Hvinoth: பெரிய ஹீரோ.. பெரிய பட்ஜெட்.. பாக்ஸ் ஆபீஸெல்லாம் கிடையாது.. எது நல்ல படம்? - நெற்றிப்பொட்டில்பேசிய ஹெச்.வினோத்!
Hvinoth: இதை ஏன் சொல்கிறேன் என்றால், இரா சரவணன் பத்திரிக்கை துறையில் இருந்து வந்ததாலோ அல்லது சசிகுமார் பொருட்காட்சியில் வைத்து பாதுகாக்கும் அளவுக்கு நல்லவர் என்பதாலோ சொல்லவில்லை. உண்மையிலேயே இந்தப்படம் நல்லப்படம். - ஹெச். வினோத்!
‘நந்தன்’ படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெயிலர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் இயக்குநர் ஹெச். வினோத் கலந்து கொண்டு பேசினார்.
அவர் பேசும் போது, “இந்தப் படத்தின் இயக்குனநரான சரவணன் ‘நந்தன்’ படத்தை நான் பார்த்தே தீர வேண்டும் என்று கிட்டத்தட்ட ஆறு மாதங்களாக என்னை டார்ச்சர் செய்து கொண்டிருந்தான். ஆனால், நான் அதிலிருந்து நழுவிக் கொண்டே இருந்தேன். காரணம் என்னவென்றால், சசிக்குமாரும் அவனும் கடைசியாக இணைந்த ‘உடன்பிறப்பே’ திரைப்படம் பாச மழையை பொழிந்திருக்கும். அதனால் இந்தப்படமும் அதே மாதிரி இருக்கும் என்று நினைத்து தள்ளி போட்டுக் கொண்டே இருந்தேன்.
ஒரு நாள் பார்த்தோம்
இந்த நிலையில் ஒருநாள் நண்பர்கள் எல்லோரும் அந்த படத்தை பார்க்கலாம் என்று நந்தனை பார்த்தோம். முதல் 10 முதல் 15 நிமிடங்கள் படம் நார்மலாக சென்று கொண்டிருந்தது சசிக்குமாரின் லுக் பயங்கரமாக இருந்தது. ஆனால், படம் போகப் போக வந்த காட்சிகளும், நடிப்பும் எங்களுடன் பயங்கரமாக கனெக்ட் ஆனது.
படத்தில், நிறைய விஷயங்கள் மிகவும் அதிர்ச்சிகரமாக இருந்தது. நான் கிராமத்தில் வளர்ந்த ஆள் தான். எனக்கே படத்தில் காண்பிக்கப்பட்ட விஷயங்கள் அதிர்ச்சியாகத்தான் இருந்தது. என்னைப்பொறுத்தவரை எது நல்ல படம் என்றால், பெரிய பட்ஜெட்டில் எடுக்கக்கூடிய படமோ அல்லது பெரிய ஹீரோ நடிக்கக்கூடிய படமோ அல்லது பாக்ஸ் ஆபிஸில் பெரிய வசூலை அள்ளக்கூடிய படமோ கிடையாது.
நல்ல மனிதராக மாற்ற வேண்டும்
ஒரு மனிதனை நல்ல மனிதனாக மாற்றக்கூடிய படம் எதுவோ அந்த படங்கள்தான் நல்ல படங்கள். அந்த வகையில் நந்தன் திரைப்படம் நம்மை நல்ல மனிதராக மாற்ற முயற்சி செய்கிறது. இதை ஏன் சொல்கிறேன் என்றால், இரா சரவணன் பத்திரிக்கை துறையில் இருந்து வந்ததாலோ அல்லது சசிகுமார் பொருட்காட்சியில் வைத்து பாதுகாக்கும் அளவுக்கு நல்லவர் என்பதாலோ சொல்லவில்லை. உண்மையிலேயே இந்தப்படம் நல்லப்படம். அதனால், நீங்கள் இந்த படத்தை சப்போர்ட் செய்ய வேண்டும்” என்று பேசினார்.
அடிப்படையில் பத்திரிகையாளராக இருந்து, இயக்குநராக மாறிய இரா.சரவணன் இயக்கத்தில் கடைசியாக வெளியான ‘உடன் பிறப்பே’ படத்தில் சசிகுமார், சமுத்திரக்கனி, ஜோதிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இவரது இயக்கத்தில் மீண்டும் சசிகுமார் நடித்திருக்கிறார். நந்தன் என பெயரிடப்பட்டிருக்கும் இந்தப்படத்தில் ஸ்ருதி பெரியசாமி, பாலாஜி சக்திவேல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
‘இரா’ என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்து இருக்கிறார். இப்படம் வருகிற செப்டம்பர் 20ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
டாபிக்ஸ்