகளிடம் காட்டினால், அவர்கள் எதிர்காலம் என்ன ஆகும்? பணத்தை முதலீடு செய்பவனுக்கு அறிவு இருக்காதா? நடிப்பவர்களுக்கு இருக்காதா? சிந்திக்க வேண்டாமா? பணம் வந்தால் போதுமா?
கலைஞன் என்று சொல்பவனுக்கு பொறுப்பு இருக்கு, கடமை இருக்கு. பயந்து பயந்து எல்லாத்தையும் பண்ண வேண்டியிருக்கு. அப்படி போராடி படத்தை எடுக்கிறோம். ஒரு நல்ல படம் பண்ணிருக்கேன் பாருங்க என்று கெஞ்சிக் கொண்டே இருக்க வேண்டுமா? இது என்ன தலையெழுத்தா? தேவையா? அதை இனி செய்யக் கூடாது,’’
என்று தங்கர்பச்சான் பேசினார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
https://www.facebook.com/HTTamilNews
https://www.youtube.com/@httamil
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்