"அன்பு பொங்கட்டும் மகிழ்ச்சி நிறையட்டும்" ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்து கூறிய பிரபலங்கள்..
சினிமா மற்றும் அரசியல் பிரபலங்கள் பலரும் தங்களது ரசிகர்களுக்கும் தொண்டர்களுக்கும் தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்திய மக்கள் அனைவரும் இன்று தீபாவளி பண்டிகையை மிகவும் சிறப்பாக கொண்டாடி வருகின்ரனர். காலை முதலே நீராடி புத்தாடை உடுத்து, பலகாரங்கள் உண்டு, பட்டாசு வெடித்து மக்கள் தீபாவளியை கொண்டாடி வருகின்றனர். இந்த கொண்டாட்ட சமயத்தில் தங்களுக்கு நெருக்கமானவர்களுக்கு வாழ்த்துகளையும் இனிப்புகளையும் பகிர்ந்து மகிழ்ச்சியை மேலும் அதிகரித்து வருகின்றனர்.
அந்த வகையில், சினிமா பிரபலங்களும், அரசியல் பிரபலங்களும் இன்று மக்களுக்கு தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
ரஜினிகாந்த் தீபாவளி வாழ்த்து
அதன்படி, நடிகர் ரஜினி காந்த், வழக்கம் போல தனது வீட்டின் முன் குவிந்துள்ள மக்களை சந்தித்து அவர்களுக்கு தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்தார். அத்தோடு செய்தியாளர்களை சந்தித்த அவர், " அனைவருக்கும் என்னுடைய தீபாவளி நல்வாழ்த்துக்கள். எல்லோரும் மகிழ்ச்சியாக, ஆரோக்கியமாக, சந்தோஷமாக இருக்க வேண்டும்." என தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார்.