வரிசை கட்டும் புதிய வெப் சிரீஸ்… உற்சாகத்தில் ரசிகர்கள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  வரிசை கட்டும் புதிய வெப் சிரீஸ்… உற்சாகத்தில் ரசிகர்கள்

வரிசை கட்டும் புதிய வெப் சிரீஸ்… உற்சாகத்தில் ரசிகர்கள்

Aarthi V HT Tamil
Apr 29, 2022 12:45 PM IST

அமேசான் ஃபிரைம் ஓடிடி தளத்தில் , வரிசையாக நான்கு வெப் சிரீஸ் வெளியாக உள்ளது .

<p>வரிசை கட்டும் புதிய வெப் சிரீஸ்</p>
<p>வரிசை கட்டும் புதிய வெப் சிரீஸ்</p>

இதனால் பெரிய நடிகர்கள் , நடிகைகளின் படங்கள் கூட ஓடிடி வெளியாகி வருகிறது . இதனிடையே அமேசான் ஃபிரைம் ஓடிடி தளத்தில் தமிழ் மொழியில் நான்கு புதிய தொடர்கள் வெளியாக உள்ளது . இதனை அமேசான் ஃபிரைம் ஓடிடி தளம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது .

இந்த தொடர் குறித்து விபரங்கள் இதோ .

சுழல்

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் , கதிர் , பார்த்திபன் நடிப்பில் உருவாகி இருக்கும் புதிய வெப் சீரிஸ் , ‘ சுழல் ‘ . இந்த வெப் சீரிஸின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது . ' வா குவாட்டர் கட்டிங் ' , ' ஓரம் போ ' மற்றும் ' விக்ரம் வேதா ' ஆகிய படங்களை இயக்கிய புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில் உருவாகி வருகிறது . இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர் ஜானரில் இந்த வெப் சீரிஸ் உருவாகி இருக்கிறது .

தி வில்லேஜ்

’ நெற்றிக்கண் ’ பட இயக்கினர் மிலந்த் ராவ் இயக்கும் வெப் சீரிஸ் , ‘ தி வில்லேஜ் ‘ . ஆர்யா, திவ்யா பிள்ளை, ஆடுகளம் நரேன், தலைவாச, விஜய், முத்துக்குமார், ஜான் கோகென், அர்ஜூன் சிதம்பரம் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர் . சமீபத்தில் இந்த வெப் சீரிஸின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது .

வதந்தி

‘ விக்ரம் வேதா ’ இயக்குநர்கள் புஷ்கர் - காயத்ரி நிறுவனமான வால்வாட்சர் தயாரிப்பில் உருவாகும் அடுத்த தொடர் , ‘ வதந்தி ‘ . எஸ். ஜே. சூர்யா, நாசர், லைலா, சஞ்சனா உள்ளிட்டோர் இதில் நடிக்கின்றனர் .

மாடர்ன் லவ்

இயக்குநர் பாரதிராஜா , பாலாஜி சக்திவேல் , ராஜூ முருகன் , கிருஷ்ண குமார் , ராம் குமார் , அக்சய் சுந்தர் உள்ளிட்டோர் இயக்கும் வெப் சீரிஸ், மாடர்ன் லவ் . கிஷோர், ரேஷ்மா, அசோக் செல்வன் , ரித்து வர்மா , விஜயலட்சுமி, கெளரி ரெட்டி , சம்யுக்தா விஸ்வநாதன் , வாசுதேவன் முரளி உள்ளிட்டோர் இதில் நடித்து இருக்கின்றனர் .

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.