தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  21 Years Of Punnagai Poove: இரு தோழிகள், ஒரு காதல்! நட்பு, துரோகம் இடையிலான உணர்ச்சி போராட்டமாக புன்னகை பூவே

21 Years of Punnagai Poove: இரு தோழிகள், ஒரு காதல்! நட்பு, துரோகம் இடையிலான உணர்ச்சி போராட்டமாக புன்னகை பூவே

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Apr 25, 2024 05:15 AM IST

ஒருவர் மீது தோழிகள் இருவருக்கும் வரும் காதலை மையப்படுத்திய முக்கோண காதல் கதையாக புன்னகை பூவே திரைப்படம் உருவாகியிருக்கும். பெரிய ஸ்டார்கள் நடிக்காத போதிலும் தமிழில் வெளிவந்த காதல் படங்களில் இது முக்கியத்துவமான படமாக இருக்கிறது.

புன்னகை பூவே படத்தில் ரேகா, நந்தா, காவேரி
புன்னகை பூவே படத்தில் ரேகா, நந்தா, காவேரி

ட்ரெண்டிங் செய்திகள்

வித்தியாசமான முக்கோண காதல்

சிறு வயதில் இருந்தே தோழிகளாக ரேகா, காவேரி இருந்து வருகிறார்கள். நந்தாவை ஒரு தலையாக காதலிக்கிறாள் ரேகா. இந்த விஷயம் தெரிந்தும் சில சந்தர்பங்களால் நந்தாவை மீது காவேரிக்கும் காதல் வருகிறது. நந்தாவும், காவேரியை காதலிக்கிறார். இறுதியில் யாருடை காதல் சேர்ந்தது என்பதை நட்பு, காதல், துரோகம் ஆகிய விஷயங்களை முன்னிலைபடுத்திய கதையம்சத்தில் உருவாக்கியிருப்பார்கள். பரதன், சுந்தரபுருஷன், விஐபி படங்களை இயக்கிய சபாபதி இந்த படத்தை இயக்கியிருப்பார். தமிழ் சினிமாவில் பல்வேறு படங்கள் வில்லன், குணச்சித்திர வேடங்களில் நடித்தவரும், இயக்குநருமான ஆர்.என்.ஆர். மனோகர் படத்துக்கு திரைக்கதை எழுதியிருப்பார். கலைப்புலி தாணு படத்தை தயாரித்திருப்பார். 

காதலை பற்றி ஏராளமான கதைகள் தமிழில் வெளிவந்திருந்தாலும் இரண்டு பெண் தோழிகள் ஒரே ஆண் மீது காதல் வயப்படுவது அதனால் ஏற்படும் சிக்கல்களை கூறும் விதமாக சொன்ன விதத்தில் வித்தியாசமான படமாக புன்னகை பூவே இருந்தது. காதல் பற்றிய படம் என்பதால் படத்தில் பல்வேறு பளிச் வசனங்கள் ரசிக்கும் விதமாக அமைந்திருக்கும்.

கேமியோ கதாபாத்திரத்தில் யுவன்

புன்னகை பூவே படம் ரசிகர்களை வெகுவாக கவர மற்றொரு காரணமாக இருந்தது யுவன் ஷங்கர் ராஜாவின் இசை இருந்தது. படத்தில் இடம்பிடித்த அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட்டாகின. குறிப்பாக வீனஸ் வீனஸ் பெண்னே என்ற பாடல் பட்டி தொட்டியெங்கும் ஒலித்தது. அதேபோல் என் காதல் என்ற பாடலில் யுவன் முதல் முறையாக கேமியோ கதாபாத்திரத்தில் தோன்றியிருப்பார். அவரது பிரேம்ஜி அமரனும் ராப் வாரிகள் பாடி பாடலின் காட்சியிலும் தோன்றுவார். படத்தில் இடம்பிடித்திருக்கும் அனைத்து பாடல்களின் காட்சி அமைப்பும் ரசிக்கும் விதமாக இருக்கும்.

படத்தில் மற்றொரு கேமியோ கதாபாத்திரத்தில் கமல்ஹாசனின் முன்னாள் மனைவி சரிகா, இது இன்னிசையா என்ற பாடலில் தோன்றியிருப்பார்.

வசூலில் குறை வைக்காத புன்னகை பூவே

மெளனம் பேசியதே படத்துக்கு பின் நந்தா சோலோ ஹீரோவாக இந்த படத்தில் தான் முதல் முறையாக நடித்தார். பெரிய நடிகர்கள் யாரும் இல்லாத போதிலும் அழுத்தமான திரைக்கதையாலும், பாடல்களாலும் படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அத்துடன் பாக்ஸ் ஆபிஸ் வசூலிலும் பெரிய குறையை வைக்காமல் சராசரி வசூலை பெற்றது.

ஆண் மீது இரு தோழிகளுக்கு ஏற்படும் காதலை முக்கோண காதல் கதையாக சொன்ன புன்னகை பூவே வெளியாகி இன்றுடன் 21 ஆண்டுகள் ஆகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்