Jayam Ravi: பொன்னியின் செல்வனால் தனி ஒருவன் 2 தாமதமா?- உண்மையை சொன்ன ஜெயம் ரவி
நடிகர் ஜெயம் ரவியின் அகிலன், இறைவன், பொன்னியின் செல்வன்2 ஆகிய திரைப்படங்கள் இந்தாண்டு ரிலீஸுக்கு காத்திருக்கிறது.
இயக்குனர் மோகன் ராஜாவின் இயக்கத்தில் 2015-ல் வெளியான ‘தனி ஒருவன்’ திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வெற்றி பெற்றது. இதில் மோகன் ராஜாவின் தம்பியும் நடிகருமான ஜெயம் ரவி ஹீரோவாக நடித்திருந்தார்.
இந்தப்படத்தில் நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்தில் வித்தியாசமான வில்லன் கெட்டப்பில் மிரட்டியிருந்தார் அரவிந்த் சாமி. ஜெயம் ரவி கேரியரில் பெஸ்ட்டாக அமைந்த படங்களில் முக்கியமான படமாக ‘தனி ஒருவன்’ படம் உள்ளது.
இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் குறித்து முன்னதாகவே மோகன் ராஜா அறிவித்திருந்த நிலையில், அவரும் ஜெயம் ரவியும் மற்ற ப்ராஜெக்ட்களில் பிசியாகினர். ஆனால், ரசிகர்கள் இப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்து சமூக வலைத்தளத்தில் அவ்வப்போது கேட்டு வருகின்றனர். தற்போது ‘தனி ஒருவன்’ படத்தின் 2-வது பாகம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே பொன்னியின் செல்வனாக நடித்த ஜெயம் ரவிக்கு இந்தப்படமும் நல்ல வரவேற்பினைப் பெற்று தந்தது. உலகம் முழுவதும் ரூ.500 கோடிக்கும் அதிகமாக வசூலானதாக படக்குழு தெரிவித்தது. பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் இந்தாண்டு ஏப்ரலில் வெளியாக உள்ளது.
இந்த நிலையில், நடிகர் ஜெயம் ரவி யூடியூப் நேர்காணல் ஒன்றில் ‘தனி ஒருவன் 2’ பற்றி கூறியுள்ளார். இதில் அவர், “தனி ஒருவன் 2 ஸ்கிரிப் ரெடியாக உள்ளது. கதை அற்புதமாக வந்துள்ளது. 2019-ல் நடிக்க வேண்டி இருந்தது. ஆனால், பொன்னியின் செல்வன் படம் வந்ததால் தாமதம் ஆனது. விரைவில் தனி ஒருவன் 2 படத்தில் நடிக்க உள்ளேன்” எனக் கூறியுள்ளார்.
இந்தப் படத்தின் இரண்டாவது பாகத்திற்காகவே ரசிகர்களை போலவே ஜெயம் ரவியும் காத்திருந்த நிலையில், தற்போது இந்தப் படம் குறித்த அப்டேட்டை வெளிப்படுத்தியுள்ளார். விரைவில் படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.
மேலும். ஜெயம் ரவியின் அகிலன், இறைவன், பொன்னியின் செல்வன் 2 ஆகிய திரைப்படங்கள் இந்தாண்டு ரிலீஸுக்கு காத்திருக்கிறது.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்