HBD M.Rajesh:ஒவ்வொரு பொண்ணுக்கும் ஒவ்வொரு ஃபீலிங் மச்சி - இயக்குநர் ராஜேஷுக்கு BirthDay
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Hbd M.rajesh:ஒவ்வொரு பொண்ணுக்கும் ஒவ்வொரு ஃபீலிங் மச்சி - இயக்குநர் ராஜேஷுக்கு Birthday

HBD M.Rajesh:ஒவ்வொரு பொண்ணுக்கும் ஒவ்வொரு ஃபீலிங் மச்சி - இயக்குநர் ராஜேஷுக்கு BirthDay

Marimuthu M HT Tamil
Aug 24, 2023 06:40 AM IST

தமிழ்த்திரைப்பட இயக்குநர் ராஜேஷ் பிறந்த நாள் சிறப்புப் பகிர்வு!

ராஜேஷ்
ராஜேஷ்

பிறப்பு மற்றும் படிப்பு: நாகர்கோவிலைப் பூர்வீகமாகக் கொண்ட இயக்குநர் ராஜேஷ், கோவில்பட்டியில் உள்ள நேஷனல் பொறியியல் கல்லூரியில் படித்துமுடித்துவிட்டு, மும்பையில் 6 மாதங்கள் தகவல் தொழில்நுட்பத்துறையில், பணியாற்றியுள்ளார்.

திரைத்துறை என்ட்ரி: நேரடியாக திரைத்துறையில் சேர்வதற்கு முன்பு, ஒன்றரை ஆண்டுகள், காஸ்மிக் புளூஸ் என்னும் தயாரிப்பு நிறுவனத்தில் குறும்படங்கள் மற்றும் விளம்பரங்கள் இயக்கும் தயாரிப்புப் பணியை ராஜேஷ் மேற்கொண்டார். அதன்பின், அமீரின் மெளனம் பேசியதே திரைப்படத்திலும், எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய சுக்ரன், நெஞ்சிருக்கும் வரை ஆகிய திரைப்படங்களிலும் ராஜேஷ், உதவி இயக்குநராகப் பணிபுரிந்தார். அதனைத்தொடர்ந்து அவர்களிடம் இருந்து வெளியில் வந்து சினிமா இயக்கும் முயற்சியில் ஈடுபட்டார், ராஜேஷ். அதன்பின், ராஜேஷுக்கு கிடைத்த வாய்ப்பு தான், சிவா மனசுல சக்தி, அதை நேர்த்தியாக கையாண்டு, அதை மிகவும் லாபகரமான படமாக வெளியில் கொண்டு வந்தவர் தான், ராஜேஷ்.  படத்தில் யுவனின் இசையில் அத்தனை பாடல்களும் ஹிட். ஒரு பார்வையில் பூ கொடுத்தாய் ஒரு வார்த்தையில் வாழ வைத்தாய், ஒரு கல் ஒரு கண்ணாடி உடையாமல் மோதிக்கொண்டால் காதல் ஆகிய இரு பாடல்களும் இன்றும் பலரின் பேவரைட் ரகம். இப்படத்தில் வரும் ஒவ்வொரு பொண்ணுக்கும் ஒவ்வொரு ஃபீலிங் மச்சி என்னும் வசனம், பலருக்கும் நினைத்தாலே சிரிப்புமூட்டும் ரகம். 

அடுத்து ராஜேஷ் இயக்கத்தில் வெளியான படம் தான் பாஸ் என்கிற பாஸ்கரன். பொறுப்பில்லாமல் ஊரைச் சுற்றும் இளைஞர் எவ்வாறு பொறுப்பான இளைஞராக மாறி, காதலியுடன் ஜோடி சேர்கிறார் என்பது தான், படத்தின் ஒன் லைன். இதற்கு பக்கா காமெடி அம்சங்களுடன்  திரைக்கதை எழுதி,  இப்படத்தையும் ஹிட் ஆக்கியிருப்பார், ராஜேஷ். ‘மச்சி, என் ஆளு என்ன பாடேன் சொல்லிட்டாடா, ஏங்க சத்யமா…உங்களை எப்படி கரெக்ட் பண்றதுன்னு தெரியலங்க’ என படத்தில் அங்கு அங்கு வரும் காமெடி வசனங்களை நினைத்தால் மனதில் இன்றும் சிரிப்பு வரும்.

அதன்பின்  தனது,  ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் உதயநிதி ஸ்டாலினை கதையின் நாயகனாக அறிமுகப்படுத்தி, முதல்படத்திலேயே ஹிட் கொடுக்கவைத்தவர், ராஜேஷ். அடை… தேன் அடை… என இப்படத்தில் வருவது போன்று, படம் முழுக்க காமெடியிலான ஸ்வீட் தான். 

அடுத்து, ஆல் இன் ஆல் அழகு ராஜா, வாசுவும் சரவணனும் ஒன்னா படிச்சவங்க, கடவுள் இருக்கான் குமாரு, மிஸ்டர் லோக்கல், வணக்கம்டா மாப்பிள்ளை ஆகிய இவரது இயக்கத்தில் வெளிவந்த படங்கள் ஆவரேஜ்ஜான படங்களாக அமைந்துவிட்டன. சிறந்த கம்பேக் உடன் ராஜேஷ் மீண்டு(ம்) வருவார்.

பலரை மனநோயாளிகளாக ஆகவிடாமல் சிரிக்க வைத்த இயக்குநர் ராஜேஷுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்! 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

Google News: https://bit.ly/3onGqm9

 

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.