Serial TRP: டிஆர்பி.,யில் முன்னிலை பெற்ற சீரியல் எது? கடந்த வாரம் எந்த சேனல் கரம் ஓங்கியது?
Serial TRP: கடந்த வாரம் தமிழ் சீரியல் பெற்ற புள்ளிகளும், எந்த சீரியல்களுக்கு இடையே போட்டி நிலவியதும் என்பதையும் இப்போது காணலாம்.

Serial TRP: டிஆர்பி.,யில் முன்னிலை பெற்ற சீரியல் எது? கடந்த வாரம் எந்த சேனல் கரம் ஓங்கியது?
Serials TRP: தமிழ் மக்களுக்கும், சீரியலுக்கு ஒரு பெரிய பந்தம் இருக்கிறது. அந்த இரண்டையும் யாராலும் பிரிக்க முடியாது. காலை ஆரம்பித்து இரவு வரை சீரியல் தொடர்ந்து பல வீடுகளில் ஒடுகிறது. கடந்த வாரம் தமிழ் சீரியல் பெற்ற புள்ளிகளும் அவற்றின் இடங்களும் இதோ:
1.கயல்
சன் தொலைக்காட்சியில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகும் சீரியல், கயல். அக்டோபர் 25, 2021 ஆம் ஆண்டு முதல் தொடங்கிய இந்த தொடர் தற்போது வரை வெற்றிகரமாக நடந்து வருகிறது. தந்தையை இழந்து குடும்பத்தின் மொத்த பொறுப்புகளையும் கயல் சுமக்கிறார்.
அவர் செய்யும் செயல்களுக்கு பல்வேறு தடைகளை ஏழுகிறது. அதை எல்லாம் தாண்டி பிரச்னைகளை எப்படி சமாளிக்கிறார் என்பதே கதை. கயல் சீரியல், 8.91 புள்ளிகளுடன் டிஆர்பியில் முதல் இடத்தில் இருக்கிறது.