62 Years of Thayilla Pillai: கலைஞர் கருணாநிதி எழுத்தில் அரசியல் பேசாமல் ஜாதிய பாகுபாடுக்கு எதிராக குரல் கொடுத்த படம்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  62 Years Of Thayilla Pillai: கலைஞர் கருணாநிதி எழுத்தில் அரசியல் பேசாமல் ஜாதிய பாகுபாடுக்கு எதிராக குரல் கொடுத்த படம்!

62 Years of Thayilla Pillai: கலைஞர் கருணாநிதி எழுத்தில் அரசியல் பேசாமல் ஜாதிய பாகுபாடுக்கு எதிராக குரல் கொடுத்த படம்!

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Aug 18, 2023 05:45 AM IST

திரைப்படங்களில் வெளிப்படையாக ஜாதி பெயர்களை குறிப்பிட்டு வந்த காலகட்டத்தில் இந்தியாவில் உள்ள ஜாதி அமைப்புக்கு எதிராக துணிச்சலாக பேசிய படமாக தாயில்லா பிள்ளை படம் அமைந்திருந்தது. நாகேஷ் என்னும் மகா கலைஞன் இந்த படத்தின் மூலம் தான் தனக்கான அடையாளத்தை பெற்றார்.

கலைஞர் கருணாநிதி திரைக்கதை, வசனத்தில் உருவான தாயில்லா பிள்ளை திரைப்படம்
கலைஞர் கருணாநிதி திரைக்கதை, வசனத்தில் உருவான தாயில்லா பிள்ளை திரைப்படம்

தமிழ் சினிமாக்களில் ஜாதி பெயர்களும், அவர்களின் பழக்க வழக்கங்களை நியாயப்படுத்தியும் வெளிப்படையாக காட்டி வந்த காலகட்டத்தில் இந்தியாவில் உள்ள ஜாதி அமைப்புகளுக்கு எதிராக குரல் கொடுத்த படமாக தாயில்லா பிள்ளை அமைந்திருந்தது.

பினிஷெட்டி கதைக்கு, கலைஞர் கருணாநிதி திரைக்கதை, வசனம் எழுத எல்வி பிரசாத் இந்த படத்தை இயக்கினார். கன்னட, தமிழ் சினிமாக்களில் நடித்து வந்த கல்யாண் குமார் கதையின் நாயகனாக நடித்திருப்பார். படத்தின் பிரதான கதாபாத்திரத்தில் ஜாதியை உயர்த்தி பிடிக்கும் கதாபாத்திரமாக பதஞ்சலி சாஸ்த்ரி என்ற கேரக்டரில் டி. எஸ். பாலையா தனது அற்புதமான நடிப்பில் மிரட்டியிருப்பார்.

குழந்தையை பெற்றவுடன் அதன் தாய் இறந்துபோக, அந்த குழந்தையை டி.எஸ்.பாலையாவின் மனைவியாக வரும் எம்வி ராஜம்மா எடுத்து வளர்க்கிறார். இரண்டு முறை கருகலைந்த பின்னர் மூன்றாவது முறையாக கர்ப்பம் தரிக்கும் டிஎஸ் பாலையாவின் மனைவியாக வரும் எம்வி ராஜம்மா, தனது குழந்தையை பெற்ற சமயத்தில் பிறந்தவுடன் தாயை இழந்து தவிக்கும் மற்றொரு குழந்தையும் தத்தெடுக்கிறார்.

இந்த இரண்டு குழந்தைகளில் டிஎஸ் பாலையாவுக்கு யார் தனது மகன் என குழப்பம் வர இறுதியில் அனைவரும் ஒன்று சேர்வதே படத்தின் ஒன் லைன்.

கலைஞர் கருணாநிதி கதை, திரைக்கதை, வசனம் எழுதும் படங்கள் என்றால் அப்போது அனல் தெறிக்கும் அரசியில் வசனங்களும், பகடி காட்சிகளும் தவறாமல் இடம்பிடிக்கும். ஆனால் இந்த தாயில்லா பிள்ளை அப்படி இல்லாமல் ஜாதி பகுபாடுக்கு எதிராக குரல் கொடுக்கும் விதமாக காட்சிகளுடனும், வசனங்களுடனும் அமைந்திருக்கும். குறிப்பாக தாயில்லாமல் வளரும் பிள்ளை படும் துயரத்தை எடுத்துரைப்பதாக படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கும்.

தமிழ் சினிமாவில் 1960களின் முதல் இறக்கும் தருவாய் வரை அசைக்க முடியாத காமெடியனாக இருந்து வந்த நாகேஷை ரசிகர்கள் மத்தியில் நன்கு அடையாளப்படுத்தியது இந்த படம் தான். இதற்கு முன்னர் நாகேஷ் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் தாயில்லா பிள்ளை அவருக்கு நல்ல பெயரையும், புகழையும் பெற்று தந்தது.

கண்ணதாசன், ஏ. மருதகாசி, கோத்தமங்கலம் சுப்பு ஆகியோர் பாடல் வரிகள் எழுத கேவி மகாதேவன் இசையமைப்பில் சின்ன சின்ன ஊரனியாம், காலம் மறந்து கருத்து மறந்து, கடவுளும் நானும் ஒரு ஜாதி ஆகிய பாடல்கள் கவனத்தை ஈர்த்தன.

தமிழ் சினிமாவில் தற்போது வரையிலும் ஜாதிய அடக்குமுறை, ஜாதி பாகுபாடுக்கு எதிராக படம் வந்து கொண்டிருக்கும் வேலையில், 62 ஆண்டுகளுக்கு முன்னரே அதற்கான விதையை கலைஞர் கருணாநிதி - எல்வி பிராசாத் போட்டிருக்கும் தாயில்லா பிள்ளை படம் ஆக்ஸ்ட் 18, 1961 வெளியாகி ரசிகர்களையும் கவர்ந்து சூப்பர் ஹிட்டானது. இந்த படம் 1975இல் மலையாளத்தில் பிரவாஹம் என்ற பெயரில் ரீமேக்கும் செய்யப்பட்டது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.