Tamil Actress Rekha: ‘எல்லாம் ஹார்மோன் பார்த்த வேலை..பிளேபாயாய் சுத்திக்கிட்டு’ - ஓப்பனாக பேசிய சத்யராஜ்-tamil actress rekha and sathyaraj latest interview about this generation love sharing his love stories - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Tamil Actress Rekha: ‘எல்லாம் ஹார்மோன் பார்த்த வேலை..பிளேபாயாய் சுத்திக்கிட்டு’ - ஓப்பனாக பேசிய சத்யராஜ்

Tamil Actress Rekha: ‘எல்லாம் ஹார்மோன் பார்த்த வேலை..பிளேபாயாய் சுத்திக்கிட்டு’ - ஓப்பனாக பேசிய சத்யராஜ்

Kalyani Pandiyan S HT Tamil
Aug 20, 2024 06:30 AM IST

Tamil Actress Rekha: அப்போதெல்லாம் ஒரு பெண்ணுக்கு நம்மை பிடிக்கிறது என்றால், அவரிடம் நமக்கும் அவர் மீது விருப்பம் இருக்கிறது என்று சொல்லி, அடுத்த கட்டத்திற்கு காதலை கொண்டு செல்வது என்பது மிகப்பெரிய குதிரை கொம்பு. - சத்யராஜ் பேட்டி!

Tamil Actress Rekha: ‘எல்லாம் ஹார்மோன் பார்த்த வேலை..பிளேபாயாய் சுத்திக்கிட்டு’ - ஓப்பனாக பேசிய சத்யராஜ்
Tamil Actress Rekha: ‘எல்லாம் ஹார்மோன் பார்த்த வேலை..பிளேபாயாய் சுத்திக்கிட்டு’ - ஓப்பனாக பேசிய சத்யராஜ்

ஹார்மோன் சரியாக வேலை செய்யவில்லை

அந்த பேட்டியில் சத்யராஜ் பேசும் பொழுது, “நான் கல்லூரியில் மிகப்பெரிய பிளேபாயாக தான் இருந்தேன். அப்படி இல்லை என்றால், ஹார்மோன் சரியாக வேலை செய்யவில்லை என்றுதானே அர்த்தம். இந்த காலத்தில் எல்லோரும் செல்போன் மூலம் கடலை போட்டுக் கொள்கிறார்கள். 

ஆனால், அந்த காலத்தில் அப்படியெல்லாம் இல்லை ஒருவரையொருவர் தொடர்பு கொள்வது என்பது மிக மிக அரிதாக இருந்தது. கஷ்டமாக இருந்தது. அதனால் நாங்களே எங்களுக்குள்ளேயே கற்பனையிலேயே வண்டி ஓட்டிக் கொண்டிருப்போம். அப்போதெல்லாம் ஒரு பெண்ணுக்கு நம்மை பிடிக்கிறது என்றால், அவரிடம் நமக்கும் அவர் மீது விருப்பம் இருக்கிறது என்று சொல்லி, அடுத்த கட்டத்திற்கு காதலை கொண்டு செல்வது என்பது மிகப்பெரிய குதிரை கொம்பு. அந்த காலத்தில் எல்லாம் கடுமையாக உழைத்தால் மட்டுமே ஒரு பெண் நமக்காக கிடைப்பாள்” என்று பேசினார். 

பர்ஃபெக்ட்டான கணவர் என்று யாரையும் சொல்ல முடியாது 

நடிகை ரேகா பேசும் போது, “இங்கு பர்ஃபெக்ட்டான கணவர் என்றும் யாரையுமே சொல்ல முடியாது. ஏதாவது ஒரு குறை நிச்சயமாக அவரிடத்தில் இருக்கும். மிகவும் பர்ஃபெக்ட்டான கணவர் கிடைப்பது என்பது ஆயிரத்தில் ஒருவருக்கு, லட்சத்தில் ஒருவருக்கு  கிடைக்கலாம். யாரும் யாரையும் இங்கு எடை போட முடியாது. 

அதேபோல நாமும் எக்கச்சக்க எதிர்பார்ப்புடன் இருந்து விடவும் கூடாது. அனுசரித்து, குறைகளை ஏற்றுக் கொண்டு செல்லும் பொழுது மட்டுமே, அந்த உறவு நீடித்து நிற்கும். அது ஒரு கடல் அலை போல, அப்படித்தான் அந்த உறவு அமையும். எனக்கு இப்படித்தான் கணவர் வேண்டுமென்று நீங்கள் எதிர்பார்க்கலாம். 

ஆனால் உங்களுக்கென்று எழுதப்பட்டது தான் உங்களுக்கு கிடைக்கும். இந்த விஷயத்தில் நான் மிகவும் லக்கி என்று நிறைய பேர் சொல்லி இருக்கிறார்கள். காரணம் என்னவென்றால் என்னுடைய கணவர் என்னுடைய தொழில் சார்ந்த முடிவுகள் உள்ளிட்டவற்றில் தலையிட மாட்டார். அவர் உண்டு; அவரது தொழில் உண்டு என்று அவர் அவரது வேலையை மட்டும் கவனித்துக் கொண்டிருப்பார். சத்யராஜுக்கும் அதேபோலத்தான் அவரது மனைவி தொழில் சார்ந்த முடிவுகளில் இருந்து விலகி அனுசரித்துச் சென்றிருக்கிறார். அதனால்தான் அவரால் இப்படி வேலை செய்ய முடிகிறது. ” என்று பேசினார். 

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.