GOAT Second look: மிரட்டும் விஜய்.. சொன்னதை காப்பாற்றுவாரா வெங்கட் பிரபு? அதகளப்படுத்தும் இரண்டாவது போஸ்டர் இங்கே!
அதன் படி படத்திற்கு கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என பெயர் வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இந்த நிலையில் தற்போது தளபதி 68 படத்தின் இரண்டாவது போஸ்டர் வெளியாகி இருக்கிறது.
இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வருவது அனைவரும் அறிந்ததே. இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்த நிலையில், அடுத்ததாக தாய்லாந்து மற்றும் துருக்கியில் படப்பிடிப்பு நடக்க படக்குழு திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது
இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் புத்தாண்டையொட்டி வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. சொன்ன படியே புத்தாண்டு தினம் சிறப்பு பரிசாக நேற்றைய தினம் சரியாக மாலை 6 மணிக்கு விஜயின் 68 வது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் வெளியிடப்பட்டது.
அதன் படி படத்திற்கு கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என பெயர் வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இந்த நிலையில் தற்போது தளபதி 68 படத்தின் இரண்டாவது போஸ்டர் வெளியாகி இருக்கிறது.
முன்னதாக, ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் நடித்து 2019- ல் வெளியான ஜெமினி மேன் என்ற ஹாலிவுட் படத்தின் கதையை அடிப்படையாக வைத்து தளபதி விஜய்யின் தி கிரேடட்ஸ்ட் ஆஃப் ஆல் டைம் உருவாகி வருவதாக கூறப்படுகிறது.
ஜெமினி மேன் படத்தில் வில் ஸ்மித் மூன்று ரோலில் நடித்திருப்பார். அப்படியானால் விஜய்க்கு இந்த படத்தில் மூன்று ரோல் இருக்கலாம் எனவும், மற்றொரு கதாபாத்திரத்தை சஸ்பென்ஸாக வைத்திருப்பார்கள் எனவும் பேச்சு அடிபடுகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
டாபிக்ஸ்