Thangalaan: தங்கலானை ஆஸ்கருக்கு அனுப்ப திட்டம்.. மெகா ப்ளான் போட்ட தயாரிப்பாளர்
தங்கலான் படத்தை ஆஸ்கருக்கு அனுப்ப போவதாக பட தயாரிப்பாளர் கூறி உள்ளார்.
நடிகர் விக்ரம் நடிப்பில், இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தங்கலான். இந்த படத்தில் நடிகைகள் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் மூலமாக இயக்குநர் பா.ரஞ்சித்துடன் முதன்முறையாக இணைகிறார் இசையமைப்பாளர் ஜிவிபிரகாஷ்குமார்.
ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பு நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஞானவேல் தயாரிக்கிறார். இப்படத்திற்காக நடிகர் விக்ரம் உடல் எடையை குறைத்து நடித்து வருகிறார்.
தங்கலான் படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நேற்று சென்னையில் உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் விக்ரம், மாளவிகா மோகனன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
தங்கலான் படத்தை இந்த ஆண்டு இறுதியில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருக்கிறது படக்குழு. மேக்கிங் வீடியோ அண்மையில் நடிகர் விக்ரமின் பிறந்தநாளன்று ரிலீஸ் செய்யப்பட்டது. அதைப் பார்த்த ரசிகர்கள் விக்ரமுக்கு நிறைய விருதுகள் கிடைக்கும் என கூறினர்.
இதனிடையே தங்கலான் படத்தை ஆஸ்கர் விருதிற்கு அனுப்ப போவதாக படத்தின் தயாரிப்பளர் சமீபத்தில் கலந்து கொண்ட பேட்டியில் கூறி உள்ளார்.
அவர் பேசுகையில், "நாங்கள் 9 உயரிய திரைப்பட விழாக்களை திட்டமிட்டு இருக்கிறோம். ஆஸ்கரில் தொடங்கி பெர்லின், டொரன்டோ என ஒரு 9 விழாக்களை திட்டமிட்டு இருக்கிறோம்.
இந்த எல்லா விழாக்களுக்கும் தங்கலான் போகிறது. நிச்சயமாக இது பல விருதுகளை குவிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை” என்றார்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
https://www.facebook.com/HTTamilNews
https://www.youtube.com/@httamil
டாபிக்ஸ்