Thalapathy Vijay: சாய் பாபா சாமியார்களுடன் ஜோசப் விஜய்! - வைரல் ஆகும் புகைப்படம்! - எப்போது எடுக்கப்பட்டது தெரியுமா?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Thalapathy Vijay: சாய் பாபா சாமியார்களுடன் ஜோசப் விஜய்! - வைரல் ஆகும் புகைப்படம்! - எப்போது எடுக்கப்பட்டது தெரியுமா?

Thalapathy Vijay: சாய் பாபா சாமியார்களுடன் ஜோசப் விஜய்! - வைரல் ஆகும் புகைப்படம்! - எப்போது எடுக்கப்பட்டது தெரியுமா?

Kalyani Pandiyan S HT Tamil
Published Apr 08, 2024 05:22 PM IST

பிரபல நடிகரான விஜய் சாய் பாபா கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்திருக்கிறார்.அந்த புகைப்படம் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

விஜய்!
விஜய்!

அதன் மூலம், நடிகர் விஜய் படத்தில் இரட்டை வேடங்களில் நடிக்கிறார் என்பது உறுதியானது. புதியகீதைக்கு பின்னதாக, கிட்டதட்ட 20 வருடங்களுக்கு பிறகு விஜயின் இந்தத்திரைப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். 

இந்தப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, பாண்டிச்சேரி, தாய்லாந்து, கேரளா உள்ளிட்ட பல இடங்களில் நடந்தது. தற்போது படக்குழு அடுத்தக்கட்ட படப்பிடிப்பிற்காக ரஷ்யா சென்று இருக்கிறது. இது தொடர்பான புகைப்படங்களை தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி இன்று பகிர்ந்து இருந்தார். 

ரஷ்யாவில் படப்பிடிப்பு: 

இதனால் விஜயும் ரஷ்யா சென்று இருப்பார் என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையில் தற்போது நடிகர் விஜய் சாய்பாபா கோயிலில் சென்று தரிசனம் செய்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தப்புகைப்படம் கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் எடுக்கப்பட்டது என்று சொல்லப்படுகிறது. 

முன்னதாக, படப்பிடிப்பிற்காக அண்மையில் கேரளா சென்று இருந்த விஜய்க்கு அங்கிருந்த ரசிகர்கள் ஏகோபித்த வரவேற்பு அளித்தனர். 

அங்கு ரசிகர்கள் முன்னிலையில் பேசிய அவர் , “உங்கள் வீட்டு பிள்ளையாக நீங்கள் என்னை பார்ப்பது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. உங்கள் மனசுல அப்படியே வாழ்ந்து விட வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது.

இன்னும் எத்தனை ஜென்மம் எடுத்தாலும், நான் உங்க விஜய்தான்

தமிழ்நாடும் சரி, கேரளாவும் சரி எனக்கு இரண்டு கண்கள் மாதிரி. இந்த ஜென்மம் மட்டுமல்ல, இன்னும் எத்தனை ஜென்மம் எடுத்தாலும், நான் உங்க விஜய்தான். உங்களுடைய தளபதிதான். இந்த 32 வருஷத்துல என்ன ஒரு நடிகனா மட்டும் பார்க்காம, உங்க வீட்டுப்பிள்ளையா பார்த்தீங்க பாருங்க அது ரொம்ப ஆச்சரியாம இருக்கு.” என்று பேசினார்.

தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படம் அப்டேட்

இந்தப்படத்தில் விஜயுடன் இணைவது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசிய யுவன் ஷங்கர் ராஜா, “ தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படம் அப்டேட்டை நான் சொல்ல மாட்டேன். இந்த முறை நான் தெளிவாக இருக்கிறேன். பேச்சு இல்ல.... வீச்சுதான். நான் மிகவும் ஆவலாக இருக்கிறேன். படத்தின் அனைத்து வேலைகளும் நன்றாக நடைபெற்று கொண்டிருக்கிறது” என்று பேசினார்.

நட்சத்திர பட்டாளம்: 

இந்தப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி செளத்ரி நடிக்க கமிட் ஆகி இருக்கிறார். மேலும் துணை கதாபாத்திரங்களில் நடிகர்கள் பிரபுதேவா, பிரசாந்த், சினேகா, அஜ்மல் உள்ளிட்ட பல நடிகர்கள் நடிக்கின்றனர். இந்தப்படத்திற்கு கேப்டன் மில்லர் படத்தில் பணியாற்றிய கேமராமேன் சித்தார்த் நுனி கேமராமேனாக பணியாற்றுகிறார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன: