தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Tamil Nadu Theater Owners Association Said They Are Going To Close The Theaters

Cinema: ’தியேட்டர்களை இழுத்து மூடுவோம்!’ தியேட்டர் உரிமையாளர்கள் எச்சரிக்கை!

Kathiravan V HT Tamil
Feb 20, 2024 03:25 PM IST

”திரையரங்குகளில் கிரிக்கெட் நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப அனுமதி தர வேண்டும்”

தமிழ்நாடு திரையரங்கு மற்றும் மல்டி பிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் திருப்பூர் சுப்பிரமணியன் பேட்டி
தமிழ்நாடு திரையரங்கு மற்றும் மல்டி பிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் திருப்பூர் சுப்பிரமணியன் பேட்டி

ட்ரெண்டிங் செய்திகள்

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தின் திருப்பூர் சுப்பிரமணியம் கூறுகையில், சிறிய பட்ஜெட் படங்களுக்கு குறைந்த கட்டணத்தில் டிக்கெட் விலை நிர்ணயம் செய்வது குறித்து ஆலோசனை செய்யப்படுகிறது. 

திரையரங்குகளில் கிரிக்கெட் நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப அனுமதி தர வேண்டும். சிறிய திரைப்படங்களுக்கு தியேட்டர்கள் தர தயாராக உள்ளோம், ஆனால் மக்கள் வருகை குறைவாக உள்ளது. நடிகர்கள் யார் என்று தெரியாத படங்களை பார்க்க மக்கள் விரும்பவில்லை. 

சிறிய படங்கள் முன் அனுபவம் இன்றி, வீக் கண்டெண்டுடன் வருகிறது. அதனை பார்க்க மக்கள் விரும்புவதில்லை. பிரபல நடிகர்கள் இருந்தால்தான் தியேட்டர்களுக்கு வர வேண்டும் என்று மக்கள் நினைக்கிறார்கள். சிறுபடங்களுக்கு நியாமான கட்டணத்தை கட்டாயம் நிர்ணயம் செய்வோம். 

திரையரங்குகளில் வெளியாகும் படங்களுக்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்தே ஓடிடி திரைப்படங்களை வாங்குகின்றனர். 

99 சதவீத தியேட்டர்களில் ஆன்லைனில்தான் டிக்கெட்களை விற்பனை செய்கிறோம். இனி ஆயிரம் ரூபாய்க்கு டிக்கெட் விற்றால் ரசிகர்கள் வேண்டுமானால் ஒரு ஷோவுக்கு வரலாம், அதற்கு மேல் மக்கள் யாரும் வரமாட்டார்கள். 

தியேட்டர் லைசன்ஸ் ரினிவல் தேதியை 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை செய்து கொள்ள தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. எங்கள் கோரிக்கைகளை அரசிடம் தெரிவித்துள்ளோம். 

IPL_Entry_Point

டாபிக்ஸ்