29 Years of Seevalaperi Pandi: தென் தமிழகத்தின் முதல் என்கவுன்ட்டர் - தமிழ் சினிமாவில் ஒரு க்ரைம் Biopic
மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி நடிப்பதாக இருந்து பின்னர் நெப்போலியன் அந்த கதாபாத்திரத்தில் நடித்து அவரது சினிமா வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்திய படமாக அமைந்தது.
தமிழ் சினிமாவில் புத்தகங்களில் வந்த கதைகள் படமாக மாறியதில் ஒன்றாக சீவலப்பேரி பாண்டி உள்ளது. பிரபல வார இதழில் எழுத்தாளர் செளபா என்கிற செளந்திர பாண்டியன் எழுதிய சீவலப்பேரி பாண்டி என்கிற தொடர்கதை அதே பெயரில் படமாக இயக்கினார் நடிகரும், இயக்குநருமான பிரதாப் போத்தன்.
உண்மை கதையை சினிமாவுக்கு ஏற்ப திரைக்கதையாக்கினார் இயக்குநர் கே. ராஜேஷ்வர். இதற்காக இந்த கதை நடந்ததாக சொல்லப்பட்ட திருநெல்வேலி பகுதிகளுக்கு சென்று பல்வேறு தகவல்களை சேகரித்துள்ளார்.
சீவலப்பேரி பாண்டியின் உண்மை கதை தூரேகங்களால் சூழ்ந்ததாக அமைந்திருக்கும். முதலில் தனது முதலாளி, பின்னர் நண்பர்கள் என இருந்த அவரது வாழ்க்கையின் முக்கிய அம்சத்தையும், காதல், காமெடி, ஆக்ஷன் போன்ற மசாலா அம்சங்ளையும் வைத்து இந்த படத்தை உருவாக்கியிருப்பார்கள்.
இந்த படத்தில் முதலில் மம்முட்டி நடிப்பதாக இருந்தது. ஆனால் கால்ஷீட் பிரச்னையால் அவர் வெளியேறியதாக கூறப்பட்ட நிலையில் அப்போது வளர்ந்து வரும் நடிகராக இருந்த நெப்போலியன் சீவலப்பேரி பாண்டியாக நடித்தார். அவரது உயரமான, கட்டுமஸ்தான தோற்றம் அப்படியே கேரக்டருக்கு மிகவும் பொருத்தமாக அமைந்தது போனது.
உண்மை கதையுடன் ஏரளாமான கற்பனை அம்சங்களும் சேர்ந்து உருவான இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இருந்தபோதிலும் நிஜமாக நடந்த சம்பவத்தை படமாக்கியதால் தென் தமிழக பகுதில் இந்தப் படம் பட்டையை கிளப்பியது.
நெப்போலியன் சினிமா வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்திய சீவலப்பேரி பாண்டி வெளியாகி இன்றுடன் 29 ஆண்டுகள் ஆகிறது.
டாபிக்ஸ்