‘அவ்வளவு வெறுப்புல இருந்தோம்.. இன்னைக்கு அண்ணன் - தங்கையா.. கீர்த்தி சுரேஷூக்கும் - விஜய் மேனஜருக்கும் இப்படி ஒரு உறவா?
கடந்த 2015ம் ஆண்டு நானும், கீர்த்தியும் ஒருவரையொருவர் எவ்வளவு வெறுக்க முடியுமோ, அவ்வளவு வெறுத்துக்கொண்டிருந்தோம். - விஜய் மேனஜர்!
தமிழ், தெலுங்கு என தென்னிந்திய சினிமாவில் டாப் கதாநாயகியாக வலம் வந்துகொண்டிருப்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இந்த மாதம் கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக வெளியாக இருக்கும் பேபி ஜான் படம் மூலம் பாலிவுட் சினிமாவிலும் என்ட்ரி கொடுக்கிறார்.
சிறப்பாக நடந்த திருமணம்
இதற்கிடையே தனது நீண்ட நாள் நண்பரான ஆண்டனி தட்டிலை திருமணம் செய்து கொண்டு, தற்போது திருமதி கீர்த்தி சுரேஷாகவும் மாறி இருக்கிறார். கோவாவில் நடைபெற்ற இந்த திருமணத்தில், நடிகர்கள் விஜய், த்ரிஷா உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
கீர்த்தி சுரேஷ் - ஆண்டனி கல்யாண வைபோகம் சமந்தமான போட்டோக்களும் சமூகவலைதளங்களில் வைரல் ஆனது. அவருக்கு பலர் தங்களுடைய திருமண வாழ்த்துகளை தெரிவித்த நிலையில், இந்த நிகழ்வில் கலந்து கொண்ட விஜயின் மேனஜரும், தயாரிப்பாளருமான ஜெகதீஷ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கீர்த்தி சுரேஷ் குறித்து எமோஷனலாக பதிவிட்டு இருக்கிறார்.
விஜயின் மேனஜர் பதிவு
அதில் அவர் பதிவிட்டுள்ளதாவது, ‘கடந்த 2015ம் ஆண்டு நானும், கீர்த்தியும் ஒருவரையொருவர் எவ்வளவு வெறுக்க முடியுமோ, அவ்வளவு வெறுத்துக்கொண்டிருந்தோம். ஆனால், இப்போது அண்ணன் - தங்கையாக மாறியிருக்கிறோம். கீர்த்தி, நீ என்னுடைய வாழ்க்கையின் மிக முக்கிய அங்கமாகி விட்டாய். கடந்த 10 வருடங்களுக்கு முன்னதாக உன்னுடைய கல்யாணம் சம்பந்தமாக பேசி திட்டமிட்டது, இப்போதும் எனக்கு நன்றாக நியாபகம் இருக்கிறது.
கடந்த 10 வருடங்களாக நாம் கண்ட கனவு தற்போது பலித்திருக்கிறது. என்னை விட்டால் யார் இந்த கல்யாணத்தில் அவ்வளவு சந்தோஷமாக இருக்க முடியும். எனக்கு எப்போதுமே ஒரு நினைப்புண்டு. அது கீர்த்தியை திருமணம் செய்து கொள்பவர் மிகவும் அதிர்ஷ்ட சாலி என்று.. ஆனால் ஆண்டனியை பற்றி தெரிந்து கொண்ட பின்னர், நிச்சயமாக சொல்கிறேன்.. ஆண்டனியை திருமணம் செய்து கொண்டு கீர்த்திதான் அதிர்ஷ்டசாலியாக மாறியிருக்கிறார். வாழ்த்துகள்.’ என்று பதிவிட்டு இருக்கிறார்.
கல்லூரி காலத்தில் இருந்தே இவர்கள் இருவரும் பழகி வரும் நிலையில், தற்போது மணமக்கள் ஆக இருக்கிறார்கள். திருமணத்துக்கு பின்பு கீர்த்தி படங்களில் நடிப்பாரா அல்லது கணவருடன் பிஸினஸ் என்று பிஸியாகி விடுவாரா என்பது குறித்து தகவல் எதுவும் தெரியவில்லை. 2024ஆம் ஆண்டு நிறைவடைய இருக்கும் தருவாயில், ஸ்டார் தம்பதிகளாக மாறியிருக்கிறது கீர்த்தி - ஆண்டனி ஜோடி.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்