Thalapathy Vijay: ‘உன் ரத்தம் என் ரத்தம் வேறேயில்லை.. ’செல்ஃபி வீடியோ எடுத்த விஜய்.. விண்ணை பிளந்த ரசிகர்கள் சத்தம்!
அரசு சார்பில் இருந்து உதவிகள் செய்யப்பட்டாலும், பல இடங்களில் உதவிகள் உடனடியாக கிடைக்கவில்லை என்று மக்கள் குற்றம்சாட்டினர்.
நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் கடந்த 17,18 ஆகிய தேதிகளில் வரலாறு காணாத கனமழை பெய்தது. எதிர்பாராத அளவிற்கு பெய்த இந்த மழையால், நீர் நிலைகளில் நீர் பெருக்கெடுத்தது.
அதன் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தினால், தாழ்வான பகுதிகளில் இருந்த வீடுகளில் வெள்ளநீர் புகுந்தது. இதனால் அங்கு வசித்த மக்கள் உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கிடைக்காமல் சிரமப்பட்டனர்.
அரசு சார்பில் இருந்து உதவிகள் செய்யப்பட்டாலும், பல இடங்களில் உதவிகள் உடனடியாக கிடைக்கவில்லை என்று மக்கள் குற்றம்சாட்டினர்.
அரசு மட்டுமல்லாமல் இதர கட்சி நிர்வாகிகளும் அங்குள்ள மக்களை நேரில் சந்தித்து உதவிகளை செய்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் விஜய் இன்றைய தினம் நெல்லை மாவட்டத்திற்கு வருகை தந்து, உதவிகளை செய்தார்.
நெல்லை கேடிசி நகரில் உள்ள மாதா மாளிகையில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. அங்கு வந்திருந்த மக்களுக்கு உதவி பொருட்களை வழங்கிய விஜய் அங்குள்ள சிறியவர்கள், பெரியவர்கள் என அனைவருடனும் செல்ஃபி எடுத்தார். இதனால் அங்கிருந்த மக்கள் மகிழ்ச்சி கடலில் மூழ்கினர். இறுதியாக அங்கிருந்த தன்னுடைய ரசிகர்களுடன் ஒரு செல்ஃபி வீடியோவும் எடுத்துக்கொண்டார். இந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது!
முன்னதாக, தமிழ் சினிமாவின் நட்சத்திர நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் அடுத்ததாக முழு நேர அரசியலில் ஈடுபட போவதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. அந்த தகவலை உறுதிபடுத்தும் வகையில், அவரது கட்டளைக்கு இணங்க, விஜய் மக்கள் இயக்கத்தினர் அம்பேத்கர், பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவித்தனர்.
அதனைத்தொடர்ந்து நடிகர் விஜய் 234 தொகுதிகளிலும் 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகளில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு பொருட்கள் மற்றும் காசோலையை வழங்கினார். இது தமிழகத்தையே திரும்பி பார்க்க வைத்தது. இதனைதொடர்ந்து குழந்தைகளுக்கு மாலை நேர வகுப்புகள், நூலகம் என அடுத்தடுத்த திட்டங்களை செயல்படுத்தினார். தற்போது வெள்ள பாதிப்பால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி பொருட்களை வழங்கி இருக்கிறார். அண்மையில் நடந்த லியோ திரைப்பட வெற்றி விழாவில், விஜய் தான் அரசியலுக்கு வருவதை மறைமுகமாக உறுதிபடுத்தியது குறிப்பிடத்தக்கது!
டாபிக்ஸ்